Aran Sei

இஸ்லாமியர்களுக்கு எதிராக வதந்தி பரப்பிய தொலைக்காட்சி – தோலுரித்த ALT news

மீபத்தில் சுதர்ஷன் தொலைக்காட்சியின் பிந்தாஸ் போல் (யூபிஎஸ்சி ஜிஹாத்) என்ற நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தை வெளியிட்டது. அதில் முஸ்லீம் மக்கள் மீது பொய்யான புகார் சித்தரித்து, அவர்கள் மேல் வெறுப்பை உருவாக்கும் விதமாக இருப்பதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

இது குறித்து உச்சநீதி மன்றத்தில் பல்வேறு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 15-ஆம் தேதி மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  சுதர்ஷன் தொலைக்காட்சியின் பிந்தாஸ் போல் நிகழ்ச்சியை மறு உத்தரவு வரும் வரை ஒளிபரப்பக்கூடாது என்று தடைவிதித்தனர். இதைத் தொடர்ந்து 17-ஆம் தேதி,  சுதர்ஷன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கேவின் சார்பில் அவரின் வழக்கறிஞர் திவான் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அன்றே இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோஸப் ஆகியோர் காணொலியில் விசாரித்து, “முழுக்க முழுக்க முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பை பரப்பும் விதத்தில் புனையப்பட்ட நிகழ்ச்சியை எப்படி ஒளிப்பரப்ப அனுமதி கொடுக்க முடியும்” என்று சுதர்ஷன் தொலைக்காட்சிக்கு பல கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில் ALT செய்தித்தளம், சுதர்சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ள தரவுகளில் உள்ள தவறுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

தவறான தகவல் 1: முஸ்லீம் தேர்வர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் உயர்வு

யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெறும் முஸ்லீம்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் ’திடீரென்று’ உயர்ந்துள்ளதை அடிப்படையாக வைத்துதான் ’யுபிஎஸ்சி ஜிகாத்’ என்ற நிகழ்ச்சி எடுக்கப்பட்டுள்ளதாக சுதர்ஷன் தொலைக்காட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டது.

கடந்து 2019 ஆகஸ்ட் 4-ம் தேதி, 2019 நடந்த யுபிஎஸ்சி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெயிடப்பட்டுள்ளது. தகுதிபெற்ற 829 பேரில் 42 பேர் மட்டுமே முஸ்லீம்கள். அதாவது வெற்றிபெற்றவர்களில் 5 சதவீதமானவர்களே முஸ்லீம்கள். ‘டாப் 100’ பட்டியலில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.

நன்றி : ALT news

மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை ஆராய்ந்தால், எங்குமே இந்த திடீர் வளர்ச்சி இல்லை. மேலும் வெற்றிப்பெற்றவர்களில் முஸ்லீம் சமூகத்தினரின் பங்கு 3 சதவீதத்திற்கும் 5 சதவீதத்திற்கும் இடைப்பட்டே இருந்து  வருகிறது.

யுபிஎஸ்சி தேர்வில்
2015-ல் வெற்றிப்பெற்றவர்கள் 1078. முஸ்லீம்கள் 36
2016-ல் வெற்றிப்பெற்றவர்கள் 1099 முஸ்லீம்கள் 50
2017-ல் வெற்றிப்பெற்றவர்கள் 990 முஸ்லீம்கள் 52
2018-ல் வெற்றிப்பெற்றவர்கள் 759 முஸ்லீம்கள் 28

நன்றி : ALT news

தவறான தகவல் 2 : முஸ்லீம்களுக்கான வயது வரம்பு

யுபிஎஸ்சி தேர்வில், இந்துக்களுக்கான வயது வரம்பு 32 என்றும், ’ஓபிசி’ முஸ்லீம்களுக்கான வயது 35 என்றும் நிகழ்ச்சியில் சுதர்ஷன் டிவி கூறுகிறது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி, யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், எல்லா வகை விண்ணப்பதாரர்களுக்கும் குறைந்த வயது வரம்பாக 21 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி : ALT news

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் அதிகபட்ச வயதாக 37 உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு (ஓபிசி) அதிகபட்ச வயதாக 35 உள்ளது. இங்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் வகுப்பில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது இந்து மதத்தை சேர்ந்த சில வகுப்பினரும் இதில் அடங்குவர்.

தவறான தகவல் 3 : தேர்வெழுதுவதற்கு வழங்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கை

முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையிலான தடவை யூபிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று சுதர்ஷன் தொலைக்காட்சி தங்கள் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது. அதாவது இந்துக்களுக்கு அதிகபட்சம் ஆறு முறையும், முஸ்லீம்களுக்கு ஒன்பது தடவை வரையும் பங்கேற்பதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

நன்றி : ALT news

ஆனால் மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இப்படியான சலுகைகளை யூபிஎஸ்சி வழங்க வில்லை. மாற்று திறனாளிகள் ஒன்பது முறை தேர்வு எழுதலாம். இந்த ‘ஆறு முறை மட்டுமே தேர்வு எழுத முடியும்’ என்ற விதி முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.

தவறான தகவல் 4 : முஸ்லீம்களுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்

சதவீதமானது நாற்பது நிமிடங்கள் ஓடும் இந்த நிகழ்ச்சியில், முஸ்லீம்களுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண் இந்துக்களை விட குறைவாக உள்ளது என்று கூறப்பட்டது. ‘ப்ரிலிம்ஸ்’ மற்றும் ‘மெயின்’ தேர்வு முடிவுகளுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்ணை ஆண்டுதோறும் யூபிஎஸ்சி வெளியிடுகிறது.

முஸ்லீம்களுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்

மதத்தின் அடிப்படையில் ’கட்-ஆஃப்’ மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, சமூக மற்றும் பொருளாதாரத்தில் உள்ள பின்னடைவை கருத்தில் கொண்டே ‘கட்-ஆஃப்’ மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல் 5 : இலவச கோச்சிங் சென்டர்கள் முஸ்லீம்களுக்கு மட்டுமே உள்ளது.

முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் யூபிஎஸ்சி தேர்வர்களுக்காக 5 இலவச கோச்சிங் சென்டர்களை நிறுவினாரென்றும் அதில் நான்கு சென்டர்கள் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளதாக  நிகழ்ச்சி தொகுப்பாளரான சவ்ஹன்கே கூறுகிறார்.

ப்ரிண்ட் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், ’அரசு 2009-10 காலக்கட்டத்தில் ஐந்து சென்டர்களை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவச தங்கும் இடத்துடன் கூடிய கோச்சிங் சென்டராக அவை உருவாக்கப்பட்டுள்ளன’

நன்றி : ALT news

நிகழ்ச்சியில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் உள்ள இலவச கோச்சிங் சென்டரை பற்றி கூறும்போது, அதில் பயின்று வெற்றிபெறும் தேர்வர்களை ’ஜாமியா கே ஜிஹாதி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கோச்சிங் வகுப்புகளை நடத்துகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்