கொரானா (கோவிட் -19) முழு அடைப்பு பொருளாதார வீழ்ச்சி சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலும் உலகெங்கிலும் விரிவடைந்து வரும் இந்த பேரழிவின் முழுமையான அடிப்படைகளை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதன் கடுமையான அறிகுறி வெகுஜன பட்டினியாகும், இது மீண்டும் நாடுகளை – நிலத்தை வேட்டையாடுகிறது.
கொரானா குறித்த விழுமியங்களை கூர்ந்து கண்காணித்து வரும் (கோவிட் ரெஸ்பான்ஸ் வாட்ச்) ஆராய்ச்சியாளரும் மற்றும் பத்திரிகையாளருமான இந்த முக்கியமான கட்டுரைத் தொடரில், இந்தியாவில் பட்டினியின் சூழல், போக்குகள் மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றை சஜாய் ஜோஸ் விளக்குகிறார்.
வெறும் வயிற்றுடன் முழு அடைப்பு:
இந்தியாவின் பட்டினி நெருக்கடி அதிகரித்து வருகிறது பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, அன்று சுதந்திர தின உரையை நாட்டு மக்களுக்க நிகழ்த்தியபோது அவரது 88 நிமிட நீண்ட உரை நிதானமான ஒரு யதார்த்தமான சிந்திக்க வைக்கும் உண்மையை புறக்கணித்து . அவர் ஆட்சி செய்யும் 130 கோடி (1.3 பில்லியன்) மக்கள் வாழும் நாட்டின் அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, மோதல் பற்றிய வாய்மொழிப் பாடப்புத்தக விளக்கத்தில், இந்தியா எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்கள் “பயங்கரவாதம் மற்றும் விரிவாக்கம்” என்று மோடி அறிவித்தார். இது இந்தியாவின் இரண்டு அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா பற்றிய ஒரு மறைமுகக் குறிப்பு ஆகும்.
ஆர்யன் கான் வழக்கை விசாரித்த அதிகாரி பணியிட மாற்றம் – லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்தான் காரணமா?
பிரதமரின் உரையில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தில் கோடிக் கணக்கான இந்தியர்கள் தாங்கி அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடூரமான யதார்த்தத்தை பிரதமரின் உரை குறிப்பிடவில்லை. கடுமையாக குறைக்கப்பட்ட வருமானங்கள், பரவலான வேலையின்மை மற்றும் பெருகிய முறையில் பட்டினி. நல்ல காரணத்திற்காக, ஒருவேளை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, கணக்கெடுப்பிற்குப் பிறகு இந்த நெருக்கடியின் அவரது சொந்த அரசாங்கத்தின் அலட்சியபோக்கான செயல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக மார்ச் 2020இல் அதன் தவறான கருத்தாக்கம் மற்றும் மோசமாக செயல்படுத்தப்பட்ட தேசிய முழு அடைப்பு பெரிய இடையூறுகள் மூலம் ஏற்பட்ட பெரும்விளைவு.
இந்தியாவின்தீராத ஊட்டச்சத்து குறைபாடு நிலவிவந்தபோது, அது நெருக்கடியைத் தொட்டபோது, பிரதமர் அப்பொழுதுதான் அந்த நெருக்கடியான ஊட்டச்சத்து குறைபாட்டைத் தொடுகிறார். அது அவருடைய அரசாங்கத்தின் அரிசி பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்குவதாக மட்டுமே அறிவித்தது. முரண்பாடாக, சமீபத்திய “கட்டாய அரிசி பாதுகாப்பு திட்டம் வீணானது, பயனற்றது மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அது குறித்த மற்றொரு பகுப்பாய்வு, “உணவு பாதுகாப்பு” என்ற பெயரில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்பது இலாபகரமான வணிகத்தை வெளிப்படுத்தும் தனியார் வணிக நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
ஐ.நா. சபையின் காலநிலை உச்சிமாநாடு தோல்வியடைந்து விட்டது – கிரெட்டா துன்பெர்க்
அடுத்த நாள், டோக்கியோவுிலிருந்து திரும்பிய இந்திய ஒலிம்பியன்களுக்கான ஆடம்பரமான காலை உணவில், ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் ஒவ்வொருவரும் 75 பள்ளிகளுக்குச் செல்லுமாறு பிரதமர் அவர்கள் அனைவரையும் வலியுறுத்தினார். இந்தச் செயல் மக்களைக் கோபமூட்டியது. கோபமான ட்விட்டர் பயனாளிகளைத் தூண்டியது; “மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது போல் இல்லை, ஏனென்றால் அவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் பிரதமர். மக்களுக்கு உணவளிக்கவும்! ” என்று ட்விட்டர் பதிவிடுகின்றனர்.
இந்தியாதான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது நெருக்கடி உலகளாவியதாக இருந்தாலும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Centre) ஒரு பகுப்பாய்வு , இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் 7.5 கோடி மக்கள் ரூபாய் 150க்கும் அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் தினசரி வாழும் மக்கள் ($ 2 அல்லது அதற்கும் குறைவாக) வறுமையில் வீழ்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய கணக்கின்படி வறுமையின் அதிகரிப்பு இந்தியாவில் 60% ஆகும்.
2011 முதல் 2019 வரை இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 340 மில்லியனில் இருந்து 78 மில்லியனாக குறைந்துள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த போக்குத் தொடர்ந்திருந்தால், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 59 மில்லியனாகக் குறைந்திருக்கும். ஆனால் தொற்றுநோய் தொடர்பான இடையூறுகளுக்குப் பின்னர், அது 134 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது – எதிர்ப்பார்க்கப்படடுகிறது.
புரூக்கிங்ஸின் இன்ஸ்டியூஷனின் “சிந்தனைக் குழுவின்’ ” (think – tank brookings institution). மற்றொரு ஆய்வு, தொற்றுநோய் தொடர்பான இடையூறுகளின் தாக்கத்தால் 144 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படலாம் என்று மதிப்பிடுகிறது. இந்த ஆய்வறிக்கையில், கடுமையான வறுமை அதிக அளவில் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை முதலிடத்தில் வைத்துள்ளது.
புள்ளி விவரப் படம்;
படம்: அடிப்படை 200 (மக்களின்முழுமையான எண்ணிக்கை (1) உடன் ஒப்பிடும்போது, அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிக வருமானம் அதிகமாக் உள்ளது.
புரூக்கிங்ஸின் ஹோமி கரஸின் கூற்றுப்படி, இந்தியப் பொருளாதாரம் உலகின் மிக ஆழமான மந்தநிலையை அனுபவித்து வருகிறது என்ற உண்மையைப் பொறுத்தவரை, “தொலைதூரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இந்தியாவில் உணரப்படலாம். சமீபத்தில் நைஜீரியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடு என்ற பட்டத்தை இந்தியா . சமீபத்தில் விட்டுக் கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு அந்தப் பட்டத்தை மீண்டும் மீட்டெடுக்கும். 2020 ஆம் ஆண்டில் 85 மில்லியன் மக்களை அதன் வறுமையில் சேர்க்கும்.
உலக வங்கியின் கூற்றுப்படி, கொரானா பெருந்தொற்றின் (கோவிட் -19) தொடர்பான சீர்குலைவுகளால், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக 2020இல் உலகளாவிய தீவிர வறுமை அதிகரித்தது. இந்த இடையூறுகளின் விளைவாக 124 மில்லியன் மக்கள் ஏற்கனவே தீவிர வறுமையில் தள்ளாப்பட்டு உழன்று வருகின்றனர். 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த எண்ணிக்கை 163 மில்லியன் உயரும் என்ற எதிர்பார்ப்பில் அது மேலும் தள்ளப்பட்டிருக்கிறது என்று கணிக்கிறது. புதிய தீவிர ஏழைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் அதிகரிப்பார்கள் என்று மேலும் கணித்துள்ளது. தெற்காசியாவில், அதிக அளவில் ஏழைகள் உருவாகி வருவதைக் கவனம் செலுத்த வேண்டும். தெற்காசியா ஏற்கனவே வறுமையுடன் போராடிவருகின்ற ஒரு நிலப்பரப்பு.
இதேபோல், தொற்றுநோய் தொடர்பான இடையூறுகளின் தாக்கத்தின் காரணமாக, தீவிர வறுமையில் அல்லது மொத்தத்தில் 44.4%க்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் 80 – 90 மில்லியன் மக்களில் 40 மில்லியன் இந்தியாவுக்குள் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது .
மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 4
அட்டவணை 1: தொற்றுநோய் தொடர்பான இடையூறுகளால் தூண்டப்பட்ட வறுமையின் உலகளாவிய மதிப்பீடுகள்
அமைப்பு – ஐஎம்எஃப் உலகம்
முழுவதும் புதிய வறுமை – 80 முதல் 90 மில்லியன் வரை
இந்தியாவில் பாதிப்பு – புதிதாக ஏழைகளில் 44% இந்தியாவில் இருக்கும்
அமைப்பு – உலக வங்கி
உலகம் முழுவதும் புதிய வறுமை – 119 முதல் 124 மில்லியன் வரை
இந்தியாவில் பாதிப்பு – புதிய ஏழைகளில் பாதி பேர் தெற்காசியாவில் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் உள்ளனர்.
அமைப்பு – பியூ ஆராய்ச்சி மையம்
உலகம் முழுவதும் புதிய வறுமை – 134 மில்லியன் வரை
இந்தியாவில் பாதிப்பு – புதிதாக ஏழைகள் 75 மில்லியன் வரை
அமைப்பு ப்ரூக்கிங்ஸ்
உலகம் முழுவதும் புதிய வறுமை – 144 மில்லியன் வரை இந்தியாவில் பாதிப்பு – புதிதாக ஏழைகள் 85 மில்லியன் வரை *தொற்றுநோய் தொடர்பான இடையூறுகளால் புதிதாக வறுமையில் தள்ளப்படுவதாக மதிப்பிடப்பட்ட – கணிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, தொற்றுநோய்க்கு முந்தைய கணிப்புகளுக்கு எதிராக கணக்கிடப்படுகிறது. இங்கு வறுமை என்பது ($ 2) ஒரு நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 அல்லது அதற்கும் குறைவாக வாழும் மக்களை குறிக்கிறது – உலக வங்கி இதனைத் ‘தீவிர வறுமை’ என்று வகைப்படுத்துகிறது.
முழு அடைப்பால் உடல் வாங்கும் உதை.
மார்ச் 2020 இல் தேசிய முழு அடைப்பால் உடல் உதைவாங்கியபோது இந்தியாவின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு நிலைமை ஏற்கனவே வரலாற்றுப் பூர்வமாக குறைந்த நிலையில் இருந்தது. முழு அடைப்பு அவர்களைத் தாக்கியபோது பெரும்பான்மையான மக்கள் ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைவினால் கடும் நெருக்கடியில் இருந்தனர்.
தொற்றுநோய்க்கு முந்தைய ஆதாரம் அதனை வெளிப்படுத்துகிறது. 2017-18ஆம் ஆண்டிற்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கை, நாட்டின் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமானதாக இருந்தது என்று குறிப்பிட்டு வெளிப்படித்தியுள்ளது. கணக்கெடுப்பின் முடிவுகள் அரசாங்கத்தின் மீது மிகவும் மோசமாக பிரதிபலித்தன. பணமதிப்பு நீக்கத்தின் பேரழிவு நடவடிக்கைக்குப் பிறகு இது போன்ற முதல் கணக்கெடுப்பு – கருத்துக்கணிப்பு ஆகும். அவற்றை அவர்கள் (மோடிஅரசு) வெளியிட மறுத்துவிட்டனர். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இரண்டு நிபுணர் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18 இன் நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பு 40 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முரையாக இந்தியாவில் ‘உண்மை’யான தனிநபர் வருமானம் – குடும்பத்தின் செலவு குறைந்துள்ளது. இது வறுமை மற்றும் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பதைக் குறிக்கிறது.
பின்னர் முழு அடைப்பு நடந்தது இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் மதிப்பீட்டின்படி, 130 கோடி (1.3 பில்லியன்) மக்கள் கொண்ட ஒரு தேசத்தின் இந்த திடீர் பணிநிறுத்தம் அவர்களில் கிட்டத்தட்ட 140 மில்லியன் மக்களை வேலையில்லாமல் ஆக்கியது. இதை இந்தியப் பொருளாதாரத்தைக் கணிக்கும் மையம் மதிப்பிட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு (ஜிடிபி) வளர்ச்சியை மைனஸ் 23.9% ஆகக் குறைத்தது. இது எந்தவொரு பெரிய பொருளாதாரமும் அனுபவிக்கும் மிகக் கடுமையான தாக்கமாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சுருங்கியது. இது சுதந்திரத்திற்குப் பிறகு எந்த ஆண்டும் இல்லாத பொருளாதாரத்தின் மோசமான செயல்திறன். இதுவரை இந்த அளவுக்கு இருந்ததில்லை.
‘லிவிங் டூ கெதர் இணையர்கள் குடும்பநல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை’ – சென்னை உயர்நீதிமன்றம்
இந்தியாவின் பெரும்பான்மையை உருவாக்கும் உழைக்கும் மக்கள் மீது இத்தகைய திடீர், எங்கும் நிறைந்த மற்றும் நீடித்த அதிர்ச்சியின் தாக்கத்தின் முழு அளவும் கணக்கிட முடியாதது. முழு அடைப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட பல்வேறு கணக்கெடுப்புகள், ஆய்வுகள், இந்த கொடூரமான நடவடிக்கையால் அவர்கள் சந்தித்த துயரங்கள் மற்றும் கஷ்டங்களின் அளவு குறித்து சுட்டிக்காட்டியுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கணக்கெடுப்பில், முழு அடைப்பு “இந்தியக் குடும்பங்களில் உணவு பாதுகாப்பின்மையை தூண்டியுள்ளது. மக்கள் முன்பை விட குறைவாகவே சாப்பிடுவதோடு, உணவை கூட தவிர்த்துள்ளனர். பதிலளிக்க வந்தவர்களில் கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் தங்கள் தினசரி உணவு உட்கொள்ளலைக் குறைத்து அல்லது ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டோம் என்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்புகள் பல மற்ற ஆய்வுகளுடன் பொருந்துவதாகவே இருந்தன. மற்ற ஆய்வுகள் இது (ரைட் டு உணவு) உணவு உரிமைக் கோருதல் முகமையின் கட்டுப்பாட்டில் ஆய்வுகள் ஜார்கண்டில் 159 தொகுதிகள் முழுவதும் நடைபெற்றது. இந்தக் கால கட்டம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட பயன்பாட்டாளர்களில் பெரிய அளவில் கிட்டத்தட்ட 3 வயதுக்குட்பட்ட ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் ஏறக்குறைய 70% உட்பட ஏராளமான பயனாளிகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஊட்டச்சத்தைப் பெறவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 12-மாநில கணக்கெடுப்பில் இது போன்ற மிக விரிவான ஆய்வுகளில் ஒன்று, முழு அடைப்பின் ஒரு ஆண்டிற்குப் பிறகும் நிலைமை மோசமாக இருப்பதைக் கண்டறிந்தது. தொற்றுநோய் தொடர்பான இடையூறுகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான இந்தியர்களை-230 மில்லியன்மக்களை – தேசிய குறைந்தபட்ச ஊதிய வறுமைக் கோட்டுக்குக் கீழே (அனூப் சத்பதி கமிட்டியின் பரிந்துரைத்தபடி ஒரு நாளைக்கு ரூ.375). தள்ளியது என்பதை அது வெளிப்படுத்தியது.
ஒரு மோசமான பட்டினி நெருக்கடி சமீபத்திய ஆண்டுகளில், தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இந்திய உணவுக் கழகம் கொள்முதலுக்கும், இருப்புக்கும் இடையேயான வரம்பை தாண்டி சாதனை அளவை எட்டியுள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் உணவு தானிய இருப்புத் தேவையை விட 2.7 மடங்கு அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது. இது”ஏராளமான பிரச்சினையை” உருவாக்கியது.
தானியங்களை கொள்முதல் செய்வதற்கும் சேமிப்பதற்கும் பொறுப்பான இந்திய உணவு கழகம், பொது விநியோக அமைப்புடன் (PDS – Public Distribution System) நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பாக அமைகிறது. உலகின் மிகப் பெரிய உணவு விநியோக இயந்திரமாக கருதப்படும் பிடிஎஸ் – PDS ஆனது 400,000 க்கும் அதிகமான நியாய விலைக் கடைகளின் (எஃப்.பி.எஸ்) வலையமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 கோடி குடும்பங்களுக்கு ரூ .15,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படுகிறது.
வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்
இந்த புள்ளிவிவரங்கள் சுவாரசியமாகத் தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியா உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களைக் கொண்டுள்ளது. சுமார் 189.2 மில்லியன் இந்தியர்கள், அதாவது மக்கள் தொகையில் 14%,பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கினர் அதாவது உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில் கால் பகுதியினர்.
2020 உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணையின்படி, பட்டினி கொண்ட 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தைப்பிடித்துள்ளது. 27.2 மதிப்பெண்களுடன் உள்ளது. இந்தியாவை விட 13 நாடுகள் மட்டுமே மோசமாக உள்ளன. இது பட்டினியின் குறியீட்டு வகையில் ‘தீவிரமான அளவைக் கொண்டுள்ளது’ என்று உலக ஊட்டச்சத்து அறிக்கை குறிப்பிடுகின்றது, உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை நோக்கி நாடுகள் அளவிலான முன்னேற்றம் குறித்த அறிக்கையிடும் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை இந்தியாவை இந்த பிரிவில் சேர்க்கிறது. பட்டியலிடப்பட்ட இலக்குகளை அடைவதற்கான பாதையில் இல்லாத நாடுகள்.
அரசாங்கத்தின் சொந்த தரவு – ஆதாரம் இந்த போக்குகளை உறுதிப்படுத்துகிறது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) ஐந்தாண்டுகளுக்குக் கீழ் உள்ள குழந்தைகளிடையே நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடு அல்லது வளர்ச்சி குன்றிய நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்று கண்டறிந்துள்ளது. அதே சமயம் கடந்த ஐந்தாண்டுகளில் கணக்கெடுக்கப்பட்ட பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அல்லது வீணாவது – விரயம், மோசமடைந்தது. ஜூன் 2021 இல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் Niti Aayog (இந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது) நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) குறியீட்டில், தெரியவந்தது என்னவென்றால், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் உட்பட 11 மாநிலங்கள் 100க்கு 50க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன என்பதை வெளிப்படுத்தியது.
அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பேரழிவு.
இந்தியாவின் தனிநபர் வருமானம் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இருப்பினும் அதன் குடிமக்களின் குறைந்தபட்ச உணவு உட்கொள்ளல் குறைந்துள்ளது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியின் இந்தக் காலகட்டத்தில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் வருமானங்களுக்கு இடையிலான இடைவெளி மட்டுமே அதிகரித்துள்ளது. மக்கள்தொகையில் சுமார் 21.25 சதவிகிதம் பேர் 150 ரூபாய்க்கும் (அமெரிக்க டாலர் 2). குறைவான வருமானத்துடன் வாழ்கின்றனர்.
பல பரிமாண வறுமை குறியீட்டின் அறிக்கையின்படி 2005 மற்றும் 2016 க்கு இடையில் 27 கோடி (270 மில்லியன்) மக்கள்- பெரும்பாலான மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியதை இந்தியா கண்டது என்பது நகைப்பிற்குரியது. இருப்பினும், குறைந்தபட்சம் 2016 முதல், வறுமை, பசி – பட்டினி மற்றும் வருமான சமத்துவமின்மை என்று வரும்போது இந்தியா சரிந்து வருகிறது. 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில் வறுமை அதிகரித்துள்ளதாக 2019ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கை காட்டுகிறது; அதே நேரத்தில் 24 பேர் பட்டினியும் மற்றும் 25 பேர் வருமான சமத்துவமின்மையும் அதே காலகட்டத்தில் அதிகரித்துள்ளனர்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரையாளர் பிரசன்ன மொஹந்தியின் இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பேரழிவை முழுமையாக மேற்கோள் காட்டவேண்டும் “இது இந்திய அரசாங்கத்தின் முக்கிய சிந்தனைக் குழுவாக இருப்பதால், வறுமை, பட்டினி மற்றும் வருமான சமத்துவமின்மை போன்ற முக்கியமான குறியீடுகளில் ஏன் வீழ்ச்சி இருக்கிறது என்பதை நிதி ஆயோக் விளக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. முரண்பாடாக, நிதி ஆயோக்கின் அறிக்கையை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சரி செய்யும் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தொற்றுநோய்க்கு முன்பு வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் பொருளாதாரத்தின்மந்தநிலை ஆகியவற்றிற்கும் இதனையே செய்தது.
மொஹந்தி மேலும் கூறுகிறார், “கொரானா தொற்றுநோயை திறமையற்ற முறையில் கையாளுதல் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்படாத முழு அடைப்பு இந்தியாவைத் திணறடித்துள்ளது. கொரானா தொற்றுநோய் தாக்கத்திற்குப் பிறகு அரசாங்கம் சாதாரண மக்களின் வேலை இழப்பு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிர் இழப்புகளைக் கண்காணிக்க ஒருபோதும் கவலைப்படவில்லை. அவர்களில் மில்லியன் கணக்கானவர்கள் பல மாதங்களாக தங்கள் வீடுகள் இருக்கும் ஊர்களை நோக்கி நடந்தே சென்றனர். உலகில் வேறு எங்கும் காணப்படாத ஒரு நிகழ்வு இது. வேறு எந்த நாட்டிலும் இல்லை இதுபோல். சிலர் வழியில் அழிந்தனர். இறந்து போனார்கள். இதன் விளைவாக, 50 மில்லியன் வேலைகளைக் காப்பாற்றிய OECD நாடுகளைப் போலல்லாமல், வேலைகளைப் பாதுகாக்க அல்லது மில்லியன் கணக்கானவர்களின் வேலை இழப்பு மற்றும் வாழ்வாதாரங்களைத் தக்காவைக்க உதவவில்லை. மொத்தக் காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடாக இருந்தது. 2020 செப்டம்பர் அமர்வின் போது பாராளுமன்றத்தில் தன்னிடம் தரவு – ஆதாரம் எதுவும் இல்லை எனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புகளுக்கு இழப்பீடு கூட வழங்க முடியாது என்றும் அலட்சியத்தை வெளிப்படுத்தியது’ என்று மொஹந்தி எழுதினார்.
அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், இது இன்னும் வெளிவரும் மற்றும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடிய சோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மகிழ்ச்சியற்ற, துரதிருஷ்டவசமான, பொதுமக்களின் துயரத்தைப் போக்குவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் செயலற்ற தன்மை அதற்கு தீவிரமாக பங்களித்தன. பிரதமரின் சுதந்திர தின உரையில் மிக சமீபத்தில் பிரதிபலித்தது போல், பிரச்சினையின் நிறுவன மறுப்புடன் இணைந்து துல்லியமாக இந்த அக்கறை அல்லது திறமை இல்லாததுதான் இந்தியாவின் பசி – பட்டினி தொற்றுநோய் வளர்ந்து வருவதால், பார்வையில் தலைகீழாக மாறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
(www.countercurrents.org இணையதளத்தில் சஜாய் ஜோஸ் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
தமிழில்: தேவராஜன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.