Aran Sei

பிராந்திய வர்த்தக உறவைப் பாதிக்கும் எல்லைப் பிரச்சனை

credit : financialexpress

மார்ச் மாதம் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC)  காணொலி மூலம் நடைபெற்றது. இதில், கொரோனா கால சவால்கள் குறித்தும் அவசர கால நிதி குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.

தெற்காசிய பிராந்திய நாடுகள் அவசர கால ஒத்துழைப்பு குறித்த புது விவாதத்தைத் தொடங்கியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆறு மாதங்களில் இந்த ஒத்துழைப்பு கேள்விக்குறியானது.

சார்க் கூட்டமைப்பு பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பதில் உள்ள சவால்களுக்கான புத்தகமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு உறவுகள் ஒத்துழைப்பில் ஏற்படும் தோல்விக்கு உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

புவியியல் மற்றும் நிலவியல் வேறுபாட்டை அளவிலும் வலிமையிலும் பரவலாகக் கொண்டிருந்தாலும் பிராந்திய ஒத்துழைப்பில் வரம்புகள் உள்ளன. நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பிராந்திய ஒத்துழைப்பிற்கு அவசியம்.

வெற்றிகரமான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான அடிப்படைகளைப் புறக்கணித்துவிடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென்கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு(ASEAN) போலல்லாமல் தெற்காசிய நாடுகள் குறைவாக தொழில்மயமாக்கப்பட்டுள்ளதால் நாடுகளுக்கிடைபட்ட வர்த்தகத்தின் மூலம் விவசாயப் பொருட்களையும் குறைந்த மதிப்பு கொண்ட உற்பத்திப் பொருட்களையும் மட்டுமே பரிவர்த்தனை செய்துகொள்கின்றன.

வலிமையான மற்றும் நிலையான வர்த்தக உறவுக்கு அத்தியாவசியங்களைப் பூர்த்தி செய்யும் தேவை மற்றும் அளிப்பு மூலமாகத்தான் சாத்தியம். சார்க் நாடுகளில் வர்த்தக உறவு குறைந்ததற்கு இவையில்லாததுதான் காரணம்.

வர்த்தகத்தின்போது விதிக்கப்படும் வரிகள், இரு நாடுகள் அருகாமையில் இருந்தாலும் நாடுகளுக்கிடைபட்ட வர்த்தக உறவைக் குறைக்கும் காரணிகளாக உள்ளன. பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளின் பொருளாதாரம் மதிப்புகூட்டும் சரக்கு மற்றும் சேவை பொருட்களை ஏற்றுமதி செய்யும் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் பிராந்தியத்திற்குள் நடைபெறும் வர்த்தகத்தை அதிகரிப்பதில் இருந்து விலகியுள்ளது.

வரலாற்று வழிப்பட்ட நாடுகளுக்கிடையேயான மோதல்கள் அந்தப் பகுதியில் நம்பிக்கையின்மையையும் பல்வேறு தளங்களில் ஒத்துழைப்பதில் தடையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வெளியுறவு செல்வாக்கு அதிகரித்திருப்பது மற்ற பிராந்திய நாடுகளுக்கு இந்தியாவின் மேலாதிக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாகக் கலாச்சார உறவை நேபாளம் கொண்டிருந்தாலும், நம்பிக்கையான வர்த்தக உறவைக்கொண்டிருந்தாலும் காத்மாண்டு பிரச்சனை மற்றும் எல்லைப் பிரச்சனைகள் இருநாட்டு உறவை வலுவிலக்கச்செய்துள்ளது.

தெற்காசியச் சூழலில் வர்த்தகம் நாடுகளுக்கிடைபட்ட மோதல்களைத் தடுக்கும் விதமாகவோ, ஒத்துழைப்பிற்கு ஊக்கமளிப்பதாகவோ இல்லை. மாறாக அது சாத்தியமான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

உதாரணத்திற்கு, இந்தியாவில் உள்ள நிறையபேரின் லட்சியத் திட்டமான துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா இடையேயான எரிவாயு குழாய் திட்டம். துர்க்மெனிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரும் இந்தத் திட்டம் முக்கியமானதாக இருந்தாலும், ஏற்கனவே இந்த நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சனைகள் அவற்றிற்கிடையேயான உறவில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடைமுறைக்கேற்ற வகையில் நீண்ட கால தேசிய நலன்களைக் கருத்தில்கொண்டு இந்த நாடுகள் அண்டை நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பதை விருப்பத் தேர்வாகக் கொண்டுள்ளன.

கள யதார்த்தத்தின்படி பார்த்தால், தெற்காசியாவில் நாடுகளிடையே பெரிய பாதிப்புகள் ஏற்படாத போதும் இந்தத் திட்டத்திற்கான ஈராண்டுக் கூட்டம் தாமதப்படுத்தப்பட்டும் மற்றும் ரத்துசெய்யப்பட்டும் வருகிறது. இதன் விளைவாக ஒப்பந்தத்தில் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்குச் சாத்தியமான பொருளாதாரச் சூழல்கள் இல்லாமல் போவது தொடர்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்