யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்த சிறிது நேரத்திலேயே, அந்தப் பதவிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது
இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பட்டியல் பழங்குடி (ST) பெண் என்ற பெருமையைத் திரௌபதி முர்மு பெற்றுள்ளார். இதற்கிடையில், வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராகப் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் அரசியல் வட்டாரங்களில் ஒப்பீட்டளவில் அறியப்பட்டதாக இருக்கிறது. பாஜகவில் இருந்து விலகி தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். பாஜகவை தற்போது மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்நாடு: பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வருபவருக்கு பாஜகவில் மாநில பொறுப்பு
ஜூன் 21 ஆம் தேதி இரவு முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார். கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு மொத்தம் 20 பெயர்களில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார். மற்ற 19 போட்டியாளர்கள் யார்? ஏன் முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற கேள்வி எழுகிறது.
முர்முவைத் தவிர தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு போன்ற மூத்த தலைவர்களை பாஜக பரிசீலித்தது. சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உய்கே, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, புதுச்சேரி மற்றும் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இப்பட்டியலில் அடங்குவர்.
அப்துல் கலாம் ஒரு தமிழ் இஸ்லாமியர்; பிரதீபா பாட்டீல் ஒரு பெண்; ராம்நாத் கோவிந்த் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவர்களெல்லாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்தவர்கள். ஒரு பழங்குடியினரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதன் வழியே தனக்குப் பலன் இருப்பதாக பாஜக கருதுகிறது.
டெல்லி: 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு முடிவு – ஆம் ஆத்மி உறுப்பினர் குற்றச்சாட்டு
விஞ்ஞானி, பெண், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, அடுத்த ஒரு பழங்குடியினர்தான் சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்று பாஜக முடிவெடுத்தாக நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் தெரிவித்தன.
“2019 இல் ஜார்கண்ட் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. ஜார்கண்ட் மற்றும் ஒடிசா இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை (முர்மு ஒடிசாவில் பிறந்தவர்) தேர்ந்தெடுப்பது பழங்குடியின மக்களிடையே பாஜகவின் பெயரை மீண்டும் பிரபலப்படுத்தும். மேலும், திரௌபதி முர்முவின் பழங்குடி அடையாளம் தெலுங்கானாவின் பழங்குடியின மக்களை ஈர்க்கும். இதனால்தான் அவர் பாஜகவின் தேர்வாக இருந்தார்.” என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறின.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பெயர் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பட்டியலில் முதன்மையாக இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் திரௌபதி முர்முவின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மூன்று மாநிலங்களில் உள்ள பழங்குடி பகுதிகளில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கு பாஜக கையாண்ட உத்தியாக இந்த நகர்வைக் காணலாம்.
‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம் ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
“செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணிவரை வெங்கையா நாயுடுவின் பெயர் முன்னணியிலிருந்தது. இறுதிப் பட்டியலில் ஒரு சிலரின் பெயர்கள் மட்டுமே இருந்தன. ஆரம்ப விவாதத்தில் 20 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன், ஆனால் இறுதி பட்டியலில், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
“பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து சிறிது நேரம் விவாதிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் தனது வேட்பாளரை அறிவித்தவுடன் அவசரம் காட்டியது பாஜக” என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
“அரசியல் வட்டாரத்திலும் மக்களிடத்திலும் அதிக பிரபலமில்லாதவர் சத்தீஸ்கர் ஆளுநர். அவரின் பெயர் இறுதிப் பட்டியலில் எப்படி வந்தது என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை” என்று அந்த வட்டாரம் கூறியது.
திரௌபதி முர்மு 1997-ல் பாஜகவில் சேர்ந்தார். அதற்கு முன் உதவி ஆய்வாளராகவும் (assistant researcher) உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வெங்கையா நாயுடுவின் பெயரை தாண்டி திரௌபதி முர்முவின் பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்பட்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
“கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தங்கள் பெயரைக் கேட்க ஆவலுடன் பலர் காத்திருந்தனர். கட்சி தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்ததும் திரௌபதி முர்மு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். நாங்கள் யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை குடியரசுத் தலைவர் நியமிக்கும் பாஜகவின் நோக்கம் பல்வேறு அரசியலோடு தொடர்புடையது என்று நான் நினைக்கிறேன்” என்று கட்சி வட்டாரம் தெரிவித்தது.
பாஜகவிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின்படி, வெங்கையா நாயுடுவுக்கு இருக்கும் புகழைச் சரிக்கும் நோக்கத்தில் பாஜக இருக்கிறது. தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடைந்திருக்கும் புகழையும் ஈர்ப்பையும் திரௌபதி முர்மு பெறுவார் என்ற நம்பிக்கையில் அவரின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1997 முதல் 2002 வரை இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய கே.ஆர்.நாராயணனுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது தலித் குடியரசுத் தலைவர் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
” ஆரம்ப கட்ட விவாதங்களில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பெயரும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு அது உறுதியாகத் தெரியவில்லை. அவருடைய பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று நான் நினைக்கிறேன், ”என்று அந்த வட்டாரம் கூறியுள்ளது.
thewire இணையதளத்தில் வெளியான கட்டுரை.
தமிழில்: சந்துரு மாயவன்
Draupadi Murmu | பழங்குடி ஜனாதிபதி | துரோகம் செய்ய ஒரு சாக்கு | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.