Aran Sei

ஸ்க்விட் கேம்: முதலாளித்துவ எதிர்ப்பின் எழுச்சி

துவரை நீங்கள் ஸ்க்விட் கேமை (Squid Game) பார்க்கவில்லை என்றால் அதை உங்களுக்கு எண்ணற்ற முறை பரிந்துரைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை வெளிவந்த அந்நிய மொழி தயாரிப்புகளிலேயே அதிகம் பார்க்கப்பட்ட தயாரிப்பாக மிக வேகமாக மாறியது. தற்போது இது உலகில் 90 நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸின் முதன்மை நிகழ்ச்சியாக உள்ளது.

நெட்ஃப்ளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி டெட் சரண்டோஸ், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இது இருக்கும் என்கிறார். ஒரு தென் கொரிய அகண்ட அலைவரிசை நிறுவனம் இந்த நிகழ்ச்சியால் இணையத்தில் போக்குவரத்து நெரிசலை உருவாக்கிவிட்டதாக நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்கும் கூட தொடுத்தது.

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

எனவே, தங்கள் மீது பணம் கட்டப்பட்ட போட்டியாளர்கள் பணத்திற்காக குழந்தைத்தனமான விளையாட்டில் சாகும் வரை போராடி வெளியேறுவதை பணக்கார அதிமுக்கிய நபர்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று, உலகளவில் மாபெரும் பார்வையாளர்களைக் கொண்டுள்ள வன்முறை நிறைந்த பாதுகாப்பு நிகழ்ச்சியைப் பற்றி என்ன கூறுவது? ஒருவேளை இது வெறும் கற்பனைக் கதை மட்டும் அல்ல என்பது உண்மைதானோ? ஸ்க்விட் கேம் ஒரு வியத்தகு போட்டி மூலம் வர்க்கப் போராட்டம்,  பொருளாதார கவலைகள் போன்ற கருப்பொருள்களை ஆராய்ந்து மிகச் சரியாக சமூக உண்மைகளை எதிரொளிக்கிறது.

2019 ல்  போங்க் ஜூன் ஹோ வால் இணையாக எழுதி இயக்கப்பட்ட கொரிய வெற்றித் திரைப்படம் ‘பாரசைட்( Parasite)’, இதே போன்ற விமர்சன வெற்றிப் பெற்ற அமெரிக்காவை நையாண்டி செய்து எடுக்கப்பட்ட ‘சாரி டூ பாதர் யூ  (Sorry to bother you)’ உள்ளிட்ட படத்தில், அண்மையில் முதலாளித்துவ சமூகத்தை விமர்சனம் செய்து எடுக்கப்பட்டு வெற்றிப் பெற்ற அண்மை திரைப்படங்களைப் பின் தொடர்ந்து வந்துள்ள ஸ்க்விட் கேம்,  முதலாளித்துவ எதிர்ப்பு பொழுது போக்கிற்கான ஒரு நீடித்த தாகம் இருப்பதை நிரூபிக்கிறது.

காவல்துறையின் என்கவுண்டர்கள் ஆபத்தானது; நீதித்துறைக்கு எதிரானது – தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

உலகளாவிய தொற்று நோயால் எழுந்துள்ள நிதிப் போராட்டங்களால் அண்மை ஆண்டுகளில் முதலாளித்துவத்தை விட்டு விலகிச் செல்வது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டால் இது சிறிது வியப்பூட்டுவதாகவே வந்துள்ளது. இதனால்தான் ஜனநாயகவாதியான அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டெஸ் போன்றவர்கள் அரசியல் நட்சத்திரமாக உயர்ந்துள்ளதுள்ளனர். சோசலிசம் சமதர்ம வாதத்தின் அதிகாரபூர்வ  ஒரு பகுதிதானே.

முதலாளித்துவத்தை எதிர்ப்பது எளிதாகிவிட்ட (cool to hate பாடலில் வருவது போல) வரலாற்றுக் காலகட்டத்தில் அதனை விமர்சித்து வந்துள்ள இந்த பொழுது போக்கு நிகழ்ச்சி இன்னும் அதிகமாக இதுவரை இல்லாத அளவு எளிதாக மாறியுள்ளது. ஆனால் இது அரசியல் முன்னேற்றத்திற்கானதா? ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், அமைதிக்கான கருப்பினத்தவர் கூட்டணியைச் சேர்ந்தவருமான ராமியர் பாலகூன் இல்லை என்கிறார். அவர், “முதலாளித்துவத்தின் கீழ் எதுவும் நுகர்வு பொருளாக மாற்றப்படும். இறுதியில் புரட்சிகரமற்றதாக மாற்றப்படும்,” என ரிஃபைனரி 29 (Refinery29) ஊடகத்திடம் கூறி உள்ளார். பெரும் அமெரிக்கா மூலம் ஹாலிவுட் இத்தகைய செயல்திறமிக்க காட்சிகள், வன்முறை அமைப்பை எதிர்க்க வேண்டும் எனும் ஒரு கருத்தை மக்கள் உணர்ச்சியூட்டும் காதல் கற்பனைக் கதையாக மாற்றிக் கொள்ளவதற்கு அனுமதிக்க வழி கொடுக்கும்,” என்கிறார் அவர்.

பாலகூன் இன்னும் ஸ்க்விட் கேமை பார்க்கவில்லை. ஆனால் அமைப்புகளில் பங்கேற்காமலே புரட்சிகர கருத்துக்களைப் பேசும் தாராளவாதிகள் முதலாளித்துவ எதிர்ப்பு பொழுதுபோக்கின் எழுச்சிப் போல் தோற்றமளிக்கும் குளத்தில் தங்கள் கால்களை நனைத்துக் கொள்ளும் வழியாக இதனை பார்க்கிறார்கள்‌. கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ” காத்திருக்க முடியாது” என்ற கீச்சகப் பதிவு அதனை நிரூபிக்கிறது. எனினும், தனது சொந்தத் தொழிலாளர்கள் எப்போதும் பாதுகாப்பற்ற, மோசமான நிலையில் இருப்பதன் முரணை அது இழக்கவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ’நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று’ – திருமாவளவன்

இந்த விளையாட்டில் வரும்  கதாபாத்திரங்கள் அனைவரும்  வறுமை நிலையிலிருந்து, உயிர் வாழ்க்கையை அச்சுறுத்தும் கடன் தொல்லைகளுடன் வந்திருப்பினும் அங்கேயே இருக்க விரும்புவதால்  பார்வையாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுகிறார்கள் என்பதே அது மக்களின் தலையில் சென்று  ஏறியிருப்பதற்கு மற்றொரு குறியீடு என ஸ்க்விட் கேம் பற்றிய புரட்சிகர முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் செய்திகளை வெளியிடுகிறார்கள்‌. இது முதலாளித்துவ சமுதாயத்தில் நமது சுதந்திர விருப்பத்தின் பேரில் தற்போதைய மாயையை உடைப்பதில் இருந்து நாம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு கதாபாத்திரமான ஜி-யுவாங்க் இந்த விளையாட்டில் நுழைவதற்கு முன்புதான் தனது தவறான தந்தையை கொன்றதற்காக சிறை சென்று விட்டு   வெளியே வந்ததாகக் கூறுகிறாள்.

“சுதந்திர எண்ணம் என்ற கருத்து வெள்ளை மேலாதிக்க முதலாளித்துவத்தால் ஆயுதமாக திறமையாக மாற்றப்பட்டு, முதலாளித்துவத்தால் தங்கள் மீது சுமத்தியுள்ள நாற்றமெடுக்கும் சூழ்நிலைகளுக்குத் தாங்களே பொறுப்பு என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் தீப்பற்ற வைத்துள்ளது,” என்கிறார் போபோவும் ஃப்ளெக்ஸ் வலையொளியின் இணை தொகுப்பாளரும், நிகழ்நிலை மனோதத்துவ நிபுணருமான போபோ மாட்ஜிலா தெரிவிக்கிறார்.” சுதந்திர எண்ணத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு சமூகம், அவர்கள் அவர்களால் கூறப்படும் சமூகத்தால் எவ்வளவுதான் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டிருந்தாலும், மறைமுகமாக தங்கள் சூழ்நிலைகளுக்கும், பொருள் நிலைமைகளுக்கும் அனைவருமே பொறுப்பு என நம்புகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

‘தமிழ்நாடு அரசின் குடிசைப் பகுதி மக்களுக்கான மறு குடியேற்றம் மற்றும் மறு வாழ்விற்கான வரைவு அறிக்கை’ – தமிழில் வெளியிட செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

ஒவ்வொருவரும் முதலாளித்துவத்திற்குள் பங்கெடுக்க தற்போது இன்னும்  வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார் பாலகூன். ” இந்த அமைப்பை உண்மையாகவே தலைகீழாக மாற்றக்கூடிய புரட்சி என்பதைத் தவிர வேறு எந்த உண்மையான வழியும் நமக்குத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை” என்று அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் விரும்பும் வரை ஒரு முதலாளித்துவ எதிர்ப்புவாதியாக இருந்துக் கொள்ளலாம். ஆனால் இறுதியில் காலையில்  விழித்தெழுந்து வேலைக்குச் செல்ல வேண்டும்.”

ஸ்க்விட் கேமை எழுதி, இயக்கியுள்ள இயக்குனர் வாங்க்-டாங்க் ஹையூக்கிற்கு நாம் உரிய மரியாதையை தன் தர வேண்டும்.( 2009 ல் இந்த நிகழ்ச்சியை எழுதிய அவர் நாற்பது ஆண்டுகளாக படபிடிப்பு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டார். நிதி நெருக்கடியால் ஒரு கட்டத்தில் தனது மடிக்கணினியைக் கூட விற்கவேண்டிய நிலைக்கு ஆளானார்). பெரும்பாலான முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் செய்திகளும் ஆங்கில மொழிபெயர்ப்பில் நீர்த்து போய் விடுவதாகத் தோன்றுகிறது. “ஆசியக்காரனாக உணர்தல் (Feeling Asian)” என்ற வலையொளியின் இணை தொகுப்பாளரான யங்க்மி மேயர் தனது அதிவிரைவாக பரவிய டிக்டாக் காணொளியில், ” நான்பு(Gnanbu)” என்ற தலைப்பிலான அந்தத் தொடரின் ஆறாவது பகுதியில் முக்கியமான காட்சிகளாக பளிங்கு காட்சி (marble scene) போன்றவற்றில் உள்ள நுணுக்கங்களை ஆங்கில மொழி பார்வையாளர்கள் காணத் தவறிவிட்டனர்,”என்று கூறுகிறார். “நாங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்கிறோம்,” என்று கூறும் ஓ இல்-நாம், கொரிய மொழியில்,” உனக்கும் எனக்கும் இடையே சொந்த உரிமை என்பது இல்லை,” என்கிறார். பல மொழிபெயர்ப்பாளர்கள் குறைவான ஊதியம் பெறுவதோடு அதிக வேலை செய்கிறார்கள் என்று கூறும் மேயர்,” இது தயாரிப்பாளர்களின் தவறு,” என்று கூறுகிறார்.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

மொழிபெயர்ப்பு பிரச்சனையை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், பேரடைஸ் திரைப்படத்திற்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து ஸ்க்விட் கேம்  பிரபலம் அடைந்திருப்பது முதலாளித்துவ எதிர்ப்புப் பொழுதுபோக்கு எங்கேயும் போய்விடவில்லை, போய்விடவும் கூடாது என்பது தெரிகிறது. இருப்பினும் வரவுள்ள புதிய வெளியீடுகள் நாம் அடையாத முன்னேற்றத்தை விளக்குவதாக இருக்கக் கூடாது.

“காட்சிகள் விளக்கமானவையாக இருந்தாலும் சரியான கண்ணோட்டத்துடன் இல்லாததால், இந்த நிகழ்ச்சிகள்  நன்றாக இருந்தாலும் பார்வையில் தோன்றும் கருத்தை மாற்றுவதற்கு பயனுடையதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை,” என்கிறார் மாட்ஜிலா. அவை முதலாளித்துவத்தின் இறுதிக் காலத்தில் இருக்கும் கொடூரங்களை விவரிப்பதில் மகத்தான காரியம் ஆற்றுகின்றன. ஆனால் அந்த அளவு அவை இந்தக் கொடூரங்களுக்கானத் தீர்வைப் பரிந்துரைப்பதில் பெரிதாக எதுவும் செய்யவில்லை,” என்று கூறும் மாட்ஜிலா, இதன் விளைவாக, இந்த நிகழ்ச்சிகளிலிருந்து  வெளியே வருவதன் மூலம்  நாம் ஏற்கனவே எந்த அளவு அரசியலில் தீவிரமாக உள்ளோமோ அதைவிட அதிகமாக இருப்பதாக உணரும் அபாயத்தில் இருக்கின்றோம் என்று கூறுகிறார்.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

எளிமையாக கூறவேண்டுமானால், நாம் எல்லோரும் ஸ்க்விட் கேமை யும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பார்த்து மகிழ வேண்டும். நாம் அவற்றை பெரிய அளவில் அனுபவிப்பதற்கு காரணம் அவை அந்த அளவு நம்மோடு தொடர்புடையனவாக உள்ளன. அதே வேளையில் கோடீஸ்வரர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் மீண்டும் சந்தைப்படுத்துகிறார்கள் என்பதிலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் உண்மையாகவே, இந்த நிகழ்ச்சிகளைத் பார்க்கும்போது, இத்தகையபொழுது போக்குகளைத் திரட்டும் பணக்காரர்களைவிட நாம் மேலானவர்கள் இல்லையா? ஒருவேளை இதுதான் எல்லாவற்றையும் விட குழப்பமான திருப்பமாக இருக்கும்.

www.refinery29.com இணையதளத்தில்  வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

எழுதியவர்: லாரா பிட்சர்

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்