Aran Sei

கண்காணிப்பின் அரசியல் – அமேசானும் தொழிலாளர் பிரச்சினையும்

தொழிலாளர்களின் முதுகில் ஒரு பெரும் பெருவணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய கோடீஸ்வரரான ஜெஃப் பெசோஸ் இந்த வாரம்  அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார். மின்னணு வணிகம், தளவாடங்கள், மேகக் கணிமை (cloud technology), பொழுதுபோக்கு, மளிகை மற்றும் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் தனது விரிவான கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதில் பெசோஸ் ஒரு நரகமயமான பார்வையை நம்பி இருந்தார். அதில் ஊழியர்கள் இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறார்கள், மதிப்பீடு செய்யப்படுகிறார்கள், உயர் அழுத்த மற்றும் கடுமையான வேலை நிலைமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்தச் செயல் முறை மிகவும் மனிதாபிமானமற்றது. நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் அறிவித்தபடி,” அதன்  நிர்வாகிகள் இனி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் போய்விடுவார்களோ என்று அச்சப்படும் அளவு அமேசான் தொழிலாளர்களை எரித்து வளர்ந்தது.  ஒரு உண்மையான மேலாளர் புறக்கணித்து விடக்கூடிய சிறு தவறுகளுக்கும் கூட அமேசான் ஓட்டுநர்கள் ஒரு செயலியால் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர் என ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

வாழ்க மக்கள் தலைவன் சுலைமான் அலி அகமது!’ – ‘மாலிக்’ பேசும் அரசியல் என்ன?

அமேசான் பல்வேறு வழிகளில் தனது ஊழியர்கள் மீது வைத்துள்ள தீவிரமான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையால் ஊழியர்களுக்கு  எந்த அளவு மன அழுத்தத்தை அதிகரித்து வருகிறது என்ற விவரங்கள் அடங்கிய “தி அமேசான் பனொப்டிகான்(அமேசானின் உச்ச கண்காணிப்பு)” என்ற கட்டுரையை யூஎன்ஐ குளோபல் யூனியன் இந்த வாரம் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் இந்தக் கண்காணிப்புகள் முற்றிலும் புதியவை அல்ல. ஆனால் அமேசானில் ஒருங்கிணைந்த பணியிட தொழில்நுட்பம், அண்மை காலத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத, ஒரு கட்டுப்பாடுமிக்க சூழலை உருவாக்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் ஊடுருவும் போர்தந்திரங்கள் மின்னணு வணிகத்தில் நிறைவு செய்யும் மையங்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் கூட முன்னர் காணப்படாத வேகத்திலும், அளவிலும் அதி விரைவாக பரவுகிறது.

எடுத்துக்காட்டாக, கால் சென்டர் தொழிலில், அதி விரைவில் தொலைப்பேசி வேலையை அறிமுகப்படுத்தியதுடன், நிறுவனங்கள்  பணியாளர்களின் இல்லங்களில் மிகவும் வசதியான கண்காணிப்பு அமைப்பு முறைகளை நிறுவின. அதிலும் முக்கியமாக தங்கள் தலைமையிடத்திலிருந்து பணியாளர்களின் படுக்கை அறைகள், சமையலறையில் அவர்கள் நல்வாய்ப்பு பெற்றவர்களாயின் வீட்டு அலுவலகங்களிலும் கூட உச்ச கண்காணிப்பை நிறுவி இருக்கிறார்கள்.

“வங்கிகளை தனியாருக்கு வழங்குவதே அரசின் கொள்கை” – நிதித்துறை செயலாளரின் கருத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கண்டனம்

நல்ல பிடி?

இந்தப் பணியாளர்கள் இடைவெளியின்றி கண்காணிக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. பணிநேரம் முழுவதும், சிலர் காணியின்(camera)  மூலம் கண்காணிக்கப் படுகிறார்கள். இது வீடுகளில் அவர்களுடைய தனிப்பட்ட அன்றாட நடவடிக்கையிலும் நுழைய வேண்டியிருக்கிறது.

தொழிலாளர்கள்  காணிகளின் கண்காணிப்பில்  வாரத்திற்கு 40 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்யத் தேவை இல்லை எனக் கருதி படுக்கையறையில் படுத்துக்  கொண்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்பது அடுத்தக் கேள்வி. பணியாளர்கள் கால்வலிக்க நின்று இதற்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர்.

‘நூற்றாண்டுகளாக நாம் கட்டியெழுப்பியதை, சில நொடிகளில் அழிக்கப்பட்டது’ – மோடி அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

பிரான்சின் மிகப்பெரிய கால் சென்டர் நிறுவனமான டெலி பெர்ஃபாமென்ஸ் நிறுவனத்திலும் அமேசானிலும் விற்பனை மிக அதிகமாக உள்ளன. டெலி பெர்ஃபாமென்சில் அது ஆண்டிற்கு 80% ஆகவும், அமேசானில் 150% ஆகவும் உள்ளது. எனினும் எல்லா இடங்களிலும் மனிதநேயமற்ற தொழில்நுட்பம் ஒரு விதியாக அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய பணிகளை விட்டு விலகுவது என்பது நீண்ட கால தீர்வாக இருக்காது. காவல்துறைக்கு தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு விதிக்கும் ஒரு வேலையைக் கண்டுபிடிக்கும் எனவும் கட்டுப்பாட்டாளர்கள் புலம்புகிறார்கள். ” தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டால் சரியா?” என முதலாளிகள் கேட்கிறார்கள்.

ஆனால், தனி ஒரு தொழிலாளி சமமற்ற நிலையில் இருந்து பேரம் பேசும்போது, சுதந்திர விருப்பம் என்பது பட்டியலிலேயே கிடையாது. எதிர்வரும் எண்ணியலாக்கலின் நெறிமுறைகளின் ஒரு பகுதியாக வரும் வேலைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் உள்ள முறைகேடுகளின் அபாயங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவைப் ” நெறிமுறை” ப்படி பயன்படுத்துவதற்கான அழைப்பை எல்லா இடங்களிலும் உள்ள மேல்தட்டுக்  கொள்கை வகுப்போர் விடுத்துள்ளனர். “நெறிமுறை” என்பதற்கான பொருளை நாம் மிகச் சரியாக கண்டுபிடிக்கும் போது வேலை உலகில் நிரல்நெறிமுறை(algorithm)  நிர்வாகத்துடன் இணைந்த முறையற்ற கண்காணிப்பை ஒழுங்குப்படுத்த பல ஏற்கனவே முயற்சிக்கப்பட்ட மற்றும் உண்மையான வழிகள் இருக்கின்றன.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

முதலாவதாக, எப்படி எந்த அளவு பணியாளர்கள் குறித்த விவரங்கள் ‌சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பவை உள்ளிட்ட கண்காணிப்பு விதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் தொழிற்சங்கங்களுக்கு இருக்க வேண்டும். இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் நிரல்நெறிமுறைகளின் வடிவமைப்பிலும், உற்பத்தி இலக்கு மற்றும் இதனால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும் தொழிற்சங்கங்கள் செல்வாக்குச் செலுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் போதும், கண்காணிப்புத் திறன் உட்பட அது தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றித் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். அமெரிக்க கால் சென்டர்களில், CWA வரையறைக்குட்பட்ட கண்காணிப்பை பெற்றுத் தந்துள்ளது. கண்காணிப்பு அடிப்படையிலான தரவுகள் அல்லது ஒழுக்கத்தை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஸ்பானிய தொழிற்சங்கங்கள் அண்மையில் செயலி அடிப்படையில் வாடகைக்கார்  தொழிலில் நிரல் நெறிமுறை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையை வென்றுள்ளன. இரண்டாவதாக, மிக முக்கியமாக, எங்கு கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு எல்லை வகுத்துள்ளதோ அங்கு ஒழுங்கமைப்பாளர்கள்  காணிகள் மற்றும் பிற வகையிலான இடைவிடா கண்காணிப்பைத் தடை செய்ய வேண்டும்.

ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளதா ஜிஎஸ்டி: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

தொழிற்சங்கங்களால் முறையாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே, ஏதாவது ஒரு குழப்பம் அல்லது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் அது கீழே உள்ள அனைவரின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் காணிகளை ஒரு பாதுகாப்பு வடிவமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆமாம் உண்மையில், உண்மையான சுகாதார, பாதுகாப்பு பிரச்சினை எழும்போது காணிகள் இருப்பது தேவைதான். ஆனால், இத்தகைய நிலை இல்லாத போது, பணியிடங்களில் காணிகள், பார்ப்பது அல்லது நோட்டம் விடுவதற்கான கருவிகளைப் பொருத்தி இடைவிடாது கண்காணிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மூன்றாவதாக, சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களும், ஒழுங்கமைப்பாளர்களும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மனரீதியான மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை அங்கீகரிக்க வேண்டும். பணியிடங்கள், தொழிலாளர்களின் உடலையும் உள்ளத்தையும் சிதைக்கும் வகையிலான முதுகை முறிக்கும் இலக்குகள் மற்றும் மனரீதியான கொடுமைகளிலிருந்து விடுபட்டவையாக இருப்பதற்கான விதிகளையும், கருவிகளையும் அவர்கள் உருவாக்க வேண்டும். எல்லா தொழிலாளர்களும் பணிகளில் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழுக்களைப் பெற்றிருக்க வேண்டும்.

மதுரையில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – நடவடிக்கை தொடருமா?

இறுதியாக, மனிதர்கள் நிரல்நெறிமுறை நிர்வாகத்தின் விளைவுகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை அல்லது பணி நீக்க முடிவும் நிரல் நெறிமுறையால் அல்ல,   ‌மனிதர்களால் எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே நேர்மையற்ற பணிநீக்கத்தை தடை செய்யும் நீதித்துறை வரைமுறையில் மேற்கூறிய கருத்து சட்ட வடிவில் பொருத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே உள்ள ஒழங்குமுறைகள் நடைமுறையில் இல்லாத இடங்களில் அவற்றை  மேலெடுத்துச் செல்லவும், நடைமுறையை மாற்றவும் இதுவே தக்க தருணம் ஆகும்.

இதுதான் உண்மையில் நாம் விரும்பிய வேலையின் எதிர்காலமா? என்று அமேசான் மாதிரியைக் கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்கள்களுக்கும் இடையே ஏராளமான கைகலப்புகளும், அதிர்ச்சியும் நிகழ்ந்துள்ளன. அணியக்கூடிய கையடக்க நிரவிகள்(scanner) மூலம் நிரல் நெறிமுறை நிர்வாகத் திட்டங்களால் வழங்கப்படும் கட்டளைகளுக்கான இயந்திர மனிதனின் ஆயுதங்களாக தொழிலாளிகளின் உடல்கள் செயல்படுகின்றன. அவை பிழை அல்லது விவேகத்திற்கு இடமளிக்காமல் ஒவ்வொரு அசைவையும் ஆணையிடுகின்றன. இதற்கான‌ மறுப்பு மிகப் பெரிதாக இருக்க வேண்டும்.

 

www.thewire.in , இணையதளத்தில் கிறிஸ்டி ஹாஃப் மேன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்