பீகாரின் புதிய கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி, தேசிய கீதத்தைத் தவறாகப் பாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தக் காணொளியில், மேவலால் தேசிய கீதம் பாடுவதைக் காணலாம், ஆனால் அவர் இடையில் வார்த்தைகளை மறந்துவிடுகிறார்.
ராஷ்டிரிய ஜனதா தளம், மேவலாலுக்கு எதிராகப் பல ஊழல் குற்றசாட்டுகளை எழுப்பியுள்ளது. தற்போது, அக்கட்சி இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது.
भ्रष्टाचार के अनेक मामलों के आरोपी बिहार के शिक्षा मंत्री मेवालाल चौधरी को राष्ट्रगान भी नहीं आता।
नीतीश कुमार जी शर्म बची है क्या? अंतरात्मा कहाँ डुबा दी? pic.twitter.com/vHYZ8oRUVZ
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 18, 2020
ட்வீட்டர் பக்கத்தில் மேவலாலின் காணொளியை வெளியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், “பல ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரிக்குத் தேசிய கீதம் கூடத் தெரியவில்லை. நிதீஷ் குமார் ஜி, உங்களுக்குக் கொஞ்சமாவது மானம் உள்ளதா? உங்கள் மனசாட்சியை எங்கே தொலைத்துவிட்டீர்கள்?” என்று கூறி விமர்சித்துள்ளது.
ये बिहार के नए शिक्षा मंत्री हैं।
कहते हैं, ये जनाब पहले किसी विश्वविद्यालय के वाइस चांसलर थे।
राष्ट्रगान भी नहीं गा पाते।
भ्रष्टाचार के संगीन आरोप इन पर है,सो अलग।
भरतीय लोकतंत्र के इन पापों को कौन धोएगा ?pic.twitter.com/LRbaYVeutK— Sanjay Nirupam (@sanjaynirupam) November 18, 2020
மேவலால் சவுத்ரியை விமர்சித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் நிருபம், “அவர் பீகாரின் புதிய கல்வி அமைச்சர். முன்னதாக அவர் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவரால் தேசிய கீதத்தைப் பாட முடியவில்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்திய ஜனநாயகத்துக்கு நேர்ந்த இந்தப் பாவங்களை யார் கழுவுவார்கள்?” எனத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2017-ம் ஆண்டில், பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதற்காக மேவலால் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டார். “ஐக்கிய ஜனதா தளத்தின் ஊழல் நிறைந்த சட்டமன்ற உறுப்பினர் மேவாலலுக்கு நிதீஷ் குமார் அமைச்சரவை பதவியை வழங்கியுள்ளார். இது கிட்டத்தட்ட 60 மோசடிகளை ஊக்குவித்த நிதீஷ் குமாரின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றது. இந்த மனிதன் ஒரு பதவிக்காக மிகவும் தாழ்வாகச் செல்வார்” என்று ராஷ்டிரிய ஜனதா தளம் சேவையன்று பதிவிட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் (Association for Democratic Reforms) தேர்தல் கண்காணிப்பகமும் (Election Watch), மேவலால் உட்பட நிதீஷ் குமாரின் புதிய அமைச்சரவையில் உள்ள எட்டு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதை உறுதிசெய்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.