ஜூன் 15 ம் நாள் கொடூரமான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இளம் செயற்பாட்டாளர்களுக்கு பிணை விடுதலை வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரத்தின் போது அரசின் நிலைத்தத்தன்மையை அச்சுறுத்தும் வகையில் வன்முறையைத் தூண்டும் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எதிர்ப்புகளை அடக்கும் ஆர்வத்தில், அரசின் மனதில் பயங்கரவாதத்திற்கும், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பிற்கும் இடையிலான “மெல்லிய கோடு” மங்கலாகி விடுகிறது. இதே மனநிலைத் தொடர்ந்தால், அது ஜனநாயகத்திற்கு கவலைதரும் நாளாகவே இருக்கும்,” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நாம் அறிந்தது போல, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, இந்த முடிவு “விபரீதமானது” என்றும், பிணை வழங்கியது வேண்டப்படாத ஒன்று என்றும் கூறி அரசு தரப்பு உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. உச்சநீதிமன்றம் பிணை உத்தரவை அப்படியே வைத்துக் கொண்டு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு “ஆச்சரியத்தைத்” தருவதாகக் கூறி உள்ளது. இந்தியா முழுவதும் சிக்கலை உருவாக்கும் என உயர்நீதி மன்றம் கருதுவதால் உபா சட்டத்தை முறையாகப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் எண்ணுகிறது. ஆகவே, வழங்கப்பட்ட அறிவிக்கைகளுக்கான பதில்கள் பெறப்படாத வரை மற்றும் முக்கியமானவற்றை ஆராய்ந்த வரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஒரு முன்னுதாரணமாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்
ஜி7 ஜனநாயக நாடுகளின் மிக விரிவான மற்றும் முன்னோடியில்லாத கூட்டு “திறந்த சமூகங்கள்” அறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்நிகழ்வுகள் நடந்துள்ளன. மேற்கண்ட அறிக்கை “நிகழ்நிலை மற்றும் நிகழ்நிலையற்றவை”, “கருத்து வெளியிடும் சுதந்திரம்”, “கூட்டுவதற்காக உரிமை” மற்றும் அமைதிவழி “எதிர்ப்புப் போராட்டம்” ஆகியவற்றை ஜனநாயகத்தின் அடிப்படை என பேசியது. மேலும்
“அரசியல்ரீதியாக தூண்டப்பட்ட” இணையத்தின் மீதான தடைகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அது கூறுகிறது. ஆர்வம் ஊட்டும் வகையில், பிரதமர் இந்த விழுமியங்கள் யாவும் இந்தியாவின் நாகரீக நெறிமுறைகளில்” உள்ளார்ந்திருக்கின்றன என அறிவிக்கிறார். இது மிகவும் மோசமான நிலையில் உள்ள பெரும்பாலான இந்திய பெண்கள் மற்றும் தலித் மக்கள் தொகையினர், சொல்லப்போனால் 60% மக்கள் வெளிப்படையாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒரு விவாதம்.
கொரோனா மூன்றாவது அலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது – ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்
எடுத்துக்காட்டாக, இந்தத் தலைப்பிட்ட தனது புத்தகத்தில் அமர்த்தியா சென் கூறுவது போல இந்தியாவில் எத்தனை விழுக்காடு இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக “விவாதிக்கும் இந்தியர்களாக” இருக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது.
அது எப்படி இருந்தாலும், எதிர்ப்பு கருத்துக்களை கண்டுபிடிப்பதில் மோடி அரசு காட்டிய கடப்பாடு ஒரு சிக்கலான கேள்வியாகவே உள்ளது. இந்திய அரசின் ஏற்புகள் இருந்த போதிலும் நாட்டின் உள்ளேயும், வெளியிலும் உள்ள ஜனநாயகவாதிகள் அந்த கவலையுடன் அடிக்கடி பேசி வருகின்றனர். உண்மையில், அண்மை மாதங்களில், இந்தியாவின் பல நீதிமன்றங்கள் “தேசத்துரோக” குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளன. எடுத்துக் காட்டாக, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை தாங்கி நிற்கும் அரசியலமைப்புக் கொள்கைகளை முன்னிறுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக போடப்பட்ட தேசத் துரோக வழக்குகளை, இன்றைய அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகச் செயலுக்கு இணையானவை அல்ல என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு ரத்து செய்துள்ளன. இதே போல உச்சநீதிமன்றமும் தேசத்துரோகம் பற்றி ஒட்டு மொத்தமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இப்போது உச்சநீதிமன்றம் உபா சட்டம் குறித்தும் அதன் சட்டபூர்வ பொருந்துதலை குறித்து விசாரிக்க முடிவெடுத்துள்ள நிலை, அரசியலமைப்பு ரீதியான ஜனநாயக உள்ளுணர்வுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பல லட்சக்கணக்கான குடிமக்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் தில்லி உயர்நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல உள்ள முக்கியமான உரிமை, குடிமக்களின் ஜனநாயக உரிமைக்கும் எதிர்ப்பு அல்லது மனச்சோர்வு இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்ற அரசின் மிகுந்த வற்புறுத்தலுக்கும் இடையிலான சமநிலையை மீட்டெடுக்க கவனம் கொள்ளும் என நம்பலாம்.
உண்மையில், பழைய கொடூர தடா (TADA) சட்டம் இறுதியில் திரும்பப் பெறப்பட்டதை நினைவு கூர்ந்து, உபா சட்டம் விரும்பப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய ஜனநாயகம் சீனாவிலிருந்து தன்னைத் தானே ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஜி 7 மாநாட்டில் ஏற்றுக் கொண்ட ஒரு எடுத்துக்காட்டைப் பின்பற்ற வேண்டுமென்றால், அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கும், பொருளுக்கும் விரோதமான கொள்கைகளை எதிர்ப்பது சரியானது என நினைக்கும் குடிமகன் மீது சகிப்புக் தன்மையை காட்டுவது மற்றும் நமது சட்டங்களின் தரம் ஆகிய இரண்டிலும் வேறுபாடு வேரூன்றி இருக்க வேண்டும். அரசுக்கு எதிரான செயல்பாடாக இல்லாத, வன்முறை இல்லாத “கருத்து சுதந்திரத்தின்” கண்காணிப்புக் குழுக்களாக செயல்படும் அனைத்து அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தையும் அந்த மறு சீரமைப்புத் தாங்கி நிற்க வேண்டும். உறுதியுடனும் அக்கறையுடனும் அதன் நோக்கம் நிறைவேற்றப்படாவிட்டால் ” திறந்த சமூகங்கள்” பொருளுடையதாகவும், சாரமுடையதாகவும் இருக்க முடியாது.
ஜனநாயகம் என்பது அவ்வப்போது வாக்குச் சாவடிக்கு வருகைத் தருவது மட்டுமல்ல, ஒரு நிலையான அடிப்படையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் சிறந்த நலன்களில் அதிகார கட்டமைப்புகளை விசாரிக்கும் குடிமக்களின் உரிமைக் குறித்த ஆழமான மற்றும் புனிதமான நம்பிக்கை இருப்பதும் ஜனநாயகத்தில் அத்தியாவசியமானது ஆகும்.
கறுப்பினத்தவரைக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அச்சம் அல்லது அனுகூலமின்றி சட்டங்கள் பொருந்தக் கூடிய செல்லுபடியாக்கலுடன் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனில் – ஒரு விடயம், எடுத்துக்காட்டாக, வடகிழக்கு தில்லி கலவர நிகழ்வில் பரிதாபகரமான குறைபாடு காணப்பட்டது. அங்கு அப்பட்டமான பாகுபாட்டின் நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உண்மையில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை பேசியவர்களை பார்க்கும் போது , அவர்களில் பலரும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியபடி எந்த ஒரு வலுவான ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த காரணங்களால், உச்சநீதிமன்னறத்தின் கையில் உள்ள வழக்குகளை கையாளும் அதன் நடைமுறைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் விடயத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக வகைகளை, அது குடியரசை நெருக்கமாக மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர் கொள்ள தேவையான வடிவங்களைக் காண தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள குடிமக்கள் எவ்வாறு முன் வருவார்கள் என்பதில் உடனடியாக இல்லை என்றாலும் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
அண்மைக்கால நிறுவன மற்றும் கூட்டு அனுபவம் சாதாரண குடிமகன் உச்சநீதிமன்றத்தில் தனது பெரும் நம்பிக்கையை வைத்திருக்க அவனை சமாதானப் படுத்தி உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
www.thewire.in இணையதளத்தில் பத்ரி ரெய்னா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.