Aran Sei

கோவாக்சின் எடுத்துக்கொண்டவருக்கு “தீவிர” பிரச்சனை – ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

முதல்நாளில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட 52 பேர், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. 51 பேருக்கு சிறிய அளவில் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கு தீவிர பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியின் மாவட்ட அதிகாரிகள், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட சிலருக்கு, மயக்கம் மற்றும் தலைவலி போன்ற சிறிய எதிர்விளைவுகள் ஏற்பட்டதாக தி இந்து -விடம் கூறியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் எது சிறந்தது?- உண்மையான அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாவலராக பணியாற்றும் ஒருவர் கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பாதுவாலருக்கு “தீவிர” பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தி இந்து தெரிவிக்கிறது.

20 வயதான அந்த பாதுகாவலர் மாலை 4 மணியளவில் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், அடுத்த 15 முதல் 20 நிமிடத்தில் அவருக்கு, மயக்கம் மற்றும் அரிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு சிறிய அளவில் பக்கவிளைவு எற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பக்கவிளைவு ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு வழங்கும்” – கோவாக்சின் எடுத்தவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு மருந்து வழங்கும் பணி நேற்று (16.01.21) முதல் தொடங்கியுள்ளது. சீரம் இந்தியா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு மருந்துகளுக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அவசர அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரண்டு மருந்துகளில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பொதுமக்கள் முடிவு செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு, மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவடையும் முன்னரே, அவசர அனுமதி வழங்கப்பட்டதற்கு, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகளும், மருத்துவ வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவடையாவிட்டாலும், கோவாக்சின் மருந்து பாதுகாப்பானது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

‘கோவாக்சின்’ எடுத்துக்கொண்டவர் மரணம் – தடுப்பு மருந்து காரணமில்லை என்று பாரத் பயோடெக் விளக்கம்

இந்நிலையில், நேற்றைய தினம் (16.01.21) கோவாக்சின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களிடம் மட்டும், மருத்துவ பரிசோதனை செய்யும் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மருத்துவ சோதனை அடிப்படையில், இந்த மருந்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், அந்த படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, ஆபத்தான பக்கவிளைவு ஏற்படும்பட்சத்தில், அது தடுப்பு மருந்தினால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டால், நிறுவனம் அதற்கு உரிய இழப்பீடு வழங்கும் என்றும் அந்த படிவத்தில் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்