Aran Sei

வரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்

ந்தியாவில் தலித் இயக்கங்களின் பணிகள் மற்றும் வரலாறுகளை ஆய்வு செய்தால் அதில் ‘All India Scheduled Caste Federation’ (AISCF) யின் பங்கு முக்கியமானதாக அமையும். தமிழில் அகில இந்திய பட்டியல் வகுப்பு சம்மேளனம் என்றாலும் பெடரேஷன் என்றே மக்களால் அழைக்கப்பட்டது.

பெடரேஷன் அமைப்பு செயல்பட்ட காலகட்டம் மிக முக்கியமானது ஏனெனில் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு 5 ஆண்டுகள் பின்பு 10 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் அமைப்பு செயல்பட்டது. இந்தக் காலகட்டம் பட்டியல் இன மக்களின் பெரும் சவால்கள் மற்றும் உரிமைகளை பேசும் அதேசமயம் சாதிய இழிவுகளுக்கு எதிரான ஒரு போராட்ட இயக்கமாக பெடரேஷன் அமைப்பின் செயல்பாடுகள் அமைந்தது.

மதுரையில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – நடவடிக்கை தொடருமா?

1942 ஆண்டு ஏப்ரல் 1 தேதி நடந்த கிரிப்ஸ் கூட்டத்துக்கு முன்னதாக டெல்லி சென்ற M.C. ராஜா மார்ச் 30, 31யில் பாபாசாகிப் அம்பேத்கர் மற்றும் அனைத்து பட்டியல் சமூகத் தலைவர்களும் இணைந்து ஒருங்கிணைத்த கிரிப்ஸ் பற்றிய கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். பட்டியல் சமூக மக்களுக்கு ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும். அதற்கு இந்தியா அளவில் பட்டியல் சமூக ஆளுமைகளை அழைத்துப் பேச வேண்டும் என்கிற முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக்கூடத்தில் தமிழகத்திலிருந்து M.C. ராஜா, பேராசிரியர் சிவராஜ், பஞ்சாப்பிலிருந்து கோபால் சிங் மற்றும் வங்காளத்தில் இருந்து ஒரு சில தலைவர்கள் கலந்துகொண்டனர்.

All India Depressed Classes Conference (AIDCC) மூன்றாவது கூட்டம் 1942 ஆண்டு ஜூலை 18ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நம் மக்களுக்கான கட்சி ஒன்று உருவாக்க என்ற தீர்மானம் கொண்டுவந்தனர். அந்தத் தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு பேராசிரியர் N. சிவராஜ் அவர்களை தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

முறைப்படி அதிகார பூர்வமாக நாக்பூரில் 1942 ஆம் ஆண்டு ஜூலை 19ம் நாள் நடந்த பெடரேஷன் (AISCF) கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதில் அகில இந்திய தலைவர் பேராசிரியர் N.சிவராஜ் மற்றும் பொது செயலாளர் ராஜ்போஸ் (செப்டம்பர் மாதம் முதல் ) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தத் தீர்மானம் ஜூலை 19ஆம் தேதி கொண்டு வந்ததால் அதை நாம் அகில இந்திய SCF கட்சியின் நிறுவன நாளாக கருதி கொள்ளலாம்.

பேராசிரியர் N.சிவராஜ் அவர்கள் மார்ச் 18, 1955 ஆம் ஆண்டு பெடரேஷன் அமைப்பு பற்றி உரையில் குறிப்பிடும்போது, 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Madras Depressed Classes Federation (MDCF) என்ற அமைப்புதான் 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட All India Scheduled Castes Federation (AlSCF) என்ற அமைப்பாக மாற்றம் பெற்றது என்று குறிப்பிடுகிறார்.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

1927 ஆண்டு தொடங்கப்பட்ட MDSF யின் தலைவர் ரெட்டமலை சினிவாசனாரும் பொது செயலாளராக N. சிவராஜ் அவர்களும் செயல்பட்டனர். அதே அமைப்பு 1936 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திப்பதால் பெயர் மாற்றி மெட்ராஸ் ஷெடுல்ட் காஸ்ட்ஸ் பார்ட்டி (Madras Scheduled Castes Party) என்று பெயரிட்டனர். MSCP க்கு தலைவர் ரெட்டமலை சினிவாசனாரும் துணை தலைவர்களாக M.C.ராஜா மற்றும் N. சிவராஜ் இருவரும் செயல்பட்டுள்ளனர்.

Madras Scheduled Castes Federation என்று மறுபடியும் 1938 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அப்போதும் தலைவராக ரெட்டமலை சினிவாசனாரும் துணை தலைவராக N. சிவராஜ் அவர்களும் செயல்பட்டுள்ளனர். இதைத்தான் N. சிவராஜ் அவர்கள் MDCF என்ற அமைப்பு பெடரேஷன் அமைப்பாக மாற்றம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

பெடரேஷன் பண்பாட்டு தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் தலித் மக்களை வெகுவாக ஈர்த்தது. செத்த மாட்டை தூக்க கூடாது, பறையடிக்க கூடாது போன்ற இழி தொழில்களைச் செய்யக்கூடாது என்று திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கல்வி சார்ந்து கிராமங்களில் திண்ணை பள்ளிகள் அமைத்தல் இப்படியான செயல்பாடுகள் பட்டியல் மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

சென்னை மாகாணத்தில் 1946 ஆம் ஆண்டு மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்ட பின் நடந்த இரண்டு (1952, 1957) சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 1954 பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி போட்டியிட்ட குடியாத்தம் இடைத்தேர்தல் போன்ற தேர்தல்களை பெடரேஷன் அமைப்பு சந்தித்தது.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

தமிழகத்தில் 1952 முதல் சட்டமன்ற தேர்தலில் வந்தவாசி தொகுதியில் தசரதன் என்பவரும் கடலூர் தொகுதியில் உரிமை ரத்தினம் என்பவரும் வெற்றிபெற்றுள்ளனர். 1957 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் S.R.முனுசாமி என்பவர் பெடரேஷன் சார்பாக நின்று வெற்றி பெற்றார். 1957 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் AISCFயின் தலைவராக இருந்த N. சிவராஜ் அவர்கள் நின்று வெற்றி பெற்றார்.

பெடரேஷன் தமிழக சட்டமன்றத்திலும் மக்களின் மத்தியிலும் குறிப்பாக வட ஆற்காடு பகுதியிலும் ஏற்படுத்திய தாக்கம் அமைப்பு தொடங்கி (ஜூலை 19) 78 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம்மால் உணர முடிகிறது. அரசியல் மற்றும் பண்பாட்டு தளத்தில் பெடரேஷன் அமைப்பு செயல்பட்ட காலம் பட்டியல் சமூக மக்களின் பொற்காலம் என்றே குறிப்பிடலாம்.

கட்டுரையாளர்: அருள் முத்துக்குமரன்

ஓணம் பண்டிகை: பௌத்தப் பண்பாட்டு வரலாறு நூலின் ஆசிரியர்.

சான்றுகள்:
1.பெடேரஷன் எனும் ஒடுக்கப்பட்டோர் இயக்கம்- எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் (காலச்சுவடு, ஏப்ரல் 2020)

2.Last Few Years of Dr. Ambedkar-Nanak Chand Rattu (1997)

3.ambedkarambeth.blogspot.com

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்