Aran Sei

அஸ்ஸாமின் வரலாறை தவறாக கூறிய மோடி – பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

ஸ்ஸாம் மாநிலத்தின், அஹோம் இனக்குழுவைச் சேர்ந்த தளபதி லச்சிட் போர்புகன், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்களித்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த லச்சிட் போர்புகன் தலைமையிலான படை, 1671ஆம் ஆண்டு, சரய்காட் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முகலாயர்களை வெற்றி கொண்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான, இந்திய சுதந்திர போராட்டம் தொடங்குவதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே 1672 ஆம் ஆண்டு லச்சிட் போர்புகன் மரணமடைந்தார்.

இந்நிலையில், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டபோது அதில் லச்சிட் போர்புகன் பெயரையும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, அஸ்ஸாமின் வரலாற்றை தவறாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அஸ்ஸாம் ஜதியா பரிஷத் என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 1228 முதல் 1826 வரையில், சுமார் 600 ஆண்டுகள் அஸ்ஸாம் தனி நாடாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, இதுபோன்ற கருத்தை பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்