Aran Sei

“சிறை அல்ல பிணை” என்பது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தாது – மாவோயிஸ்ட் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவர் த்வாஹா ஃபசலுக்கு, என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஹரிபிரசாத் மற்றும் கே.ஹரிபால் அடங்கிய அமர்வு, “தனிநபர்களின் உரிமை என்பது தேச நலனுக்கு கீழானது” என்றும் “தனிநபர் சுதந்திரம், தேசநலனுக்கும் பாதுகாப்பிற்கும் எதிராக அமையும்போது, தேச நலனுகே முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றும் கூறியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பிரிவினை வாதத்தை தூண்டும் தத்துவத்தின் விதைகள் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

த்வாஹாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு (UAPA) முகாந்திரமாக, காவல்துறை எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதற்கு முன்னதாக சுமார் 10 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார்.

ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?

“சட்டத்தின் (UAPA), நான்கு மற்றும் ஆறாம் அத்தியாயத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் படி, ஒருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்படும்போது, குற்ற ஆவணங்கள் அல்லது இறுதி அறிக்கையின்படி, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பது நம்பும்படி இருந்தால், இந்தச் சட்டம் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு தடை விதிக்கிறது” என்று நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆவணத்தையும், முழுமையாகவும் ஆராயவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

“சட்டம் கூறுவது சிறையல்ல, பிணைதான்” என்ற கருத்து, சிறப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொருந்தாது என்று கூறியுள்ள நீதிபதிகள், சிறப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அது ஆராயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக லைவ் லா  கூறியுள்ளது.

பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

“ஒருவேளை அவர்கள், இளைஞர்கள் என்ற அடிப்படையில், புதிய தத்துவங்களை தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆவணங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டிருக்காது”  என்று கூறியுள்ள நீதிபதிகள் “ஆகவே, குறைந்தபட்சம் இந்தத் தருணத்தில், அவர்கள் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு இதுவே போதுமானது” என்றும் கூறியுள்ளதாக லைவ் லா கூறுகிறது.

இருந்தபோதும், குற்றம் சுமத்தப்பட்ட மற்றொரு நபரான ஆலன் சுஹைப்பிற்கு சூழல்கள் சாதகமாக இருப்பதாகக் கூறியுள்ள நீதிபதிகள் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்துள்ளனர். அதேவேளையில், இந்த வழக்கை ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கும்படி சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, த்வாஹா ஃபசலுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

சட்டம் பயின்று வந்த ஃபைசலும், இதழியல் மாணவரான சுஹைப்பும் கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர்களாக செயல்பட்டுவந்தனர். மாவோயிஸ்ட் கட்சியின் ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களின் கைது செய்யப்பட்டதற்கும், அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரயோகிக்கப்பட்டதற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்