Aran Sei

‘சிஏஏ போராட்ட வீடியோக்கள் வேண்டும்’ – சிறையில் உள்ள ஜேஎன்யூ மாணவி கலிதா மனுதாக்கல்

டெல்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாணவி தேவங்கனா கலிதா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் தொடர்பான வீடியோக்களை தனக்கு அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கலிதா சார்பாக வழக்கறிஞர்கள் அதித் பூஜாரி, துஷாரிகா மட்டு, குணால் நெகி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்ட வீடியோக்களை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் – மாணவர் தலைவர் கலிதாவுக்கு ஜாமீனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

இந்த வழக்கு, நீதிபதி கே.கைத் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ, இந்த மனு விசாரணைக்கு தகுந்ததல்ல என்று தன் வாதத்தை முன் வைத்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கலிதாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாமா என்பது குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளதா அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கு தொடர்பாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி தேவங்கனா கலிதா கைது செய்யப்பட்டார். அதற்கு மறுநாளே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. உடனடியாக, குற்றப்பிரிவு போலீசர் கலிதாவை ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர்.

உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

அதைத்தொடர்ந்து, மே 30 ஆம் தேதி, டெல்லியில் உள்ள டர்யாகஞ்ச் என்ற இடத்தில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கலிதா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும், கலிதாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அதைத்தொடர்ந்து, கலிதாவை மீண்டும் கைது செய்த காவல்துறையினர், மதக் கலவரத்தை தூண்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தி, குற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கலிதா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

‘பிஞ்ரா டோட்’ என்ற பெண்களுக்கான அமைப்பை நடத்தி வரும் தேவங்கனா கலிதா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் மகளிரியல் கல்வி மையத்தில் (Centre for women’s studies) இளம் முனைவர் பட்ட ஆய்வாளராகப் படித்து வருகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்