Aran Sei

“இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் – ஸ்டாலின்

ந்தத் தேர்தல் திமுகவிற்கும் ஆளும் கட்சிக்கும் நடக்கும் போட்டி அல்ல. இது தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கின்ற யுத்தம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக தேர்தலையொட்டி கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளைத் தருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கும் ஒரு கட்சி, இன்று ஆளும் கட்சியை மிரட்டி மிரட்டியே தமிழ்நாட்டின் மொத்த உரிமைகளைப் பறிக்கிறது. நம் இளைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசாங்க வேலையை வடமாநிலத்திலிருந்து வருபவர்களுக்குத் தூக்கி கொடுக்கிறார்கள். நீட் போன்ற தேர்வுகளைக் கொண்டு வந்து நம்முடைய பிள்ளைகளை படிக்க விடாமல் செய்கிறார்கள். விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை கெடுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எதிர்த்துப் போராடும் மக்களை அடித்து விரட்டுகிறார்கள். நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், நாம் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், நம் குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பது வரை அவர்கள் முடிவு செய்ய நினைக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் அவர்களின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். இதை இப்படியே விட்டால் நம்முடைய வளங்கள், நம்முடைய மொழி, நம்முடைய சுயமரியாதை, நம்முடைய சமூக நீதி,  நம் அடையாளங்கள் எல்லாம் சிதைந்து போய்விடும்” என்று கூறியுள்ளார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கு – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

இதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும்  நமது வாக்கு தான் நமது ஆயுதம் என்று தெரிவித்த ஸ்டாலின், “ திமுக ஆட்சிக்கு வந்தால் பறிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகள் எல்லாம் மீட்கப்படும். மாநில உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும். சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தவறுச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்” என்று காணொளியில் தெரிவித்துள்ள்ளார்.

பாஜக வேட்பாளர் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் – மறுவாக்குபதிவிற்கு உத்திரவிட்ட தேர்தல் ஆணையம்

திமுக இந்து மதத்திற்கு எதிரானது என்று எதிரணியினர் பொய்யான குற்றச்சாட்டைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், திமுக ஆட்சியில் எல்லா மத மக்களும் பாரபட்சம் இல்லாமல் இல்லாமல் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், அவர்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மதிக்கப்படும்  என்றும்,  சமூக நீதி ,சமத்துவம் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி தான் தன்னுடைய முதன்மையான நோக்கம் என்றும்  எல்லா துறையும் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும்  தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடை செய்யப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

“தெருமுனையில் பெண்களை கேலி செய்யும் விடலைகள்போல் பிரதமர் செயல்படுகிறார்” – மஹுவா மொய்த்ரா விமர்சனம்

மேலும், ”என்னுடைய சுயநலத்திற்காக நான் யார் காலிலும் விழமாட்டேன். என்னுடைய சுயநலத்திற்காக எந்தச் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன்.  இந்த வாக்குறுதிகளை நான் மீறினால் நீங்கள் என்னை நேரடியாகக் கேள்வி கேட்கலாம். என்னோடு துணையாக இருங்கள்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்