Aran Sei

தீவிர மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சினை எடுத்துக்கொள்ள வேண்டாம் – பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள்

வ்வாமை, காய்ச்சல், ரத்தபோக்கு பிரச்சனை உடைய நபர்கள் கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருவுற்ற தாய்மார்கள் மற்றும் தீவிர உடல் பிரச்சனை உள்ளவர்களும் கோவாச்சின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்து சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்த குறைந்தபட்ச வாய்ப்பிருப்பதாகவும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. அதேபோல், தீவிர ஒவ்வாமை, இயத்துடிப்பு அதிகரிப்பு, முகம் மற்றும் தொண்டை வீங்குதல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்த குறைந்தபட்ச வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பக்கவிளைவு ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு வழங்கும்” – கோவாக்சின் எடுத்தவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து

இந்நிலையில், கோவாக்சின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களிடம் மட்டும், மருத்துவ பரிசோதனை செய்யும் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மருத்துவ சோதனையின் அடிப்படையில், இந்த மருந்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று, அந்தப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை, தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 477 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

கோவாக்சின் எடுத்துக்கொண்டவருக்கு “தீவிர” பிரச்சனை – ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளில் எது வேண்டும் என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தீவிர மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள், தங்களின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு, மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவடையும் முன்னரே, அவசர அனுமதி வழங்கப்பட்டதற்கு, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகளும், மருத்துவ வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்