ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மஹா சங்ராந்தி, பொங்கல் மற்றும் சில பண்டிகைகள் முடிந்த பிறகு, கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் – அறிவியல் முறை பின்பற்றப்பட்டதா?
சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட 3 கோடி முன்களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அவர்களைத் தொடர்ந்து பல்வேறு நோய்களால் தாக்கப்பட்ட 50 வயதிற்குக் குறைவானவர்களுக்கம் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்டமாக 27 கோடி பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்
இன்று (09.01.2021), பரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகளும் மனித இனைத்தைக் காப்பாற்ற தயாராக உள்ளதாக கூறினார்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்தை இந்தியாவில் ‘சீரம் இந்தியா நிறுவனம்’ (Seeram Institute of India) தயாரித்துள்ளது. அதபோல், பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அவசர அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே, அதற்கு அனுமதி வழங்கியுள்ளது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி உட்பட பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“இந்தத் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே சந்தேகம் உருவாகியுள்ளது. ஆகவே, இந்த சந்தேகத்தைப் போக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப் போல், பிரதமர் நரேந்திர மோடியும் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” என்று பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அஜித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்குவது குறித்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகத்திற்கு பரிந்துரை வழங்கவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
தரவுகளை வெளியிடும் வரை கோவாக்சினை எடுத்துக்கொள்ள மாட்டேன் – தடுப்பு மருந்து நிபுணர் ககன்தீப் கங்
வேலூரில் உள்ள கிறிஸ்டீன் மருத்துவ கல்லூரியின், வெல்கம் அறக்கட்டளை ஆய்வு மையத்தில் பணியாற்றிவரும் முனைவர் கன்தீப் கங், தி வயர் இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில், நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், நிபுணர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தரவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டதைச் சுட்டிக்காடி தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு, உரிய தரவுகள் இல்லாமல் நிபுணர்குழு அனுமதியளித்ததின் பின்னணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.