Aran Sei

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும்

வி.டி. சாவர்க்கரை (1883-1966) ஒரு சிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக மறுகட்டுமானம் செய்வதற்கான தீவிரப் பிரச்சாரம் நடந்து வருகிறது. அவர் ஒரு பழம்பெரும் இந்திய தேசியவாதி,  செல்லுலார் சிறையில் 50 ஆண்டுகள் கழித்த சுதந்திரப் போராட்ட வீரர் என்று கூறப்படுகிறார். அவரது பல கருணை மனுக்கள், ஆங்கிலேயர் ஆட்சியை வேரோடு அகற்றி, சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரு சூழ்ச்சியாகப் போற்றப்படுகின்றன.

கடைசியாக, அவர் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் என்று போற்றப்படுகிறார். இந்த கூற்றுகளை சாவர்க்கரின் எழுத்துக்களோடும், இந்து மகாசபையின் ஆவணக் காப்பகத்தில் உள்ள அவரது செயல்பாடுகளின் பதிவுகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

‘ஒருத்தரைக் கீழ இறக்கி மேல ஏற ஆசப் பட மாட்டேன்!’ – `கானா’ இசைவாணியின் வெளியேற்றமும், தட்டிக் கேட்காத `மய்யம்’ கமல் ஹாசனும்!

சாவர்க்கர் 1857 இந்திய சுதந்திரப் போரைப் பற்றி 1907 இல் எழுதினார்.  அதில் அவர் 1857 கிளர்ச்சியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கூட்டுப் போராட்டத்தை பெருமையாகப் பேசினார் என்பது உண்மைதான். இந்த தொனியில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இருவரும் “இந்துஸ்தான் மண்ணின் பிள்ளைகள்…இந்தியா இந்த இருவருக்கும் பொதுவான தாயாக இருப்பதால்,  அவர்கள் இரத்தத்தால் சகோதரர்கள்” என்ற உண்மையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இருப்பினும்,  சாவர்க்கரின் சிறைவாசம், இந்தியா பற்றிய அவரது கருத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதை அவரது முதல் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஞ்சய் கீர் கூறுகிறார்.  சிறையிலிருந்து வெளியேறும் போது, ​​ “ஒரே கடவுள்,  ஒரே நாடு,  ஒரே குறிக்கோள்,  ஒரே இனம், ஒரே வாழ்க்கை, ஒரே மொழி”  என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார் என்கிறார் கீர். இதுவேபின்னர் இந்துத்துவாவாக மாற்றப்பட்டது.

அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான அர்ப்பணிப்பை நிராகரிப்பதற்கும், இஸ்லாமிய வெறுப்புக்கு  மாறுவதற்குமான காரணத்தை சாவர்க்கரே வழங்குகிறார். “பெரும்பாலான சிறை கண்காணிப்பாளர்கள் பொல்லாத முஸல்மான்களாக இருந்தனர். அவர்களின் கீழ் இருந்த கைதிகள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்தனர். இந்து கைதிகள் துன்புறுத்தப்பட்டனர்…”  என்று கூறியுள்ளார்.  சிறையில் இருந்தவர்களில் சாவர்க்கர் மட்டுமே சிறை கண்காணிப்பாளர்கள் கைகளில் துன்புறுத்தப்பட்டதை இந்து – இஸ்லாமியர் பிரச்சினையாக முன்வைத்தார்.

பலமுனைகளில் வெற்றி பெற்ற விவசாயிகள் – அனைத்து முனைகளிலும் தோல்வியுற்ற ஊடகங்கள்

ஆனால் பரிந்திர குமார் கோஷ் (அரவிந்த கோஷின் இளைய சகோதரர்) தனது நினைவுக் குறிப்புகளில், இஸ்லாமியக் கைதிகள் சிறை அதிகாரிகளால் சமமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெளிவுபடுத்தினார். “அந்தமானில் அவர்கள்தான் (வார்டர், குட்டி அதிகாரி, ஜமாதார் போன்ற பதவிகளில்) எல்லாவற்றுக்கும் பொறுப்பாளர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்… வரிசையில் கொஞ்சம் குறுக்காக உட்கார்ந்து இருந்த ராம்லால், கழுத்தில் இரண்டு அடி கொடுத்தார். முஸ்தபா சொன்னதும் உடனே எழவில்லை.  அதனால் அவரது மீசை பிடுங்கப்பட்டது. பகாவுல்லா கழிப்பறையிலிருந்து வருவதற்குத் தாமதமாக்கிவிட்டார்,  அதனால் தடியடியைப் பெற்றார். மற்றும் அவரது பின்புறத்தின் தோல் உரிக்கப்பட்டது. இது போன்ற அழகான நடவடிக்கைகள் சிறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்னவெனில், இந்திய தேசியவாதத்திற்கான தனது உறுதிப்பாட்டை கைவிட்டதை சட்டபூர்வமாக்க சாவர்க்கர் இஸ்லாமிய சிறை அதிகாரிகளின் துன்புறுத்தலை ஒரு சாக்காகப் பயன்படுத்தினார். இந்துத்துவா படைப்பிரிவினரால் உண்மையான ‘பாரதியா’ என்று கருதப்படும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜும்தார், சிறை பற்றிய தனது புத்தகத்தில், “அந்தமானின் சிறைவாசம் மாபெரும் புரட்சித் தலைவர்கள் (சாவர்க்கர், அவரது சகோதரர் மற்றும் பாரின்)) மற்றும் ஆங்கில அரசாங்கத்தின் மீதான அவர்களின் அணுகுமுறை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்…”

முகமது அலி ஜின்னாவின் கீழ் முஸ்லீம் லீக் மார்ச் 1940 இல்தான் பாகிஸ்தானைக் கோரியது. இதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே,  சாவர்க்கர் தனது இரு தேசக் கோட்பாட்டை வகுத்தார். இந்துத்வா (1923) என்ற தனது புத்தகத்தில், இந்தியாவை இந்துக்களின் தாயகம் மட்டுமே என்றும்,  இஸ்லாமியர்கள் இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றும் கூறினார். “இந்தியில் உள்ள சகோதரி என்ற அடைமொழி குறிப்பது போல,  இந்து என்ற வார்த்தையின் மூலப் பொருள் ஒரு இந்தியரை மட்டுமே குறிக்கும், இருப்பினும் நாம் வார்த்தைகளின் பயன்பாட்டை அதிகமாக சிரமப்படுத்துகிறோம் ~ நாம் அஞ்சுகிறோம்,  உடைக்கும் அளவுக்கு ~ என்றால் இந்தியாவில் வசிப்பதால்,  ஒரு முகமதியனை (அவர் கூறியது போல) இந்து என்று அழைக்கிறோம்.”  என்று அறிவித்தார். அகமதாபாத்தில் (1937) நடைபெற்ற மகாசபை அமர்வில் தனது தலைமை உரையில் சாவர்க்கர், “இந்தியாவில் இரண்டு விரோத தேசங்கள் அருகருகே வாழ்கின்றன… இந்தியாவில் முக்கியமாக இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள்  ஆகியோரின் இரண்டு தேசங்கள் உள்ளன,”  என்று பேசினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் 9, 1942 இல் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியே ஏராளமானோர்  கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர். 1,00,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.   இதில் காந்தி உட்பட காங்கிரஸின் மொத்த உயர்மட்ட தலைமையும் அடங்கும். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வன்முறையில் கொல்லப்பட்டனர்.  பலர் காவல்துறை மற்றும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. இந்த அடக்குமுறை காலங்களில், சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு முழு ஆதரவை அறிவித்தார்.

பொய் வழக்குகள், காவலில் வன்முறை: ஸ்டான் சுவாமிகளை உருவாக்குகிறதா கேரளா?

கான்பூரில் (1942) நடைபெற்ற மகாசபை அமர்வில் உரையாற்றிய சாவர்க்கர் பின்வரும் வார்த்தைகளில் இந்துத்துவா செயல் தந்திரத்தைக் கோடிட்டுக் காட்டினார்: “அனைத்து நடைமுறை அரசியலின் முன்னணிக் கொள்கையும் (ஆங்கிலேயர்களுடன்) பதிலளிக்கும் ஒத்துழைப்பின் கொள்கையாகும் என்று இந்து மகாசபை கருதுகிறது .”தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மகாசபை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நிபந்தனையின்றி “ஆதரவான  ஒத்துழைப்பை” வழங்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். அரசியல் மட்டத்தில் அது என்ன அர்த்தம் என்பது தெளிவற்றது.

இந்து மகாசபாவும்,  முஸ்லீம் லீக்கும் வங்காளத்திலும் சிந்துவிலும் (பின்னர் NWFP) கூட்டணி அரசாங்கங்களை நடத்தின. இந்த கூட்டணியை  ஆதரித்து சாவர்க்கர்,  “நடைமுறை அரசியலிலும் நாம் நியாயமான சமரசங்கள் மூலம் முன்னேற வேண்டும் என்பதை மகாசபை அறிந்திருக்கிறது. அதற்கான  உண்மைக்கான சமீபத்திய சாட்சிதான் சிந்து,” என்று அறிவித்தார்.

“சிந்து இந்து-சபா,  அவர்களின் அழைப்பின் பேரில் கூட்டணி ஆட்சியை நடத்துவதில் லீக்குடன் கைகோர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. வங்காளத்தில் நடந்தது நன்கு அறியப்பட்டதாகும்.  கடுமையான லீக்  கட்சியினர் … அவர்கள் இந்து மகா சபா மற்றும் கூட்டணி அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவுடன்,  திரு ஃபஸ்லுல் ஹக் மற்றும் நமது மதிப்பிற்குரிய மகாசபா தலைவர் டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் தலைமையின் கீழ், இரு சமூகத்தினரும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வெற்றிகரமாக செயல்பட்டனர்,” என்றும் கூறினார்.

முகர்ஜிதான் துணைப் பிரதமராகவும்,  வங்காளத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒடுக்கும் துறைக்குப் பெறுப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜிக்கு சாவர்க்கர் செய்த கொடூரமான துரோகத்தை நாம் மறந்துவிட வேண்டும் என்று சாவர்க்கர் மறுவாழ்வுக் குழு விரும்புகிறது. நேதாஜி இந்தியாவை ராணுவ ரீதியாக விடுவிக்க திட்டமிட்டபோது, ​​ பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு முழு ராணுவ ஒத்துழைப்பை வழங்கினார் சாவர்க்கர்.

பாகல்பூரில் (1941) நடைபெற்ற மகாசபை அமர்வில் உரையாற்றுகையில், “எங்கள் சிறந்த தேசிய நலன் கோருகிறது,  இந்தியாவின் பாதுகாப்பைப் பொருத்தவரை,  இந்திய அரசாங்கத்தின் போர் முயற்சிக்கு பதிலளிக்கும் ஒத்துழைப்பின் உணர்வில்,  இந்துத்துவம் தயக்கமின்றி கூட்டணி சேர வேண்டும். இராணுவம், கடற்படை மற்றும் வான்வழிப் படைகளில் முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் சேருதல்  வேண்டும் …”  என்று  அவர் அறிவித்தார்.  மகாசபா ஆவணங்களின்படி சாவர்க்கரால் 1,00,000 இந்துக்களை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் சேர ஊக்குவிக்க முடிந்தது.

1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் சாவர்க்கர் குறைந்தபட்சம் ஐந்து கருணை மனுக்களைச் சமர்ப்பித்தார். இவை கோழைத்தனமான செயல்கள் அல்ல,  மாறாக அவர் “செயலில் இறக்க விரும்பியதால் சமர்ப்பிக்கப்பட்டதாக சாவர்க்கரைட்டுகள் கூறுகின்றனர். இதுதான் ஒரே வழி என்று அவர் ஆங்கிலேயர்களுக்கு ஆறு கடிதங்களை எழுதினார். கிடைக்கக்கூடிய இரண்டு கருணை மனுக்களின் ஆய்வு,  இவை முழு சரணடையும் சமர்ப்பிப்புகள் என்பதைக் காட்டுகிறது. நவம்பர் 14, 1913 தேதியிட்ட மனு பின்வரும் வார்த்தைகளுடன் முடிந்தது: “அரசாங்கம் தங்களின் பன்மடங்கு தொண்டுள்ளம் மற்றும் கருணையால் என்னை விடுவித்தால்… அவர்கள் விரும்பும் எந்தத் திறனிலும் அரசாங்கத்திற்கு சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்,  ஏனென்றால் எனது மனமாற்றம் மனசாட்சிக்கு உட்பட்டது,  அதுவே எனது எதிர்கால நடத்தை என்று நம்புகிறேன். நான் வெளியிலிருப்பதன் மூலம் பெறுவதோடு என்னை சிறையில் வைத்திருப்பதால் பெறுவது என்னவாக இருக்கும் என்பதை ஒப்பிட முடியாது. வல்லமையுள்ளவர் மட்டுமே கருணையுடன் இருக்க முடியும், எனவே ஊதாரி மகன் அரசாங்கம் என்ற பெற்றோரின் கதவுகளைத் தவிர வேறு எந்த கதவுகளைத் தட்ட முடியும்?

முதலாளித்துவம் இனி நீடிக்கமுடியாது – பருவ நிலை தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு எச்சரிக்கை

மார்ச் 30, 1920 தேதியிட்ட மனு அவரது புரட்சிகர கடந்த காலத்தைப் பற்றிய புலம்பலுடன் பின்வரும் வார்த்தைகளுடன் முடிந்தது.  “எனது ஆரம்பகால வாழ்க்கையின் புத்திசாலித்தனமான வாய்ப்புகள் மிக விரைவில் சிதைந்துவிட்டன. எனது விடுதலையானது எனக்கு ஒரு புதிய பிறப்பாக இருக்கும் அளவு, அவை எனது தவறுகளுக்கு வருந்துவதற்கான, வலி மிகுந்த ஆதாரமாக இருக்கின்றன. மேலும் எனது விடுதலை, என் இதயத்தைத் தொடுவதாகவும்,  உணர்திறன்,  கீழ்ப்படிதல்,  கருணைக்கு மிகவும் ஆழமாக என்னை தனிப்பட்ட முறையில் இணைப்பதாகவும்,  எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக பயனுள்ளதாகவும் இருக்கும். ஏனென்றால், வலிமை தோல்வியடையும் இடத்தில் கூட பெருந்தன்மை வெற்றி பெறும்.”

சாவர்க்கர் 4, ஜூலை, 1911 அன்று அந்தமானில் இரண்டு ஆயுள் தண்டனை பெற்று (50 ஆண்டுகள்) சிறையில் அடைக்கப்பட்டார். 2 மே 1921 இல் (ஒன்பது ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களுக்குப் பிறகு) அவர் தனது மூத்த சகோதரர் பாபராவோவுடன் இந்திய நிலப்பகுதிக்கு மாற்றப்பட்டார். இறுதியாக 6 ஜனவரி 1924 அன்று (மொத்தம் 12 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை) எரவாடா சிறையில் இருந்து நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். சாவர்க்கர் ஒரு பகுத்தறிவாளராகவும்,   தீண்டாமைக்கு எதிரான அறப்போராளியாகவும் போற்றப்படுகிறார்.

இவை மகாசபை ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சாவர்க்கரின் நம்பிக்கைகள்/செயல்களுடன் ஒப்பிடப்பட வேண்டும். மனுவை இந்துக்களுக்குச் சட்டம் வழங்குபவராக அவர் அறிவித்தார்.  மேலும் அவர் கற்பித்த “ஆண்மைப் பாடங்களை நாம் மீண்டும் கற்றுக்கொண்டால்  நம் இந்து தேசம் மீண்டும் வெல்லமுடியாதது என்றும்,  நாம் ஒரு முறை நிரூபித்தது போல் ஒரு இனத்தை வெல்லும் என்றும்” வலியுறுத்தினார். வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணக்கத்திற்குரியது. இன்று மனுஸ்மிருதி இந்துச் சட்டம்” என்று கூறியுள்ளார்.

இந்து மகாசபை,  பழங்காலக் கோயில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவது தொடர்பான எந்தச் சட்டத்தையும் வற்புறுத்தவோ, அந்தக் கோயில்களில் நிலவும் புனிதமான பழங்கால மற்றும் தார்மீக பயன்பாடு அல்லது வழக்கத்தை சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தவோ செய்யாது,” என்று அவர் தனிப்பட்ட உத்தரவாதம் அளித்தார். பொதுவாக மகாசபை தனிப்பட்ட சட்டத்தைப் பொறுத்த வரையில் நமது சனாதனி சகோதரர்கள் மீதான சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்க எந்தச் சட்டத்தையும் ஆதரிக்காது” என்றார்.

சாவர்க்கர் இங்கிலாந்து ராணியிடம், இந்தியா  அவரது கையை விட்டு நழுவுவதற்கு முன் “அவரது மாட்சிமை  இந்தியாவை நேபாள மன்னரைப் போன்ற பிரிட்டனின் சமமான சுதந்திர கூட்டாளியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தார்.

இந்துத்துவா ஆவணக் காப்பகங்களில் உள்ள வரலாற்று உண்மைகளை முற்றிலும் புறக்கணித்து,  அதன் அனைத்து இலட்சியங்களுக்கும் எதிரான ஆளுமை ஒரு சின்னமாக முன்வைக்கப்படுவது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு மிகவும் சோகமான நேரம்.

thestatesman இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

எழுதியவர்: ஷம்சுல் இஸ்லாம்   

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்