Aran Sei

மாவோயிஸ்ட்கள் பிடியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி – ஐந்து நாட்களுக்குப் பிறகு விடுதலை

த்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் இன்று விடுதலை செய்யபட்டார்.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களால் பசகுடா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மன்ஹாஸிற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில், மத்திய பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற மோதலில் 22 வீரர்கள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். அப்போது மான்ஹாஸை மாவோயிஸ்ட்கள் பிடித்துச் சென்றனர்.

காசி கயான்வாபி மசூதியின் கீழ் இந்து கோவிலுக்கான தடயங்கள் உள்ளதா – அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மாவோயிஸ்ட்களின் தண்டகார்ன்யா சிறப்பு மண்டலக் குழுச் செய்தி தொடர்பாளர் விகல்ப் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடத்தப்பட்டுள்ள ராகேஸ்வர் சிங் மன்ஹாஸை விடுவிக்கப் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் பிறகு எங்கள்வசம் இருக்கும் அதிகாரியை விடுதலை செய்வோம். அதுவரை அவர் எங்களிடம் பத்திரமாக இருப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.

மன்ஹாஸ் கடத்தப்பட்டிருப்பதாகச் சிறப்பு மண்டலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக பஸ்தார் வரம்பின் காவல்துறை தலைவர் பி.சுந்தர்ராஜ் தெரிவித்ததை அடுத்து, நேற்று (ஏப்ரல் 7) மாவோயிஸ்ட்களின் தற்காலிக முகாமில் மான்ஹாஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் மாவோஸ்ட்களால் கடத்திச்செல்லப்ப்பட்ட கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் இன்று விடுதலை செய்யபட்டுள்ளார்.

Source : The Indian Express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்