Aran Sei

இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் காலமானார் – மார்க்ஸின் நினைவு நாளில் மறைந்த மார்க்ஸின் மாணவர்

யற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

நடிகர்கள் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் அவர் இயக்கி வந்த ‘லாபம்’ திரைப்படத்திற்கான படத்தொகுப்பு வேலை நடந்து கொண்டிருந்தபோது, வீட்டில் மயங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவருக்குத் தொடர் சிகிச்சை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அவர் உடல்நிலை காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

திரை உலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். “நம்பிக்கையும், பிரார்த்தனைகளும், கை நழுவிச் சென்றாலும் இயற்கை அன்னை ஒரு போதும் கைவிடாது உன்னைத் தழுவிக் கொள்ளும். சென்று வா. செந்நிறத் தோழனே” என்று இயக்குனர் பாரதிராஜா இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீதான உங்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் உங்கள் திரைப்படங்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்

இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்த இரங்கலில், எளிய மக்களின் வாழ்வை,அவர்கள் பின்னால் சுழலும் அதிகார சுரண்டலை, துணிச்சலுடன் காட்சிபடுத்தி தமிழ்த்திரையில் புது வெளிச்சம் பாய்ச்சிய “முன்னத்தி ஏர்”தோழர் .SP ஜனநாதனின் இறப்பு செய்தி பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் டிஆர்பி வெறியால் குற்றவாளியாக்கப்பட்டேன் – சூழலியல் ஆர்வலர் தீஷா ரவி குற்றச்சாட்டு

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி “தோழர்  எஸ்பி ஜனநாதன் உடலால் நம்மைவிட்டுப் பிரிந்து தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார். அவரது சிந்தனைத் தொடர்ச்சியைக் கைக்கொண்டு சமூக சம நிலை நோக்கிப் பயணிப்போம். செவ்வணக்கம் தோழா”  என்று. கூறியுள்ளார்

“உங்கள் நினைவுகள் எம்மை விட்டு என்றும் அகலாது” என்று நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லாபம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்து விட்டார். அவரது முன்மாதிரியும் சமூக புரட்சியாளருமான கார்ல் மார்க்ஸ் மறைந்த நாளிலேயே அவரும் மறைந்திருக்கிறார். அவருக்கு என் இரங்கல் என்று இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் உயர்ந்த சிந்தனையுள்ள ஒரு அற்புதமான இயக்குனர் . முற்போக்கு சிந்தனையாளர். என்னுடைய இனிய நண்பர். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று நடிகர் சத்யராஜ் இரங்கலில் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

இது மனதை உலுக்குவதாக இருக்கிறது. ஆன்மா சாந்தி அடையட்டும் எஸ்.பி. ஜனநாதன் சார். நீங்கள் எனக்கும் என் போன்ற பலருக்கும் ஊக்கமாக இருந்தீர்கள். எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு உயர்ந்த ஆன்மா நீங்கள் என்று இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

எஸ்.பி. ஜனநாதன் சாரை கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைக்கிறோம். உங்களுடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் கொடுத்த ஞானத்துக்கும், கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. என் நினைவுகளில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாடகர், நடிகர் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்