Aran Sei

சத்யஜித்ரே நூற்றாண்டு : கதாபாத்திரங்களுக்கு மரியாதை

வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் இந்திய சினிமாவை உலகளவில் புகழ்பெறச் செய்தவருமான இயக்குநர் சத்யஜித்ரே நூற்றாண்டு அடுத்த வருடம் வரவுள்ளது. இதையொட்டி சத்யஜித்ரே உருவாக்கிய ஃபெலுடா மற்றும் பேராசிரியர் ஷொங்கு ஆகிய பிரபலக் கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

சத்யஜித்ரேயின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவர் உருவாக்கிய வங்காள இலக்கியத்தின் மறக்க முடியாத கதாபாத்திரங்களைக்கொண்டு உருவாக்கப்படும் திரைப்படத்தை அவரது மகன் சந்தீப் ராய் இயக்கவுள்ளார்.

 

1965 ஆம் ஆண்டு, சத்யஜித்ரே, ஒரு சிறுவனையும் அவனது மூத்த ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனையும் கதாபாத்திரங்களாகக்கொண்டு ஒரு சிறுகதையின் முதல் வரைவை எழுதினார். அந்த ஒன்றுவிட்ட சகோதரன் தான் ஃபெலூடா என்ற ப்ரதோஷ் சந்திர மித்ரா. அதுமுதல் வங்காள இலக்கிய வாசகர்களின் ஒட்டுமொத்த இதயங்களையும் வென்ற கதாபாத்திரம் ஃபெலூடா ஆகும். முதல் கதை எழுதப்பட்டு ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகும், சினிமா அல்லது தொலைக்காட்சி போன்ற பிரபலமான ஊடகங்களில் ஃபெலூடாவுக்கு எந்த தேசிய ரீதியான தழுவல்களும் உருவாக்கப்படவில்லை.

பேராசிரியர் ஷோங்கு, வங்காள விஞ்ஞானி மற்றும் ஒரு கண்டுபிடிப்பாளர் ஆவார். ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்துக்கு, சர் ஆர்தர் கோனன் டாய்ல் எழுதிய ‘புரொபசர் சேலஞ்சர்’ தான் உந்துதல்.

சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி, அபு சன்சார், சாரு லதா, ஜல்சா கர், தி பிக் சிட்டி, சாருலதா போன்ற திரைப்படக் காவியங்களுக்காக உலகளவில் மதிக்கப்படுகிறார்.  1992-ஆம் ஆண்டு சத்ஜித்ரேக்கு  அவரின் ஒட்டுமொத்த சினிமா சாதனைக்காக, கௌரவ ஆஸ்கர் விருது  வழங்கப்பட்டது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்