Aran Sei

மக்களைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் – போராட்டத்தை முன்னெடுத்த மருத்துவரின் நேர்காணல்

செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராடுவதாக அரண்செய் – க்கு தகவல் கிடைத்தது. கொரோனா பேரிடர் காலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில் இப்போராட்டம் சமூகத்தளத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. போராட்டத்திற்கான காரணம் அறிய அங்குப் பணிபுரியும் மருத்துவரை அரண்செய் தொடர்புகொண்டு பேசியது.

செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடைபெறுவதற்கான காரணம் என்ன?

கொரோனா நோய்த்தொற்று வார்டில் பணியாற்றக்கூடிய மருத்துவர் நான். இதுவரை மருத்துவர்களின் உரிமைக்காக போராடி இருக்கிறோம்.  ஆனால் இது மக்களுக்கான மருத்துவர்கள் போராட்டம். உயிரைப் பனையம் வைத்து மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் இறப்பதை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருத்துவமனையில் ஆக்ஸிஜனின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?

23 கேஎல் ஆக்ஸிஜனை சேமித்துவைத்து கொள்கலன் மருத்துவமையில்  இருக்கிறது.

இவ்வளவு பெரிய கொள்கலன் இருக்குபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

எல்லா மருத்துவமனைகளுக்கும் ஐநாஸ் லிக்யூட் ஆக்ஸிஜன் எனும் நிறுவனம்தான் ஆக்ஸிஜனை நிறப்புவாரகள்.  தனியார் மருத்த்குவமனைகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு நிறப்பியது போக மிச்சமுள்ளதை அரசு மருத்துவமனைக்குத் தருகிறார்கள். 23 கேஎல் செமிப்பு கொள்ளளவு கொண்ட எங்களுக்கு வெறும் 3 கேஎல் ஆக்சிஜனே கிடைக்கிறது. நாங்கள் வற்புறுத்திக் கேட்டப்பிறகுதான் ஆக்ஸிஜனை நிரப்ப வருகிறார்கள்.

ஆக்ஸிஜன் தேவைக்குக் கொரோனா ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாமா?

ஆம், இம்முறை கொரானா இரண்டாவது அலையால் 90 விழுக்காடு மக்களுக்கு ஆக்ஸிஜன்தான் தேவைப்படுகிறது. இன்றைய சூழலில் கொரோனா மருத்துவச் சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் அத்தியாவசியமாகிறது. சொல்லப்போனால் ஆக்ஸிஜன்தான் உயிர் பிழைப்பதற்கான மருந்து என்று சொல்லலாம்.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

நோயாளிகள் உயிரிழப்பிற்கு என்ன காரணம்?

கொரோனா தொற்றுக்கான மருத்துவம் பெரும்பாண்மையாக அரசு மருத்துவமனைகளில்தான் பார்க்கப்படுகிறது.  அதனால், அரசு மருத்துவமனைக்கே ஆக்ஸிஜன் வழங்குவதில் முன்னிரிமை தர வேண்டும்.   நன்பகல் 12 மணிக்கு வரவேண்டிய ஆக்ஸிஜன் மாலை 3 மணிக்கு வந்தது. இதனால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலைத் தொடர்ந்தால் இன்னும் 10 நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்.  இன்று காலை 10 மணியளவில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டது. போராட்டத்தில் இறங்கிய பின்புதான் ஆக்ஸிஜன் உடனே வந்தது.

மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

இப்போது கொடுத்திருப்பது தேவைக்கேற்ப உள்ளதா?

அப்படி சொல்லிவிட முடியாது  நாளை காலைவரை மட்டும்தான் ஆக்ஸிஜனின் இருப்பு இருக்கும். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குத் தேவையான ஆக்ஸிஜனை நிறப்பினால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

மருத்துவப் பணியாளர்கள் தேவைக்கேற்ப உள்ளனரா?

இல்லை, தமிழகத்தில் உள்ள மருத்துவமனையிலே செங்கல்பட்டில்தான் குறைந்த அளவான பணியாளர்கள் உள்ளனர். செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வளவு நெருக்கடியை நாங்கள் பணிசெய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்கவே முடியாது. அதனால்தான் போராட்டம் என்கிற முடிவுக்கு வந்தோம்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

கடந்த ஏப்ரல் மாதத்தில் செவிலியர் படிப்பு படித்துக்கொண்டிருந்த 3 ஆம் ஆண்டு மாணவர்களைக் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் பிறகெப்படி செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது?

அம்மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்துவதில்லை. செங்கல்பட்டு மருத்துவமனை 500 படுக்கைவசதியோடு ஆரம்பிக்கும்போது 150 செவிலியர்கள் இருந்தனர். தற்போது 1500 படுக்கைகளாக விரிவடைந்த நிலையிலும் அதே 150 செவிலியர்களே உள்ளனர். தரமான மருத்துவம் என்பது மருத்துவரிடம் மட்டும் இருப்பதில்லை. அது மருத்துவமனை உள்கட்டமைப்பு, பணியாளர்கள் பொறுத்துதான் அமையும்.   ஒரு மருத்துவரிடம் 30 நோயாளிகளைப் பார்க்கச் சொன்னால் சரியாக இருக்கும். மருத்துவர் பற்றாக்குறையால் 200 நோயாளிகளை ஒரு மருத்துவர் கண்காணிக்க நேரிடுகிறது. இருந்தாலும் மருத்துவர்கள் அவ்வேலையைச் செய்கிறார்கள்.  இந்த இடையூறுகளையெல்லாம் பொறுத்துக்கொண்ட மருத்துவர்களால், ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழிப்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்