Aran Sei

அமெரிக்க மோடியும் இந்திய ட்ரம்பும் – வீழும் ஜனநாயகம்

அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர் துப்பாக்கிசூட்டில் பலியாகியுள்ளார்கள் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ட்ரம்ப் பல்வேறு குற்றசாடுகளை எழுப்பினார். தேர்தல் முடிவுகளை மாற்ற சொல்லி அதிகாரிகளை மிரட்டிய ஒலிநாடா ( audio tape) வெளிவந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தொடர்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய ட்ரம்ப் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்றார். அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்க பாராளுமன்றம் ட்ரம்ப் ஆதரவாளர்களால் முடக்கப்பட்டு பெரும் கலவரம் வெடித்துள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தை காலி செய்ய நிர்பந்தம் – சட்டத்தை மீறும் மத்திய அரசு

இந்நிலையில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாய திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய விவசாயிகள் குளிரில் போராடி வருகிறார்கள். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும், தீர்வு எட்டாத நிலையில் விவசாயிகள் தங்களுடைய உரிமைக்காக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களை ஆளும் பிஜேபி அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. காலிஸ்தான் போராட்டம் என்றும் நாட்டை பிளவு படுத்துவதற்கான சூழ்ச்சி என்றும் வெளிநாட்டு அமைப்புகள் இதில் புகுந்து விட்டார்கள் என்றும் ஷர்ஜீல் இமாம் போன்ற அமைப்புகள் நடத்துகின்றன என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவருவேன் என இந்துத்துவா ஆதரவாளரான ராகினி திவாரி பகிரங்கமாக மிரட்டினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு 8 வயது குழந்தை கூட்டு வல்லாங்கு செய்தவர்களின் கைதை எதிர்த்து பாஜக வினர் கஷ்மீரில் ஊர்வலம் போனார்கள். காஷ்மீரில் காவல்துறையினரின் விதிமீறல் நடந்து வருகிறது என்று குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

மோடியை விமர்சித்து பாடல் – அம்பேத்கரிய பாடகர்களுக்கு கொலை மிரட்டல்

பாஜகவை சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழலாம், ஆனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும். மக்களின் இறை நம்பிக்கை சார்ந்தது என்று சொன்னார். உத்திரப்பிரதேசத்தில் மாட்டுக்கறியை வீட்டில் சமைத்து உள்ளதாக கிளம்பிய வதந்தியின் பேரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். உலகமே பார்க்க பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட்து. அவ்வழக்கில் தொடர்புடைய யாரும் தண்டனை பெறவில்லை. திட்டமிடப்பதாத ஊரடங்கினால் தொழிலாளர்கள் ரத்தம் வடிய வடிய நடந்தே சொந்த ஊருக்குப் போனார்கள். பலர் பாதி வழியில் செத்தும் போனார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பிரதமர் விளக்குப் பிடிக்கவும், மணியடிக்கவும் கோரினார். பிரதமரின் அறிவார்ந்த? சிந்தனையை ஏற்று மக்கள் இரவில் விளக்குப் பிடித்தனர்.

மக்களிடம் எந்த வாக்கெடுப்பும் நடத்தாமல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மக்களின் எதிர்ப்புக்கிடையில் நீக்கியது மோடி அரசு. தலித்துகளும் இஸ்லாமியர்களும் இல்லாத அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்கான எல்லா வேலைகளையும் கச்சிதமாக செய்கிறது பாஜக

இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் புதிய பாராளுமன்றத்தை மோடி அறிவித்தார். ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ள பழகாத ஒரு இயக்கத்திலிருந்து வந்த பிரதமர் பாராளுமன்ற கட்டிடம் கட்டுவது நகைமுரண். ஜனநாயக சக்க்திகளின் குரலுக்கு செவிசாய்க்காமல் ராமர் கோயில் கட்டும் பூமி பூஜைக்கு பிரதமர் போனார்.. தலித்துகளும் சிறுபான்மையினரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இந்து மத அடிப்படைவாதிகளால் தினம் தினம் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அடிப்படைவாதிகள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஆளும் கட்சியின் சித்தாந்தத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

அம்பேத்கரை விமர்சனப்பூர்வமாக அணுகினால் சாமி குத்தமா? – ஆனந்த் டெல்டும்டே

தலித் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை நிறுத்தியது. தொடர்ச்சியாக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பின்பற்றபடாதது மட்டுமல்லாமல் சாதிய பாகுபாடுகள் இருப்பதும் வெளிச்சமாகியுள்ளது. தலித் மாணவர்களும் சிறுபான்மையினரும் கல்வி நிலைய பாகுபாட்டின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக பிஎச்டி மாணவர் ரோகித் வெமுலாவின் மரணத்தில் அதிகார வர்கத்தின் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரோகித் ஒரு தலித்தை இல்லை என்று ஆளும் வர்க்கம் தெரிவித்தது.

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன், பாத்திமா லத்தீப் போன்றோர் உயர்கல்வி நிலையங்களில் பாகுபாட்டின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது குறித்து அக்கறை கொள்ளாமல் உயர்சாதி? யினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு மத்திய அரசு வழங்கியது. அரசை நோக்கி கேள்வி எழுப்பினால் இஸ்லாமிய கைக்கூலி, கிருத்துவ கைக்கூலி என்று ஆளும் வர்க்கம் சொல்கிறது. ‘இந்தியன்’ ‘பாரத் மாத்தாக்கி ஜே’ போன்ற சொற்கள் சாவுமணியைப் போல் தலித்துகளுக்கும் மத சிறுபான்மையினருக்கும் கேட்கிறது. கோத்ரா தொடர்வண்டியை எரித்து 57 பேர் சாவுக்கு காரணமானவர்களே அமெரிக்காவின் ஜனனாயகத்திற்காக கவலை கொள்கிறார்கள். ஊர் எரியும் போது பிடில் வாசிக்கும் நீரோ மன்னன் போல் இந்தியாவிலும் சில விரிமார்பன்கள் இருக்கிறார்கள். அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க ஜனநாயகத்தைச் சிதைப்பது போன்றே மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல மோடியும் ஜனநாயகத்தைச் சிதைக்கிறார்

– சந்துரு மாயவன்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்