Aran Sei

மேற்கு வங்க தேர்தலிலும் தனித்து போட்டியா? – ஒவைசி கூறுவது என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஐந்து தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. பதிவான  நான்கு கோடி வாக்குகளில்  ஐந்து லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.

நேற்று (நவம்பர் 11), ஏஐஎம்ஐஎம்  தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ (சிஏஏ) பற்றியும்,  ’தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்ஆர்சி) பற்றி பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த தேர்தலில் உங்கள் பிரச்சாரத்தில் முக்கியமானது சிஏஏ, என்ஆர்சியும் மற்றும் அதை மௌனமாக ஆதரிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தான். இது ஏன் உங்கள் பிரச்சாரத்தில் முக்கியமான ஒன்றாக இருந்தது என்று விளக்க முடியுமா?

இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  இது மட்டுமே பிரச்சாரத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கவில்லை.  இது நாங்கள் பேசிய பிரச்சினைகளில் ஒரு பகுதி மட்டுமே. சீமஞ்சலுக்கு (பீகாரின் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி) எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

அது ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி. அந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தனித்தனியாக பிரிந்துக்கிடக்கும். மேலும், அங்கு கல்வி நிறுவனங்கள் போதுமானதாக இல்லை.

பீகார் தேர்தல்: ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு’ – இடதுசாரிகள் புகார்

கடந்த 25 ஆண்டுகளாக, ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் சீமஞ்சல் பகுதியில் நிறைய ஊடுருவல்கள் நடப்பதாக கூறி வருகிறார்கள். காரணம்,  இந்த பகுதி வங்கதேசம் மற்றும் நேபாள எல்லைக்கு மிக அருகில் உள்ளது என்பதால். எங்கள் கட்சிதான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

நாங்கள் மட்டுமே சீமஞ்சலில் சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிர்ப்பு தெரிவித்தோம். நாம் மக்களிடம் செல்லும்போது, ​​அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய முக்கிய பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பீகார் தேர்தல் – படுதோல்வியைச் சந்தித்த எல்ஜேபி – பாதாளத்தில் தள்ளிய சிராக் பஸ்வான்

காங்கிரஸ்,  ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற பிற கட்சிகளுக்கு இருக்கும்  நிர்பந்தங்கள் எங்களுக்கு இல்லை. அவர்கள் சிஏஏ, என்ஆர்சி-ஐ பற்றி பேசினால், அது பாஜகவுக்கு சாதகமான கருத்தாக இருக்கும் என்று பயப்படுகிறார்கள். சிஏஏ அரசியலமைப்பு சட்டத்திற்கே  எதிரானது. அப்படி இருக்க இதை ஒரு வகுப்புவாத பிரச்சினையாக மட்டுமே எப்படி பார்க்க முடியும்?

ஆக,  இதை பற்றிப் பேச காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும்  மிகவும் பயப்படுகிறது, அதனால் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை  நிரப்ப நீங்கள் வந்ததாக சொல்கிறீர்களா?

நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கிறோம். இதை அந்த மக்களே  பார்த்திருக்கிறார்கள். வெள்ளம் ஏற்பட்ட சமயம், ​​நாங்கள் அங்கு மருத்துவ முகாம்களை நடத்தினோம்.  நிவாரண பொருட்களை விநியோகம் செய்தோம்.

பீகார் தேர்தல் – மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு விடிவில்லை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்து சேர்ந்தபோது, ​​அவர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவினோம். இன்னும் சொல்வதானால், நாங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு முக்கியமான வேலைகளை செய்துக்கொண்டிருந்தோம்.

மூன்றாவதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளமும் காங்கிரஸும் எங்களை பாஜகவின் பி-டீம் என்று குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

`மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி

நான்காவது, எங்கள் வெற்றியில் பெண் வாக்காளர்களின் பங்கு பெரியது. எனது எல்லா பிரச்சார பேரணிகளிலும், ஏராளமான பெண்கள் பங்கேற்றார்கள். இது என் அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத ஒன்று. கொச்சதமனில், எனது கடைசி பிரச்சாரக் கூட்டத்தில், நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். நான் பிரச்சாரத்தை முடித்து கிளம்பும்போது, ​​சில பெண்கள் என்னை அணுகினர்.

“நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் (காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம்) உங்களைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நவம்பர் ஏழாம் தேதி சரியான பதிலை அளிப்போம்.” என்று கூறினார்கள்.

பீகாரில் சரிந்த காங்கிரஸ் – கேள்விக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தலைமை

இந்தக் கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதற்கு வருத்தப்படுகிறீர்களா? ஏனென்றால், 21 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டாணியில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே ஒரு இடத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. ஒருவேளை, நீங்கள் தனித்து நின்றிருந்தால்,  இன்னும் அதிகமான இடங்களை பெற்றிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. சமாஜ்வாதி ஜனதா தளத்தின் தேவேந்திர யாதவையும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் உபேந்திர குஷ்வாஹாவுக்கும் என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன். எங்கள் கட்சியின் வெற்றியில் அவர்களின் பங்கும் உள்ளது.

பீகாரில் முடிவுக்கு வரும் சமூக நீதி அரசியல் – அதன் புதிய குரல் என்னவாக இருக்கும்?

பீகாரில் உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்ன? சீமாஞ்சல் மட்டும் அல்லாமல், அதையும் தாண்டி, ஒட்டு மொத்த பீகாருக்குமான செயல் திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா?

எங்கள் எம்எல்ஏக்களின் முதல் வேலையானது, எவ்வளவு கஷ்டப்பட்டாவது வாக்காளர்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிப்பது. நாங்கள் பீகார் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுவோம். அந்த 21 தொகுதிகளிலும் எங்களின் இருப்பை ஏற்கனவே மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சியை மேலும் பலப்படுத்து உள்ளோம்.

பீஹார் தேர்தல் : வேட்பாளர்களில் 328 பேர் கிரிமினல் குற்றவாளிகள்

2021 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுமா?

இதுகுறித்து, எங்கள் கட்சியின் மேற்கு வங்க பிரிவில் பேசுவேன்.  அவர்களுடன் முழுமையான ஆலோசனையை மேற்கொள்வோம்.  அதற்கு பின் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அது குறித்து ஒரு முடிவு எடுப்போம்.

பீகார்: மோடியை நோக்கி எழுப்பப்பட்ட 11 கேள்விகள்

எனது கட்சியை சேர்ந்த பலரை பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் அடைத்துள்ளனர். நிச்சயமாக, நம் மேல் ஆர்வமாக தான் உள்ளார்கள்.  குறிப்பாக சொன்னால்,மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதியான உத்தரா தினாஜ்பூர், இஸ்லாம்பூர் போன்ற கிஷன்கஞ்சினுக்கு அருகில் உள்ள பகுதிகள். ஆனால் என்னிடம் இதற்கு சரியான பதில் இல்லை.

(தி இந்து – வில் வெளியான நேர்காணலின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்