Aran Sei

எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ

டந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதிசெய்தல்) மசோதா 2020, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா, விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மீதான ஒப்பந்த மசோதா 2020 ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது.

‘சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளின் கைகளிலும் கால்களிலும் கட்டப்பட்ட சங்கிலிகள் உடைபட்டிருக்கின்றன’ என்று மத்திய அரசு கூறுகிறது. ‘இது விவசாயிகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் குறைந்தபட்ச ஆதார விலைகளை இல்லாமல் செய்யும் முயற்சி’ என்று எதிர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆஷா-கிசான் ஸ்வராஜ்-ஐ சேர்ந்த கவிதா குருகான்டி இவற்றை முறையே “APMC புறக்கணிப்பு மசோதா 2020”, “உணவு பதுக்கல் (கார்ப்பரேட்டுகளுக்கு சுதந்திரம்) மசோதா 2020”, “ஒப்பந்த விவசாய மசோதா 2020” என்ற அழைக்கிறார்.

இந்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • உண்மையில் இந்தச் சட்டங்கள் கொண்ட வர முயற்சிக்கும் மாற்றங்கள் என்னென்ன?
  • கட்டுப்பாடு நீக்கப்பட்ட சந்தைகள் விவசாய விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யுமா?
  • விவசாயிகளின் கடன் தேவைகளுக்கும் விளைபொருள் சந்தைக்கும் என்ன தொடர்பு?
  • விவசாய விளைபொருட்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்வதையும் அரசு கொள்முதலையும் எப்படி உறுதி செய்ய முடியும்?
  • ஒப்பந்த விவசாயத்தில் என்ன நடக்கும்?
  • நமது நாட்டு மக்களுக்கு சரியான விலையில் தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதை சந்தையின் தயவில் விட்டு விட முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பிற கேள்விகளுக்கும் சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் பேராசிரியர் திரு ஜனகராஜன், அரண் செய் ஆசிரியர் அசீப் நடத்திய நேர்முகத்தில் கூறிய பதில்களைக் காண…..

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்