Aran Sei

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

மூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டே இட ஒதுக்கீடு பிரிக்கப்படாத சாதித் தரவுகளைச் சேகரிக்க அரசியல் விருப்பத்தின் தேவை பற்றியும், ஏன் துணை ஒதுக்கீடுகள் சாதகமான படியாக இருக்கும் என்பது பற்றியும் விவாதிக்கிறார்.

கிறித்துவர், இஸ்லாமிய தலித்துகளை பட்டியலினப் பிரிவினராக அங்கீகரித்து அடையாளம் காண வேண்டும் என 1950 லேயே அரசியலமைப்புச் சட்டம் (பட்டியலினச் சாதியினர்)  நிறைவேற்றிய பிறகும் கடந்த எழுபது ஆண்டுகளாக அவர்கள் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்துக்களுக்கு மட்டுமேசாதிய அடையாளம் இருந்த போதும் பின்னர் அது சீக்கியர்களுக்கும்(1956) புத்தமதத்தினருக்கும்(1990) நீட்டிக்கப்பட்டது.

ஜனவரி 2020 ல் தேசிய தலித் கிறித்துவர்கள் குழு என்ற தனியார் அமைப்பு, இட ஒதுக்கீட்டை “மத நடுநிலைமைக்கு” கொண்டு வர வேண்டும் என்றும் அதனால் தலித் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் அதன் பலனைப் பெற முடியும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று அது அதன் கோரிக்கையை பரிசீலனைச் செய்வதாக ஒப்புக் கொண்டது. அந்த மனு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்காத ஒன்றிய அரசு – உச்சநீதி மன்றத்தின் உத்தரவு என்ன ஆனது?

“இந்தச் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்” என்று இந்தியா ஸ்பென்ட் இதழுக்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில் சமூகவியலாளர் தேஷ்பாண்டே கூறியுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேஷ் பாண்டே கடந்த முப்பதாண்டுகளாக  சாதி மற்றும் சாதிய வேறுபாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் என்பதுடன் ‘சாதிப் பிரச்சனைகள்’ என்ற நூல் உட்பட வேறு மூன்று புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

“தலித் இஸ்லாமியர்களையும், தலித் கிறித்துவர்களையும் பட்டியலினப் பிரிவில் சேர்ப்பதற்கான‌ ஒரு வலுவான நிலை உள்ளது என்பது சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையம் 2008 ல் கொடுத்துள்ள அறிக்கையின் முடிவு.  தேஷ் பாண்டே அந்த அறிக்கையின் முன்னணி ஆசிரியராக இருந்தார்.வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த தலித்துகளில் நகர்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 47% பேர் தலித் முஸ்லீம்கள் என 2004-05 ம் ஆண்டு தரவு ஒன்று கூறுகிறது. இது இந்து தலித்துகள் மற்றும் தலித் கிறித்துவர்களை விட கணிசமாக அதிக விழுக்காடு ஆகும். கிராமப்புற இந்தியாவில், 40% தலித் முஸ்லீம்களும், 30% தலித் கிறித்துவர்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.

குடிமைப் பணித் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோரை விட மிகக் குறந்த மதிப்பெண்ணில் தேர்வாகும் முன்னேறிய வகுப்பினர் – கேள்விக் குறியாகிறதா சமூகநீதி?

பல்வேறு சாதிக் குழுக்கள் பற்றிய குறைவான  தகவல்கள் தகவலறிந்த கொள்கை மற்றும் நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளை துணை வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இவர்களுக்குள் விளிம்பு நிலையில் இருக்கும் மேலும் அதிகமானவர்கள் மேலும் அதிக நலன்களைப் பெற முடியும் என்கிறார் தேஷ்பாண்டே. பட்டியலின மற்றும் பழங்குடியினரை துணை வகைப்படுத்துவது குறித்த தனது முடிவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்கிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு “அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமற்றது” என்று தேஷ்பாண்டே எச்சரிக்கிறார். ஏனெனில் இந்த அடையாளம் அடிப்படையில் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டது மற்றும்  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள சாதிக் குழுக்களை விலக்கிவிட்டு உயர்சாதியினருக்கான ஒதுக்கீடாக அமைகிறது.

தேஷ்பாண்டேவின் நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

தலித் கிறித்துவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களை பட்டியலினத்தவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏன் இது மறுக்கப்படுகிறது?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்பது சட்டபூர்வ நிலைப்பாடு. குறிப்பிடப்படாத அரசியல் நிலைப்பாடு என்னவென்றால், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த (மதம்- நடுநிலை சாதி அடையாளம்) கருத்திற்கு விரோதமாக இருந்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்த எங்களுடைய 2008 ம் ஆண்டு அறிக்கை, தலித் கிறித்துவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து போதுமான சமூக அறிவியல் சான்றுகள் உள்ளன என்று முடிவு செய்தது. பொருளாதார தரவுகள் அவர்கள் அவர்களுடைய சமூகத்தின் மற்ற பிரிவினரை விட மோசமாக இருப்பதைக் காட்டுகின்றன. அவர்கள் ஏழை அல்லது பின்தங்கியவர்களிடையே  அதிக பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். வறுமை மற்றும் வாய்ப்பின்மையால் வழக்கமான அளவீட்டின்படி சலுகைப் பெற்ற பிரிவினரில் அவர்கள் குறைவாக பிரதிநிதித்துவம் பெறுகின்றனர்.

’வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளேன்’ – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

தற்போதைய நிலை சீரற்றது மற்றும் நியாயமற்றது. இந்து அல்லாத மதங்கள் எனத் தனியாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களாக  இருந்த போதும் புத்த மதத்தினரும், சீக்கிய மதத்தினரும் இட ஒதுக்கீட்டைப் பெற மதம் தடையாக இல்லாத போது,  கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏன் இட ஒதுக்கீடு தரப்படக் கூடாது? அவர்கள் ‘இந்திய மதமாக ( indic religion) இல்லாத காரணத்தால் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது அறிவுக்கு உகந்ததாக இல்லை. ஏனெனில் அந்த இரு மதங்களும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி உள்ளன. தலித் இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களின் வாக்காளர் தொகுப்பு தேர்தலின் போது கவனிக்கப்பட வேண்டிய அளவு போதுமான வலிமையுடனோ அல்லது பெரிதாகவோ இல்லை. இந்தச் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

இது எவ்வாறு அந்த சமூகங்களைப் பாதிக்கிறது?

சாதி வேறுபாட்டில் “தீண்டத்தக்கவர்” மற்றும் “தீண்டத்தகாதவர்” என பிரிக்கும் கோடு  தொடர்ந்து வலுவாக உள்ளது. விளிம்புநிலை சாதிகளை இந்தச் சமூகத்தில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்காததால், அவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையும் இல்லை‌. வட இந்தியாவில் மதம் மாறிய தலித்துகளின் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, எப்போதும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே உள்ளனர். உயர்சாதிகளில் மதம் மாறுவது மிகவும் அரிதாகவே உள்ளது. தெற்கில், தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மத மாற்றம் மிக அதிக அளவில் உள்ளது. ஆனால் உயர்சாதிகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளது.

வடகிழக்கு இந்தியா இதில் ஒரு சிறப்பு தன்மை வாய்ந்தது. கிறித்துவர்கள் மிக அதிகமாக உள்ள நாகாலாந்து மற்றும் மிசோரம் போன்ற சில மாநிலங்களில் பெருமளவில்  பழங்குடியினர் மாநிலமாகவே இருந்த போதும் சாதிய அடையாளம் அங்கு அவ்வளவு முக்கியமாக இல்லை.  இந்தியாவில்(பெரும்பாலான பகுதிகளில்) தலித் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தனித்தனியாக தேவாலயங்கள்/ மசூதிகள் மற்றும் உடல் அடக்கம் செய்யும் இடங்களை கட்டாயமாக ஏற்றுள்ளனர். தேவாலயங்களுக்கிடையிலான பல போராட்டங்களும் நடந்துள்ளன. நீண்ட காலமாக சாதிப்பிரிவினைகளை ஏற்க மறுத்து வந்த கத்தோலிக்க தேவாலயங்களும், பிற பிரிவினரும் தற்போது அதனை அங்கீகரித்துள்ளனர். கிறித்துவர்களிடையே அது ( தலித் கிறித்துவர்கள் என்ற அடையாளம்) முன்பு போல் இப்போது அடக்கப்படுவது இல்லை.

நீட் தேர்வு: தமிழ்நாடு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டதா? – உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் வி. கடார்கி

இஸ்லாமியர்களில் தலித்துகள் ஒரு மிகச் சிறிய பகுதிதான். தற்காலத்தில் விரிவாக இஸ்லாமியர் என்ற அடையாளமே மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் உள்வேறுபாடுகள் அதன் கூர்மையை இழந்து விட்டன. இந்தியாவில் வகுப்புகள் கூட  மதங்களைத் தாண்டி நம்பிக்கையான பாதுகாப்பாக இருந்த நிலையில், இனி மேலும் இஸ்லாமியர்களை பாதுகாக்காது. இஸ்லாமியர்களின் பெரும்பாலானோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்குள் சமத்துவமின்மை மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கிறித்துவர்களுக்கிடையே அவர்களில்  சில பிரிவினர் பணக்காரர்களாக இருப்பதால் இந்த சமத்துவமின்மை அதிகமாக உள்ளது.

பல சட்ட விரோத செயல்களைப் போலவே, சாதிய பாகுபாடு காட்டும்  குற்றம் பற்றிய ஆதாரங்களை கணக்கீடு மூலம் சேகரிப்பது கடினம். ஏனெனில் மக்கள் அதனை அரிதாகவே ஒப்புக் கொள்கின்றனர். எனவே சாதி பாகுபாடு குறித்த ஆதாரங்கள், மொத்த மக்கள் தொகையில் அவரவர் பங்கை ஒப்பிடும் போது சாதிக் குழுக்களின் குறைவான அல்லது அதிக பிரதிநிதித்துவம் போலவே இதுவும் அனுமானமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தேசிய மாதிரி கணக்கீடு  மூலம் சேகரிக்கப்பட்ட நுகர்வு செலவு குறித்த தரவு (அரிதான விதிவிலக்குடன்) மதம், பகுதி, தொழில், கல்வி மட்டம் இன்ன பிற  காரணிகள் ஒரே மாதிரியாக இருந்த போதும், தலித்துகளின் சராசரி நுகர்வு மற்ற சாதியினரை விடத் தொடர்ந்து குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி தரவுகள் கணக்கிடப்படவில்லை. அதனை எவ்வாறு சரியாக சேகரிக்க முடியும்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு (பொது பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம்) கணிசமான வல்லமையைக் பெற்றுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் பெரும்பாலான தரவுகள் சிக்கலானவை. எடுத்துக்காட்டாக, தொழில் குறித்த தரவு. இருந்தாலும் அது முறைபடுத்தப்பட்டு பயனுடையதாக மாற்றப்பட்டுள்ளது. மதம் மற்றும் மொழி பற்றிய தரவுகளும் கூட சிக்கலானவைதான். அவை கூட முறைபடுத்தப்பட்டு பயனுள்ள தரவுகளாக மாற்றப்படுகின்றன. இதைப்போலவே சாதி குறித்த தேர்வுக்கும் செய்ய முடியும். நாம் ஒத்த சொற்களை (சாதிப் பெயருக்கு) சேகரித்து, ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்கும் வகையில் கேள்வித்தாளை வடிவமைக்க வேண்டும்.  ஒருங்கிணைக்கப்பட்ட சாதி வகைகளை குறிப்பிட்ட சாதி பெயர்களால் பிரிக்க முடியும். அதன்மூலம் ஒரு வகைக்குள் வரும் தனிநபரின் சாதி குறித்த தரவுகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகை குறித்த தரவு, நமக்கு  பல்வேறு, வித்தியாசமான சாதிகளைக் உள்ளடக்கிய அந்த குறிப்பிட்ட வகையின்  கீழ் வரும் வேறுபட்ட பகுதி/ மாநிலங்களில் உள்ள எண்ணிக்கையை தராது.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

நாம் அந்த தரவை வைத்திருந்தால், பகுதி வாரியாக குறிப்பிட்ட வகையில் பொருளுள்ள வகையில் திரட்டல்களை ஒன்றிணைக்கலாம். அது நமக்கு மேலும் பயனுள்ள தகவலைத் தரும். இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற மிகப் பெரிய திரட்டலை விட மிக அதிக மதிப்புடைய தாகும். ஏனெனில் அது  பிரிக்க வாய்ப்பில்லாத, வேறுபாடுகளை உள்ளுக்குள் மறைத்து வைத்திருக்கும் தொகுப்பாக இருக்கும்.

மிக மலிவான தரவு சேமிப்பு மற்றும் கனிணி மயமாக்கல்  திறனுடன், பிரிக்கப்பட்ட தரவுகளை நாம் பெறுவது சாத்தியம். இது வேறுபட்ட பகுதிகள் அல்லது துணைப் பகுதிகளுக்கேற்ப வேறுபட்ட திரட்டல்களுக்கு அனுமதிக்கும். இது சாதித் தரவுகளை வலுவாகவும், பயன்படுத்தக் கூடியதாகவும் மாற்ற உதவும். தரவை சேகரிப்பதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. இதனை செயல்படுத்த ஒரு புதிய நிறுவனம் தேவையில்லை. ஆனால் அரசியல் விருப்பம்தான் தேவையாகும்.

ஒன்றிய அரசின் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  10% இட ஒதுக்கீடு உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி இருக்கிறது.  சாதியை ஒரு மேலும் ஒரு விதிமுறையாக வலுப்படுத்துகிறது. சமூகநீதி மற்றும் பொருளாதார சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட உறுதியான நடவடிக்கைக்கான அரசியலமைப்புத் தேவையுடன் இது எவ்வாறு ஒன்று படுகிறது?

இந்த ஒதுக்கீடு அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமற்றது. இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று மண்டல்(ஆணையம்) வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ளபடி, பொருளாதார அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு இருக்க (வழங்க) முடியாது. இந்த ஒதுக்கீடு முற்றிலும் பொருளாதார அடிப்படையில் உள்ளது. ஏனெனில் இது தொடர்புடைய 103 வது சட்டத் திருத்தம் சாதியைக் குறிப்பிடவில்லை. இரண்டாவதாக, இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகைகளைத் தவிர்த்து, ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது.

இது அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவக் கொள்கையை (14 வது பிரிவின்படி)  மீறுகிறது. தற்செயலாக, 1950 ல் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை முதலில் ரத்து செய்த போது வைக்கப்பட்ட வாதம் இதுதான். ஆனால் பின்னர் 1951 ல் உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்தது. இதுதான் அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழி செய்தது. இந்தத் திருத்தம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் ஒரு ஏற்பாட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சாதியை மட்டும் அடிப்படையாக வைத்து மக்களை விலக்கி வைக்க முடியாது என்பதே அப்போது உச்சநீதிமன்றம் கூறியதற்கு  காரணமாக இருந்தது. இதற்கான தீர்வு- அந்தக் குழுக்களுக்கு ஒரு வெளிப்படையான உட்பிரிவை அறிமுகப்படுத்துவது- சமத்துவத்தை மீறுவதாகக் கருதப்படவில்லை. இதுபோன்ற பாதுகாப்பு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இதுவரை தரப்படவில்லை. அது  உட்பிரிவாக சாதியைக் குறிப்பிடாததால் அப்படி தருவதும் கடினம்.

உச்சநீதிமன்றம் 2004 ஈ.வி. சின்னையா தீர்ப்பை பெரிய அமர்விற்கு அனுப்பி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்குள் அதிக விளிம்புநிலையில் உள்ள குழுக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவர்களின் உட்பிரிவுகள் குறித்த மறுவிசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது‌‌ இது பற்றி கருத்து கூற விரும்புகிறீர்களா?

இது ஒரு நல்ல கருத்து. நீதிமன்றத்தின் முந்தைய உட்பிரிவிற்கான நிலை மிகவும் இறுக்கமானது. சட்டத்தின் எழுத்துக்களில், குடியரசு தலைவர் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் எனக் குறிப்பிடுவது ஒற்றை ஓரினக் குழு. துணை ஒதுக்கீடுகளுக்கு இடம் உள்ளது. சட்டத்தின் உள்ளுணர்வு, பாகுபாட்டிற்கும், பின்தங்கிய நிலைக்கும் ஈடு செய்வதாகும்.

குறிப்பிடத்தக்க குறைந்த பிரநிதித்துவத்தை நிரூபிக்க முடிந்தால், அந்த குழுவிற்கு (பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்குள்ளும் கூட) எதிராக பாகுபாடு காட்டப்படுவதற்கான சான்றுகள் இருந்தால், துணை ஒதுக்கீடு அறிவுபூர்வமானதாக இருக்கும். மேலும் அத்தகைய ஏற்பாடுகள் செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

இன்றைய நிலையில்  துணை ஒதுக்கீடு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அது ஒரு நல்ல முயற்சியும் கூட. மக்கள்தொகை கணக்கெடுப்பு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் குறித்த ஒவ்வொரு தனிநபரின் தரவையும் சேகரிக்கிறது. பல பகுதிகளில் மற்றவர்கள்  பின்தங்கி இருக்க ஒரு குழு ஆதிக்கம் செலுத்துகிறது. (ஆந்திரப் பிரதேசத்தில் மாலா, உ.பி.யில்  ஜாதவ், மகாராட்டிரத்தில் மகர், ராஜஸ்தானில் மீனா போன்றவர்கள் இருப்பது போல)‌.

அதே வேளையில், வேலையை உருவாக்கும் அரசின் திறன் சுருங்கி வருவதால், சாதி சமத்துவமின்மையை போக்கும் இட ஒதுக்கீட்டின்  திறனும் சுருங்கும் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். ஆயினும் கருத்தியல் முக்கியத்துவம் நீடிக்கிறது. ஏனெனில் இட ஒதுக்கீடு சாதி பற்றிய நமது சிந்தனைகளை வடிவமைக்கிறது. துணை ஒதுக்கீடுகள் சாதிக் குழுக்களை பெரியதாகவும், ஓரின தொகுதியாகவும் சிந்திப்பதை தடுத்து நிறுத்துகிறது.

மகாராட்டிரத்தின் மராத்தாக்கள் தங்களை சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகமாக அறிவிக்கக் கோரியும், அரியானாவின் ஜாட்கள் தங்களை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வகைப்படுத்தக் கோரியும் எடுக்கும் உறுதியான நடவடிக்கைகளின் பின்னணியில் இட ஒதுக்கீட்டின் தன்மை எவ்வாறு மாறியுள்ளது என்பது பற்றி உங்களால் கூற முடியுமா? ஏன் ஆதிக்க குழுக்கள் இத்தகைய கோரிக்கைகளை வைக்கிறார்கள்? 

இது கண்ணோட்டத்தில் உள்ள பிரச்சனை. ஏனெனில் இதே “இட ஒதுக்கீடு” என்ற சொல் மிகவும் மாறுபட்ட தன்மையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசியலமைப்பு ரீதியான இட ஒதுக்கீடு ஒரு அரசியல் கருத்தாக்கம். இது  நவீன நாடு என்ற நமது கூற்று நம்பத் தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவைப்பட்டது.  ஏனென்றால் நடைமுறையில் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், நவீன நாட்டிற்கு குடிமக்களிடையே சமத்துவம் என்பது கொள்கை அடிப்படையில் தேவையாக உள்ளது.

இந்தியாவில், சாதீய சமத்துவமின்மை மற்றும் விலக்கி வைத்தல் ஆகியவை இந்து சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேறு சொற்களில் கூற வேண்டுமானால், சாதீய சமத்துவமின்மை என்பது குறியீடாக உள்ள கொள்கைகள்(சட்டங்கள்) மேலும் அது வெறும் பழக்க வழக்கம் அல்லது நடைமுறை அல்ல. ஒரு நாடாக இந்தியாவிற்கு கடந்த காலத்திலிருந்து ஒரு தெளிவான முறிவு தேவைப்பட்டது. அந்த முறிவு நல்ல நோக்கத்தின் வெளிப்பாடு என்பதற்கும் மேலானதாக இருந்தது. இட ஒதுக்கீடு, கட்டாயமாக சேர்த்துக் கொள்வது என்ற வினைக்கு,  கட்டாயமாக விலக்கி வைப்பது என்ற   திறமையான எதிர்வினையாக இருந்தது. மேலும் அது செல்லுபடியாவதாகவும் மற்றும் தேவையானதாகவும் இருந்தது.

‘தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆதிக்கக் குழுக்கள் அரசிடமிருந்து சலுகைகளை பிழிந்தெடுத்துக் கொள்ள அதே கொள்கைச் சட்டகத்தை நம்பி உள்ளன. இதனை இட ஒதுக்கீடு என அழைத்தாலும், கருத்தாக்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியான இட ஒதுக்கீட்டிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. (சாதிக் குழுக்களுக்கான) இட ஒதுக்கீடு அரசியல் மற்றும் சமூக இணைப்பை நோக்கமாக கொண்டது‌ என்பதுடன் மிகச் சிறந்த பயனுள்ள நலத் திட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. “உயர் சாதிகள்” மீது  ஒரு குழுவாக பாகுபாடு காட்டப்படுகிறது என்பது ஆதிக்க கருத்தியல் உருவாக்கிய மாய கண்ணோட்டம். நமது சமூகத்தில் பெருமளவு குரலெழுப்பும் பிரிவாக உயர்சாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த கண்ணோட்டத்தைத் தீவிரமாக வளர்த்தெடுக்கின்றனர்.

கடந்த காலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு உரிமை உணர்வு உள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு சாதியைப் பற்றிய சிந்தனைக்கு முக்கியமானதாக உள்ளது.  இந்தப் பிரிவு வர்க்கம் முழுவதும் பரவி உள்ளது. பணக்காரர் மற்றும் ஏழை ஆகிய அனைவரிடத்திலும் மிகப்பெரும்பான்மையான  தனிப் பிரிவாக இது உள்ளது. மறுபுறம், இது ஆழமான வேறுபாடுகளை மறைக்கும், அதிக ஒன்றுபடுத்தப்பட்ட வகைகளால் உண்டாகும் பிரச்சனைகளையும் இது வெளிப்படுத்துகிறது. அவர்களுடைய இந்த பங்களிப்பு, அதிகாரத்தின் மூலங்கள் அதனால் பெறும்  நன்மைகள் மற்றும் அதிகாரமின்மை அதனால் பல்வேறு சூழல்களில் நிகழும்  பாதகம் ஆகிய இரண்டுமாக சாதி அடையாளம் எப்படி இருக்க முடியும் என்பதைக் காட்டுவதாகவே உள்ளது.

.பி., மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் திருமணத்திற்காக ஒருவர் மதம் மாறுவதை தடை செய்யும் சட்டங்களை இயற்றி உள்ளன. அரசு தனிநபர் சுதந்திரத்தைத் தடுக்கிறதா? இந்த மாற்றங்கள் எதற்காக என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இது ஒரு வகுப்புவாதப் பிரச்சினை. இந்தியச் சமுதாயத்தில்  உள்ளுறைந்துள்ள பழமைவாதம் இங்கே குறிப்பாக வகுப்புவாத சூழலில் வெளிப்படுகிறது. (இத்தகைய சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம்) கவலைகள் அனைத்தும் ஒரு பக்க சார்பானவை மற்றும்  சமச்சீரற்றவை.  இஸ்லாமியர்களையும், குறைந்த அளவில் கிறித்துவர்களையும் திருமணம் செய்து கொள்வது பற்றிய கவலை இது. அத்துடன் இது குறிப்பிட்ட பாலினம் தொடர்பான கவலை. “காதல் ஜிகாத்”  இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர இந்து ஆண்கள் இஸ்லாமிய பெண்களை திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதில்லை. இதில் மதத்திற்கும் அல்லது தனிநபர் உரிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‌

தேசியவாதம் மற்றும் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் அரசியல் கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம், சிஏஏ  மற்றும் என்ஆர்சி க்கு எதிரான போராட்டங்கள் மீதான ஒன்றிய அரசு மற்றும் பொதுமக்களின் எதிர்வினைகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

ஆளும் கட்சியின் அரசியல் பாணி பெரிய சமூக- அரசியல் சூழலில் ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றின் முழுச் சூழலையும் வரையறுக்கிறது. இன்று, ஆளும் வர்க்கத்தின் வெளிப்படையான மற்றும் மறைமுக ஆதரவுடன், ஒரு குறிப்பிட்ட தீவிரமான  கும்பல்வாத அடிப்படையிலான  நேரடி மற்றும் வன்முறை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இது அரசியலை துருவப்படுத்த உதவுகிறது

அதே சமயம், அனைத்தும் தனிப்பட்ட நபருடையதாகவும் மற்றும் ஒரு ஒற்றை, மாபெரும் தலைவரை முன்னிலைப்படுத்துவதாகவும் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மிகக்குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகின்றன. இதற்கும் மேல் இந்துத்துவா அடையாளம் இருக்கிறது. இது இன்று எந்தவிதமான அரசியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கத்திலிருந்து சுயமாக வரையறுக்கிறது. அது விவசாயிகள் போராட்டமோ அல்லது சிஏஏ லுக்கு எதிரான போராட்டமோ எதுவாக இருந்தாலும், அரசுடன் அல்லது ஆளும் கட்சியுடன் ஒத்துப் போகாத எவரும் “தேசத் துரோகி” என அறிவிக்கப்படுவார்.

தேசியவாதம் என்பது ஒரு கவர்ச்சியான சொல்லாடல். அதன் முறையீடு பகுத்தறிவு வாதம் பயனற்று போன, உணர்வுபூர்வ மட்டத்தில் உள்ளது. தேசியவாதத்தைத் தூண்டுவதன் மூலம் நீங்கள் என்ன உறுதியான நடவடிக்கைகள் அல்லது கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்பதுதான் இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி.

www.scroll .in  இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

இந்தியா ஸ்பென்ட் இதழுக்காக ஸ்ரீ ஹரி பாலியாத் எடுத்த நேர்காணல்

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்