மத்திய பட்ஜெட்டை, “குடும்ப சொத்துகள் விற்பனை” என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது, அடிப்படையற்ற குற்றச்சாற்று என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில், தொழில் அதிபர்கள் மத்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், இதற்கு முந்தைய அரசுகளும் தனியார்மய நடவடிக்கையை மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது என்ற தெளிவான கொள்கையை, நரேந்திர மோடியின் அரசு கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2021 : ”இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பட்ஜெட்” – அதானி புகழாரம்
பிப்ரவரி 1ஆம் தேதி, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அத்துடன், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புகள் குறித்து எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன.
அந்த விமர்சனங்களை குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன் “எதிர்கட்சிகள் கூறுவதுபோல் குடும்பத்தின் சொத்து விற்கப்படப்போவதில்லை” என்று கூறினார்.
“குடும்பத்தின் சொத்தை பலப்படுத்த வேண்டும்… பல பொதுதுறை நிறுவனங்கள் தொடர்ந்த செயல்பட முடியாத நிலையில் உள்ளன, சில நிறுவனங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இந்த கொள்கையின் (தனியார்மயம்) மூலம் அவற்றை திறம்பட செயல்பட வைப்பதே எங்கள் நோக்கம். அவை உயர வேண்டும். அவை, வளரும் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவரை வளர வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்
கடந்த காலத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், “சோசியலிச சுமை”, வளர்ச்சியை தடை செய்தது என்றும், பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு, வளர்ச்சிக்கு தேவையான தொழிமுறை நிபுணத்துவம் கிடைக்கவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக, மக்களின் வரிப்பணம், சரியாக செயல்படாத பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், இதுபோன்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை (பொதுத்துறை) குறைப்பதன் மூலமே, நாட்டின் வளம் சரியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யமுடியும் என்றும் கூறியுள்ளார்.
ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், நம்மைப்போன்ற நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவை எந்த வங்கிகள் என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று பதில் அளித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.