Aran Sei

விவசாயிகளுக்கான சட்டமல்ல, முதலாளிகளுக்கான சட்டம் : ஜெயரஞ்சன் – வீடியோ

டும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று விவசாய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

“இந்த சட்டங்கள் மூலமாக 70 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளின் கைகளில் கட்டப்பட்டுள்ள சங்கிலிகள் உடைபட்டுள்ளன” என்று பிரதமர் மோடி கூறுகிறார். “இந்தச் சட்டங்கள் விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கு வழி வகுக்கும்” என்று அவற்றை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

சந்தையில் விவசாயிகளுக்கு சுதந்திரம், அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் ஆதாயம் என்று சொல்லப்படுபவற்றின் பின் இருக்கும் உண்மைகள் என்ன?

இந்த சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை எப்படி பறிக்கின்றன? இந்த மாற்றங்களை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையிட முடியுமா?

APMC சட்டங்கள் ஏன் நிறைவேற்றப்பட்டன? அந்த காரணங்கள் இன்னும் தொடர்கின்றனவா? APMC மண்டிகள் இப்போது எப்படி செயல்படுகின்றன? விவசாயிகளின் நிலை என்ன? இந்த மாற்றங்களுக்கு பிறகு அதில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? அது விவசாயிகளை எப்படி பாதிக்கும்?

குறைந்த பட்ச ஆதரவு விலை தொடருமா? அரசின் கொள்முதல் என்னவாகும்? பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சி நடைபெறுகிறதா?

ஒப்பந்த விவசாயத்தால் விவசாயிகளுக்கு வருவாய் அதிகமாகுமா? விவசாயிகளின் கடன் சுமைக்குக் காரணம் என்ன?

உலகமயமாதலுக்கும் இந்தச் சட்டங்களுக்கும் என்ன தொடர்பு? இப்போதைய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மோசமான அரசியல் விளைவுகள் என்ன?

இந்தக் கேள்விகளையும் இன்னும் பல விஷயங்களையும் அரண் செய் ஆசிரியர் அசீப் நடத்திய நேர்முகத்தில் விளக்குகிறார் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்