Aran Sei

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 6)

‘புல்டோசர்நாத்’ என்கிற யோகி ஆதித்யநாத்

மே 2021 இல், டைனிக் பாஸ்கர் (DainikBhaskar) என்ற இந்தி நாளிதழ் கங்கை நதிக்கரையில் கணக்கில் வராத நூற்றுக்கணக்கான சடலங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது. தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது உ.பி.யில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகை அலுவகங்கள் வருமான வரித் துறையினரால் சோதனை செய்யப்பட்டன. இது ஊடகங்களை மிரட்டும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஒரு எதேச்சதிகாரியைப் போல, அனைத்து விமர்சன சேனல்களையும் குறி வைத்துத் தாக்கி,  தகவல்களின்  சுதந்திர பரவலைக் கட்டுப்படுத்துகிறார். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்குகிறார். சமூக ஊடகங்ளில் அவரை விமர்சித்ததற்காக 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)

டாக்டர் கஃபீல் கான் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவத் துறையில் விரிவுரையாளராக இருந்தார். ஆகஸ்ட் 27ஆம் தேதி, மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் தேசிய கவனத்தை ஈர்த்தன. தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிச் சரி செய்த கஃபீல் ஊடகங்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். ஆனால் மூன்று நாட்களாக  ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என உபி அரசு மறுத்ததுடன், கஃபீல் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல வழக்குகள் தொடரப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.  500 நாட்களுக்கு மேல் உ.பி.யில் உள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டார்.  இறுதியாக வேலையில் இருந்தும் நீக்கப்பட்டார்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

“யோகியைச் சுற்றி ஒரு போலி உற்சாகம் உருவாக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அவரை மோசமான பத்திரிகை மற்றும் விமர்சனங்களைக் கொண்டு வரும் எவரையும் நசுக்குகிறார்,” என்கிறார் கஃபீல்.  2021 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறையை வெளியிட்ட பல மருத்துவமனைகள் மீது அடக்குமுறைக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவற்றின் சொத்துக்களைக் கைப்பற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். மே 2020 இல், அவர் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய சட்டங்களையும் இடைநிறுத்தினார்.பணியமர்த்துதல் மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை எளிதாக்கி, தொழிற்சங்கமயமாக்கல் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளைக் கோருவதைக் கடுமையாக்கினார்.

உ.பி. நகரங்களின் உருதுப் பெயர்களையும் அவர் மாற்றியுள்ளார் – முகல் சராய் நகரை  பண்டிட் தீன்தயாள் உபாதயாய் நகர் எனவும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் எனவும், பைசாபாத்தை அயோத்தி என்றும் மாற்றினார். கோயில்களை உருவாக்க அரசு நிதிகள் அதிகம் செலவிடப்பட்டன.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 3)

அவரது ஆட்சியில்  உ.பி.யின் தனிநபர் வருமானம் 2019-20ல் இந்தியாவின் சராசரியில் பாதியாகவும், 36 மாநிலங்கள் மற்றும்  ஒன்றிய பகுதிகளில் 32வது இடத்திலும் உள்ளது. உ.பி.யின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜி.எஸ்.டி.பி) முந்தைய மாநில அரசாங்கத்தின் காலத்தில் 6.92% ஆக இருந்த நிலையில், ஆண்டுக்கு 1.95% மட்டுமே கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2012 உடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த வேலையின்மை 2.5 மடங்கும் இளைஞர்களின் வேலையின்மை கிட்டத்தட்ட ஐந்து மடங்கும் அதிகரித்துள்ளது.

மார்ச் 2020 இல், ஆதித்யநாத், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்களின் பெயர்கள், படங்கள் மற்றும் முகவரிகளை லக்னோ முழுவதும் உள்ள பொது இடங்களில் வைத்து அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தினார். தவிர அண்டை நாடுகளில் உள்ள  இஸ்லாமியர்களைத் தவிர பிற அனைத்து மதத்தினருக்கும் இந்த சட்டம் இந்திய குடியுரிமை வழங்குகிறது. இந்தப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 78 வயதான தாராபுரி கூறுகையில், “எங்களுக்கு உணவு, மருந்துகள்  அளிக்காததுடன்  கண்ணாடிகள் கூட அனுமதிக்கப்படவில்லை,” என்கிறார்.

தங்கள் பின்னடைவை எதிர்த்துப் போராட, உ.பி. அரசாங்கம் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது.  உ.பி., பெரும்பாலும் ‘காவல் ராஜ்’, ‘காட்டு ராஜ்’, ‘புல்லட் ராஜ்’ என்று அழைக்கப்படுகிறது. பயங்கரவாதமும், வன்முறையும் ஆதித்யநாத் அரசின் வழிகாட்டும் கொள்கையாக இருப்பதால்  அவர் ‘புல்டோசர்நாத்’  என்று குறிப்பிடப்படுகிறார்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 4)

“இது அடக்குமுறையின் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாகும். இது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக ஆட்சியின் சட்டமாக இருந்து வருகிறது” என்கிறார் தாராபுரி. “எம்.பி.யாக இருந்த அவர் கோரக்பூரின் வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றததால், அவர் முதலமைச்சரான உடனேயே இடைத்தேர்தலில் அவரது கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறியது, ” என்று ஓமைர் கூறுகிறார்.

ஆனாலும், அவர் பாஜகவின் நட்சத்திரப் பரப்புரையாளராக இருந்து வருகிறார்.  2016 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர் பாராட்டினார், இது உலகளாவிய அரசியலில் கூட்டாளிகளை வைத்திருப்பதாகக் காட்டும் அவரது முயற்சியாகக் காணப்பட்டது.

அவர் இந்து தேசியவாதிகளின் அகண்ட பாரதக் கனவை உறுதியாக ஆதரிப்பவர். உ.பி சட்டப் பேரவையில் அதற்கு ஒப்புதலும் அளித்தார். அகண்ட பாரதம் என்பது பிரிக்கப்படாத இந்தியா. இன்றைய இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், திபெத், இலங்கை, பர்மா ஆகியவை அடங்கிய ஒரு பெரிய காவி இந்துதேசம்.  இது இந்திய துணைக்கண்டத்தில் புவி-அரசியலுக்கான பாரிய அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடியைக் காட்டிலும் தீவிரமானவராகவும், இந்துத்துவா நோக்கத்தில் உறுதியாக இருப்பவராகவும் இப்போது பலர் அவரைப் பார்க்கிறார்கள்.  அவருடைய தலைமையில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள்  நடந்தேறின.  இது அவரை கடந்த இருபது ஆண்டுகளில் இந்துத்துவாவின் மறு உருவமாக மாற்றியது.

ஆதித்யநாத்தை மோடியின் வாரிசு என கூறுகிறார்கள். “அவர் வெற்றி பெற்றால், நமது அரசியல் சாசனம் தூக்கி எறியப்பட்டு இந்து மேலாதிக்கம் திணிக்கப்படும். ஜனநாயகம் இருக்காது எதேச்சதிகாரம் மட்டுமே இருக்கும்” என்கிறார் தாராபுரி.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 5)

ஒரு எதேச்சதிகாரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமாக ‘மக்கள் உங்களுக்குப் பயப்படும்போது, நீங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துகிறீர்கள் ‘ என்ற ஒரு கொள்கையை அவர் உருவாக்கியுள்ளார்.  அவரது அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு வெட்கப்படவில்லை. தண்டிப்பதிலும், எதிரிகளை அகற்றுவதிலும் மகிழ்ச்சி அடைகிறது. புதிய சட்டங்கள், தண்டனை நடவடிக்கைகள், வலுக்கட்டாயம் மற்றும் கொள்கைகள் மூலம், அவர் இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறார்.

அவரைச் சுற்றியுள்ள வழிபாட்டு முறை நம்புவதற்காகவோ அல்லது  ஏதோ காரணத்திற்காகவோ வடிவமைக்கப்படவில்லை. மாறாக அவரது தலைமைத்துவத்தை கேள்வி கேட்கும்,  அவரது வழிபாட்டு முறைக்கு எதிராகச் செல்பவர் எவரையும் அது அழிக்கிறது. மக்கள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை அறிந்து சுய-தணிக்கை செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 27%  பேர்  வறுமையில் வாழ்கிறார்கள்.  உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிக அதிகமாகும்.

“வளர்ச்சி அல்ல வகுப்புவாத விஷம்தான் மீண்டு வருவதற்கு  வழிவகுக்கும் என புரிந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அவரது வாழ்க்கைப் பாதை இப்போது வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது” என்கிறார் சுபாஷினி.

வாரணாசி மற்றும் மதுரா நகரங்களை ராமஜென்மபூமியைப் போலவே மாற்றப்போவதாக உறுதியளித்து, ஒரு இந்து துறவியாக, அவர் இப்போது பயனுள்ள அரசியலமைப்பு வரம்புகள் இல்லாமல் முழுமையான அதிகாரத்தை அனுபவித்து வருகிறார்.

“உ.பி., சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளது. அவர் தேசிய அரங்கிற்கு வந்தால், இந்தியாவை ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் கொண்ட ஒரே மாதிரியான இந்து சமுதாயமாக உருவாக்க அதே வழிமுறைகளைப் பயன்படுத்துவார்” என்கிறார் சுஷில்.

முற்றும்…. 

South asian women in media இணையதளத்தில் நேஹா தீட்சித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்