Aran Sei

லட்சக்கணக்கான மக்களோடு மதம்மாறிய அம்பேத்காரை என்ன செய்வார்கள் வலதுசாரிகள்? – சத்ய சாகர்

நான் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டும். நான் பலமுறை மதம் மாறியிருக்கிறேன் என்றும், ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொன்றுக்கும் அதிலிருந்து மற்றொன்றுக்கும், முடிவில்லாமல். நான் அதை வெறுமனே விரும்புகிறேன்.

சில நேரங்களில் நான் ஒரு சிந்தனையின் ஆற்றலாலும், ஒரு அற்புதமான புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மாற்றப்பட்டேன். அல்லது சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படத்தைப் பார்ப்பதனாலோ அல்லது ஒரு பாடலைக் கேட்பதன் மூலமாகவோ (குறிப்பாக முகமது ரஃபி சாஹேப் பாடியது) வலிந்து ஈர்க்கின்ற  ஆற்றலின் வல்லமையால் மாற்றப்பட்டேன்

ஒரு அற்புதமான ஆளுமையின் வசீகரத்தால் நான் பெரும்பாலும் உண்மையான விசுவாசியாக மாறினேன். நான் பூமியில் அவர்கள் மூலம் ஆன்மீக நிவாரணத்தைப் பெற்றேன். நான் சொர்க்கத்திற்கான எனது பயணத்தை காலவரையின்றி ஒத்திவைத்தேன்.

பணத்தின் வசப்படுத்தும் மோகத்தால் நான் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டேன் – குறிப்பாக அமெரிக்க டாலர் மற்றும் சரியான தொகையில் நாணயம் வழங்கப்படும் போது, மிகவும் நான் மாற்றப்பட்டேன் என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதையொட்டி நானும் என்னுடன் இருந்த பலரை – குடும்பத்தினர், அண்டை வீட்டார், வகுப்புத் தோழர்கள், முற்றிலும் அந்நியர்கள் என பலரை மாற்றிவிட்டேன். மரங்களை நடுவது முதல் முதலாளித்துவத்தை வீழ்த்வது வரை பல காரணங்களால்  நான் மறுபிரவேசகமாக இருந்தேன். இந்த நாட்களில் நான் எனது குழந்தைகளை ‘சர்ச் ஆஃப் ஸ்டாப் ஷாப்பிங்கில்’ சேர வைக்க முயற்சிக்கிறேன் – (தோல்வியுற்றது) – இது மால்களையும், அமேசான் போன்ற இணைய வழி (ஆன்லைன்) சில்லறை விற்பனையாளர்களையும் பிசாசின் முகவர்களாகப் பார்க்கிறது.

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

‘இந்து மதத்தின் ‘தங்களைத் தாங்களே சுயமாக நியமித்தக் கொண்ட சில சாம்பியன்கள் எழுப்பும் சத்தத்தால் நான் முற்றிலும் குழப்பமடைந்தேன். அதனால்தான், இந்தியாவில் மதமாற்றம் ஒரு பிரச்சனையாக இருப்பதைப் பற்றி,  நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொடூரமான சட்டங்களை இயற்றியதைத் தவிர, அவர்களின் கோழைத்தனமான குண்டர்கள் தேவாலயங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். போதகர்களை அடித்து நொறுக்கினர் மற்றும் கிறிஸ்தவர்களை கடுமையான விளைவுகளைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர் – வெறுமனே கிறிஸ்தவர்களாக இருப்பதற்காகவே!

கடந்த இரண்டு பதாண்டுகளாக இந்தியாவின் இஸ்லாமியர்கள் இன்னும் அதிகமாக மிருகத்தனமாகத்  தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு வகையான ‘ஜிஹாத்’ மூலம் இஸ்லாமியரல்லாதவர்களை மதம் மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது பறக்கும் வண்ணங்களாக காதல் முதல் சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரை சிறந்து விளங்குகிறது. பண்டைய காலங்களிலிருந்தே  மக்களை ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்கு மாற்றுவதும், ஒரு மதத்திலிருந்தும் இன்னொரு மதத்திற்கு மாற்றுவதும் இந்திய வரலாற்றின் முக்கிய அங்கமாக இருக்கும்போது, கிறிஸ்தவர்களையோ அல்லது இஸ்லாமியர்களையோ மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ஏன் குறிவைக்க வேண்டும். இது மீண்டும் உண்மையிலேயே புதிராக உள்ளது.

உண்மையில் இந்தியாவில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான மதமாற்ற இயக்கம் பிராமணியத்தின் ஆதரவாளர்களால் (சனாதன தர்மம் என்றும் அழைக்கப்படுகிறது) மேற்கொள்ளப்படுகிறது. மிகவும் இறுக்கமாக பாதுகாக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட சடங்குகள், நம்பிக்கைகள், கட்டுக்கதைகள். எல்லாவற்றிற்கும் மேலாக, பிராமணியத்திற்கான உத்வேகமான வேத கலாச்சாரம் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள பஞ்சாப் பகுதியில் உருவானது என்றால், அது மதமாற்றத்தின் மூலம் இல்லாவிட்டாலும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் எவ்வாறு சென்றடைந்தது? இந்த நாட்டில் உள்ள உள்ளூர், பூர்வீக கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் எவ்வாறு ‘இந்து மதம்’ என்று அழைக்கப்படும் கற்பனையான, ஒரே குடையின்கீழான கட்டமைப்பில் இணைக்கப்பட்டன. இல்லையெனில் இத்தகையச் செயல்களில் உள்ள மதமாற்றத்தின் மூலம் எது?

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

நிச்சயமாக பல நூற்றாண்டுகளாக இந்த மாற்றம் அனைத்தும் வெறும் தூண்டுதலின் வற்புறுத்தலினால் மட்டும் செய்யப்படவில்லையா? பிராமணர், க்ஷத்திரியர்கள் மற்றும் பனியாக்களுக்கு இடையேயான கூட்டணியில்,’ மக்கள் தங்கள் பிரார்த்தனைகள், சடங்குகள் மற்றும் கடவுள்களை கூட மாற்றுவதற்கு உறுதிப்படுத்துவதில் வன்முறையான பலாத்காரம் மற்றும் லஞ்சஊழல் இரண்டும் முக்கியப் பங்கு வகித்தன என்பது இதன் அடிப்படையில் தெரிகின்றது. ‘

பிராமணியத்தின் பிரதான பூசாரிகள் – பெரும்பாலும்” பசு பெல்ட்” என்று சொல்லக்கக்கூடிய இந்தியாவிலிருந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அனைத்து இந்துக்களுக்கும் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் அல்லது உடுத்த வேண்டும், அவர்களின் மகள்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும், எந்த தெய்வங்களை வணங்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவது இன்றுவரை தொடர்கிறது. அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். நாட்டின் ஆதிவாசி பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்று அழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் சொந்த மதங்கள் மற்றும் பாரம்பரியங்களை மறுக்கிறார்கள்.

அதற்காக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர், நான்கு உன்னத உண்மைகள் மற்றும் நிர்வாணத்திற்கான எண்வழிப் பாதைப் பற்றிய தனது செய்தியை உரையாக நிகழ்த்தியப் (பிரசங்கித்த) பொழுது, அவர் பொதுமக்களையும் தனது நம்பிக்கைக்கு மாற்றவில்லையா? ஒருவித மதமாற்ற செயல்முறை நடைபெறாமல், இந்தியாவில் சமண மற்றும் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் எப்படி வந்தார்கள் என்று யோசித்துப் பார்த்தால். மகாவீர் அல்லது குருநானக் மத மாற்றத்தை மேற்கொள்ளாமல் இவை நடந்திருக்குமா? அவர்கள் மத மாற்றத்தை  மேற்கொண்டதற்காக ‘குற்றவாளியாக’ இருப்பார்களா, அது எப்படியிருந்தாலும் என்ன அர்த்தம்?

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

மிக சமீபகால வரலாற்றில், 1956ல், டாக்டர் பி. ஆர்.  அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியபோது, லட்சக்கணக்கான தலித்துகள் அவரைப் பின்பற்ற தூண்டியபோது, தற்போதைய மதமாற்றத் தடைச் சட்டங்களின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டாமா? அமித் ஷா அல்லது யோகி ஆதித்யநாத் ‘மத மாற்றம்’ குற்றச்சாட்டில் பாபாசாகேப் மீது வழக்கு பதிவு செய்திருப்பார்களா?

எனவே, நான் சொல்ல முயற்சிக்கும் முக்கிய (கருத்திற்கு) புள்ளிக்கு வருகிறேன். இந்தியாவின் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ இதுவரை யாரும் செய்யாத எதையும் செய்யவில்லை. மதமாற்றம் என்பது முற்றிலும் இந்திய பாரம்பரியத்தில் – மேலும் அனைவரையும் மாற்ற முயற்சி செய்து மாற்ற அனைவருக்கும் உரிமை உண்டு என்பதே.

மதமாற்றம் என்பது அடிப்படையில் வெவ்வேறு செயல்முறை அமைப்புகளின் மக்கள் தங்கள் நம்பிக்கைகள், உணர்வுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தார்மீக அல்லது பண்பாட்டு (கலாச்சார) நெறிமுறைகளை – மதம் –  மாற்றுவதற்கான பல்வேறு வழிகளில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதும் மற்றும் செல்வாக்கு செலுத்துவதுமாகும். ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும், விளம்பரதாரரும் தொடர்ந்து தனது பார்வையாளர்களைத் தங்கள் பொருள்களின் மீதான வழிபாட்டுக்காகவும்,   நம்பிக்கையை பெருக்குவதற்காகவும் மாற்ற முயற்சிக்கிறார்கள்.  தங்கள் கோகோ -கோலாவிலிருந்து பெப்சிக்கு மாற்றுகிறார்கள். இது மிகவும் சாதாரணமான செயலாகும். அதைத் தடுக்க நினைப்பதைக் கூட, அதை ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றுவது, அதிக அளவிளான மனச் சிதைவின் அறிகுறியாகும்.

இந்தியாவில் இப்போது உண்மையில் என்ன நடக்கிறது என்றால், உயர்சாதி இந்துக்களில் ஒரு பிரிவினர் நாட்டில் உள்ள மற்ற அனைவரிடமும், மற்ற அனைவரையும் மதம் மாற்றும் உரிமை அடிப்படையில் தங்களுக்கு மட்டுமே உண்டு என்றும், போட்டியாளர்களே இருக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்! அவர்களுக்கு இது மத மாற்றம் மட்டுமல்ல, ஏனென்றால் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், ஜனநாயகவாதிகள், மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் இந்திய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் செய்யும் அரசியல் மாற்ற நடவடிக்கையை இந்த மக்கள் விரும்புவதில்லை.

அவர்கள் விரும்புவது, அவர்கள் பெறுவதற்கு  அருகாமையில் உள்ளது. அனைத்து இந்திய குடிமக்களின் வாழ்க்கை மற்றும் மறுவாழ்வு இரண்டையும் தீர்மானிக்கும் சவாலற்ற அதிகாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளனர். இந்தியச் சூழலில் இதன் அர்த்தம் என்னவென்றால், மகாராஷ்டிர பிராமணர்கள், குஜராத்தி பனியாக்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் க்ஷத்ரியர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆளும் தெய்வங்களாக இருக்கும் மதகுருமார்களின் ஆட்சியை நிறுவுவதாகும். இது மிகப் பெரிய அளவிலான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஆனதாகும். இது இந்தியாவின் மிகப்பரந்த  பகுதி மக்களையும் – மத சிறுபான்மையினரையு மட்டும் அல்ல – விகிதச்சாரத்தில்  பெரும்பாலான மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி விடும்.

அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மத நம்பிக்கைகள் மீது உண்மையான பக்தி கொண்டவர்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்படும்  மறு மொழி (நான் சந்தித்தவர்களிடையே பெரும்பாலாக நாத்திகர்கள் உட்பட, ஆன்மீகத்தில் உள்ளவர்கள்) அவர்களுக்குப் பிரசங்கம் செய்வதற்கும், மதம் மாறுவதற்கும், மதம் மாற்றுவதற்கும் அவர்களின் உரிமைக்களைக்காக்க மாறுவோம், மதம் மாற்றுவோம் என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும் . போராடுவதுதான் நமது அடிப்படை மனித உரிமை.

நாம் எதிர்க்கத் தவறினால், இன்று அதிகாரத்தில் இருக்கும்  கொடுங்கோல் சர்வதிகாரிகளிடம் நமது சொந்த சரணடைதல் மட்டுமல்ல, நம் கடவுள்களும் சரணடைவதைக் குறிக்கும்.  உண்மையான ஆன்மீகத்திற்கு இது  விருப்பமானதல்ல.

எனவே நாம் அனைவரும் முன்னோக்கிச் சென்று – வெறுப்பை அன்பாகவும், துஷ்பிரயோகத்தை பிரார்த்தனையாகவும், விரக்தியை நம்பிக்கையாகவும் மாற்றுவோம்.

கோபத்தில் பச்சாதாபம், பிரிவில் ஐக்கியம் மற்றும் துன்பத்தில் ஒற்றுமை .

Countercurrent இதழில் சத்ய சாகர் எழுதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம் 

தமிழில் – தேவராஜன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்