Aran Sei

இந்தியாவில் கல்வி சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வலதுசாரிகள் – விரிவான அறிக்கை

இந்த ஆறு அட்டவணைகளும்- ஆறு விரிந்த தலைப்புகளின் கீழ் தரப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தனித்தனி அனுபவங்களை பதிவு செய்வதற்காக பிரிக்காமல் தரப்பட்டுள்ள-  நந்தினி சுந்தர் மற்றும் கௌஹார் ஃபாசில் ஆகியோரால் புதுப்பிக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட பதிப்பாகும். கருத்துரிமை சுதந்திரம்  மற்றும் அதனை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மேம்படுத்துதல் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் கல்வியியல் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள் கேட்பின் ஒரு பகுதியான நிலை அறிக்கை ஆகும்.

அட்டவணையில் உள்ள விவரங்கள் சுமித் குமார், ரஜத் சோன்கார், அனன்யா ரெட்கர் மற்றும் நந்தினி சுந்தர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு மற்றும் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த உள்ளீடுகள் முழுமையானவை அல்ல ஆனால் விளக்கமான வை. வாசகர்கர்கள் இதிலிலுள்ள இடைவெளிகளை நிரப்ப தங்கள் கருத்துக்களை indiaacademicfrredom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

1). புத்தகங்கள் தணிக்கை மற்றும் பல்கலைகழக பாடத்திட்டத்தில் தலையீடு

இது  பல்வேறு வலதுசாரி குழுக்கள் ஏற்க மறுத்த மற்றும் தடை செய்ய முயன்ற புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் முழுமையான ஆய்வு அல்ல முயற்சியே. சிலவற்றில் மறுப்பு நூலாசிரியர் மீது உள்ளதே தவிர புத்தகத்தில் உள்ளவற்றைப் பற்றி அல்ல.

வ.எண்  ஆண்டு        நூல்/கட்டுரை     ஆசிரியர் நடவடிக்கை
1 2004 சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவில் இந்து அரசன் ஜேம்ஸ் லைனே மராட்டிய மன்னர் சிவாஜியை மோசமாக  காட்டியதாகக் கூறி சாம்பாஜி படை என்ற அமைப்பு எதிர்த்து, பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நூலகத்தை சூறையாடியதால் ஆக்ஸ்போர்டு யுனைவர்சிடி பிரஸ் அந்த நூலை திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆசிரியர் உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டியதாயிற்று.
2 2008 கட்டுரை: முந்நூறு இராமாயணங்கள் ஏ.கே. ராமானுஜன் ஏபிவிபியும்/என்டிடிஎஃப் ம்  மத உணர்வுகளை பாதிப்பதாகக் கூறி எதிர்த்ததால் தில்லி பல்கலைக்கழகத்தின் ‘கல்விக்குழு’ ரகசியமாக ஆய்வு செய்து இளங்கலை வரலாறு பட்ட வகுப்பு பாடத்திலிருந்து நீக்கப்பட்டது.
3 10/2010 சச் எ லாங் ஜர்னி ரோஹின்டன் மிஸ்திரி சிவசேனா கட்சி எதிர்த்ததால் மும்பை பல்கலைகழகம் இந்த புதினத்தை கைவிட்டது.
4 2014 இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு வெண்டி டோனிகர் ஆர்எஸ்எஸ் கருத்தியல்வாதி தினாத் பாட்ரா இது இந்து சமயத்தின் மதிப்பைக் குறைப்பதாக கூறி எதிர்ப்புத் தெரிவித்தார். இதன் அனைத்துப் பிரதிகளையும்  பென்குவின் பதிப்பகத்தார் திரும்பப்பெற்றுக் கொண்டனர்.

 

5 ஜனவரி 2015 மாதொருபாகன் பெருமாள் முருகன் இந்துத்துவாவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றம் எழுத்தாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
6 ஏப்ரல் 2016 சுதந்திரத்திற்கான இந்தியாவின் போராட்டம் பிபின் சந்திரா. சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை ‘ புரட்சிகர தீவிரவாதி’ எனக் கூறியதால் தில்லி பல்கலைக்கழகம் இதன் விற்பனையை நிறுத்தி விட்டது.
7 ஆகஸ்ட் 2017 சுதந்திரத்தை நோக்கி கையெழுத்துப் பிரதிகள் (1941) அர்ஜூன் தேவ், வரலாற்றாளர் இந்த கையெழுத்துப் பிரதிகள் ஆர்எஸ்எஸ் ஐ மோசமாக காட்டுவதால் இதன் வெளியீட்டை ICHR தாமதப்படுத்தியது
8 அக்டோபர் 3018 சமாஜிகா ஸ்மக்ளூர்லு கொமட்டலு கான்ச்சா இலியா இதன் தலைப்பையும், புத்தகத்தில் உள்ள சில உள்ளடக்கங்களும் இழிவுபடுத்துவதாகவும், தாக்குதல் நடத்துவதாகவும் உள்ளதாகக் கூறி ஆர்ய வைஸ்யர் எதிர்த்தனர். எழுத்தாளரின் வீட்டை முற்றுகை இட்டனர்.
9 2017& 2018 எரியும் காடு: மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்தியாவின் போர் நந்தினி சுந்தர் இது நக்சல் இயக்கத்தை பெருமைப்படுத்துவதாக இருப்பதாக  கூறி முதுகலை சமூகவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டது
10 அக்டோபர் 2018 நான் ஏன் இந்துவாக இல்லை, அரசியல் தத்துவியலாளராக கடவுள், பிற்கால இந்து இந்தியா கான்ச்சா இலியா இந்து மதத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி NDTF இதனை தில்லி பல்கலைக்கழக முதுகலை பட்ட அரசியல் அறிவியல் பாடதிட்டத்திலிருந்து நீக்க விரும்பியது. ‘தலித்’ என்ற சொல்லை எதிர்த்தது.

 

 

11 2018 கீழ்நிலை மக்களும் இறையாண்மையும்:பஸ்தாரின் ஒரு மானுடவியல் வரலாறு நந்தினி சுந்தர் NDTF இந்த புத்தகத்தை தில்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரியது
12 2018 சுற்றுசூழல் புனைவியம்: வேரியர் எல்வினும் எதிர் -நவீன மலைவாழ் மக்களின் அடையாளமும் அர்ச்சனா ப்ரசாத் NDTF இந்த புத்தகத்தை தில்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரியது

 

2).  கருத்தரங்குகூட்டங்கள்/ வளாக நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்தல மற்றும் இடையூறு செய்தல்

ஆர்எஸ்எஸ் ன் மாணவர் அணியான அகில இந்திய மாணவர் சங்கம்(ஏபிவிபி), வளாகத்தில் நடைபெறும் குறிப்பாக காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் நக்சல்பாரிகள் குறித்த கருத்தரங்குகளை நீண்ட காலமாகவே சீர்குலைத்து வருகின்றனர். எனினும் 2014 ம் ஆண்டிலிருந்து ஒரு புதிய மட்டத்திற்கு இதனை கொண்டு சென்றுள்ளனர். ஜனநாயகம், அரசியலமைபாபுச் சட்டம் குறித்த பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்குகளை எதிர்த்து வருகிறார்கள். மேலும் அவர்கள் ஆளும் பாஜக அரசை விமரிசிக்கும் பேச்சாளர்களையும் குறி வைத்துள்ளனர். ( அத்தகைய பேச்சாளர்கள் தடுக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் நாங்கள் இங்கு பட்டியலிடவில்லை.) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து வரும் எந்த ஒரு பேச்சாளரையும் தங்கள் நியாயமான இலக்காகக் கருதுகின்றனர். இத்தகைய கருத்தரங்குகளை அல்லது பட்டறைகளை நடத்துவதற்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்குப் பதிலாக பல்கலைக்கழக பொறுப்பாளர்கள் இந்த அச்சுறுத்தல்களை காரணங்காட்டி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்து விடுகின்றனர். இதுதான்  ‘கூச்சலிடுவோரின் ரத்து அதிகாரம்( Hecklers Veto) ‘ என்று அழைக்கப்படுகிறது. .

ஆர்எஸ்எஸ் பேச்சாளர்கள் அல்லாத மேடை நிகழ்ச்சிகள் இடதுசாரிகளால் இரண்டே இரண்டு முறைதான் நடந்துள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டதுள்ளது. இந்த அட்டவணை பெரும்பாலும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்தவற்றையே உள்ளடக்கி உள்ளன. மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

எண்  ஆண்டு          இடம்   பேச்சாளர் பேசு பொருள்     நடவடிக்கை
1 ஏப்ரல் 2010 ஜேஎன்யூ மக்கள் மீதான போர் எதிர்ப்பு அமைப்பு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அரசின் ‘பச்சை வேட்டை’ க்கு எதிராக கலை நிகழ்ச்சி தாண்டேவாடாவில் 76 பாதுகாப்புப்படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ள பிறகும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிராக ஏபிவிபி+ என்எஸ்யூஐ மற்றும் சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பு ஆகியவை இடையூறு.
2 ஆகஸ்ட் 2010 ஜேஎன்யூ தருண் விஜய்- ஆர்எஸ்எஸ், ஏபிவிபியால் காஷ்மீர் மாணவர்கள் மீது  தாக்குதல் ஏபிவிபி ஏற்பாடு செய்த காஷ்மீர் பற்றிய நிகழ்வு தருண் விஜய் தவறான தகவல்களை கூறியதாக எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீர் மாணவர்கள் மீது   ஏபிவிபி தாக்குதல். தருண் விஜய் அவர்களை பின்லாடனின் கைக்கூலிகள் என்றார்.
3 ஜனவரி 2012 சிம்பயாசிஸ் பல்கலைகழகம், புனே சஞ்சய் தத், திரைப்படத் தயாரிப்பாளர் Jashn-e-azaadi ஆவணப்படம் திரையிடுதல் பிரிவினைவாதிகள் எனக் கூறி ஏபிவிபியால் நிறுத்தப்பட்டது
4 ஆகஸ்ட் 2013 FTI, புனே கபிர் கலா மன்ச், ஆனந்த் பட்வர்தன், திரைப்படத் தயாரிப்பாளர் ஜெய் பீம் காம்ரேட் திரையிடுதல் ஏபிவிபி, மன்ச் உறுப்பினர்களை நக்சலைட்டுகள் எனக் கூறியதுடன், FTI மாணவர்களைத் தாக்கினர்
5 மார்ச் 2014 ஆங்கில மற்றும் அந்நிய மொழிகள் பல்கலைக்கழகம், ஐதராபாத் எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய தத்துவியல் பிளவுகள், ஜனநாயகத்தை மறு கற்பனை செய்தல் மற்றும் எதிர்ப்புகளின் மறு வரைவு காரணமே கூறாமல் அனுமதி மறுப்பு
6 டிசம்பர் 2014 ILS சட்டக் கல்லூரி, புனே ஆனந்த் பட்வர்தன் ராம் கி நாம் திரையிடுதல் இதை ரத்து செய்ததற்கு மாணவர்களை அச்சுறுத்தியதேகாரணம். ஆனால் பின்னர்  அது மறுக்கப்பட்டது
7 பிப்ரவரி 2015 TISS, மும்பை திப்யேஷ் ஆனந்த், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் ‘காஷ்மீர் விளக்கம்:AFSPA வைத் தாண்டி சுட்பா’ உரை இயக்குநரே இடையூறு செய்து, நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் அனுமதி மறுத்தார்.
8 ஆகஸ்ட் 2015 ஆசம் வளாகம், புனே ஆர்எஸ்எஸ் ஐச் சேர்ந்த முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்சின் ஒருங்கிணைப்பாளர், இந்த்ரேஷ் குமார் முஸ்லீம் பெண்கள் பற்றிய நிகழ்ச்சி இந்த்ரேஷ் அஜ்மீர் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் புனே முஸ்லீம்கள் எதிர்த்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யவில்லை
9 ஜனவரி 2016 அலகாபாத் பல்கலைக்கழகம் சித்தார்த் வரதராஜன், தி வயர் ஜனநாயகம், ஊடகங்கள் மற்றும் கருத்துரிமை குறித்த விளக்கவுரை வரதராஜன் வளாகத்திற்குள் வந்தால் வன்முறை வெடிக்கும் என ஏபிவிபி அச்சுறுத்தியதால் துணை வேந்தர்  நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். பின் ஏபிவிபி யினர் சித்தார்த்தை முற்றுகையிட்டதால் காவல்துறை பாதுகாப்போடு அவர் வெளியேறினார்.
10 பிப்ரவரி 2016 பால்பவன், குவாலியர் விவேக் குமார், சமூகவியலாளர், ஜேஎன்யூ இந்தியாவைப் பற்றிய பாபா சாகேப்பின் பார்வை பிஜேஒய்எம்(ஆர்எஸ்எஸ்) க்கும் அம்பேத்கர் யுவ மோர்ச்சா விற்குமிடையே மோதல். விவேக் குமாரின் உரை ஆத்திரமூட்டுவதாகவும், தேசத்திற்கு எதிரானதாகவும் சித்தரிப்பு
11 பிப்ரவரி 2016 ஜேஎன்யூ கனையா குமார், உமர்காலித், ராமா நாகா, அனீர்பன்: 8 காஷ்மீரி மாணவர்கள் ‘அஞ்சல் நிலையம் இல்லாத நாடு’, அப்சல் குருவை தூக்கிலிட்ட முதலாமாண்டு விழா நாட்டிற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் ஏபிவிபி குற்றம் சாட்டியதில் உமர்காலித், கன்னையா குமார், அனீர்பன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
12 மார்ச் 2016 மத்திய பல்கலைக்கழகம், ஜார்க்கண்ட் எம்.என். பாணினி, ஜேஎன்யூ தேசத்தை கட்டமைப்பது குறித்த விரிவுரை பாணினி ஜேஎன்யூ பேராசிரியர் என்பதாலும், அவர் கன்னையா குமாரின் பொருளாதார ஆலோசகர் என்றும் கூறி ஏபிவிபி கொடுத்த அழுத்தத்தால் நிகழ்ச்சி ரத்து
13 மார்ச் 2016 தில்லி பல்கலைக் கழகம் பேரா. சாமன்லால், மாணவர் அமைப்பால் அழைக்கப்பட்டார் பகத்சிங் பற்றிய விரிவுரை 15 ஏபிவிபி யினர் பேராசிரியரை ‘தேச விரோதி ‘ என்று  அவதூறாக பேசி  முழக்கம் எழுப்பினர்
14 மே 2016 ‌ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் மாணவர்கள் விவேக் அக்னிஹோத்ரியின் ‘போக்குவரத்து நெருக்கடியில் புத்தர்’ என்ற திரைப்படத்தை ஒளிபரப்பியதற்காக ஏபிவிபிக்கும் , இடதுசாரி மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் வெடித்தது
15 செப். 2016 அரியானா மத்திய பல்கலை கழகம் ஸ்நேஹ்சதா மானவ், மனோஜ் குமார், ஆங்கிலத் துறை

 

ஜூலை மாதம் இறந்து போன மகாஸ்வேதா தேவி நினைவாக திரௌபதி நாடகம் போடப்பட்டது. இது இந்திய ராணுவ வீரர்களை குறைத்து மதிப்பிடுவதாகக் கூறி ஏபிவிபி எதிர்ப்புத் தெரிவித்து உருவ பொம்மைகளை எரித்து தேசத்துரோகிகள் குற்றத்தில் கைது செய்ய புகார் அளித்தது. இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

3). ஆசிரியர்களை கைது செய்வது/ ஆசிரியர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மாணவர்களை கைது செய்வது

இந்த அட்டவணை முதல் தகவல் அறிக்கையிலோ அல்லது குற்றப்பத்திரிகைகளிலோ அல்லது காவல்துறை விசாரணையின் போதோ இவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு கடுமையான குற்றச் சாட்டுகள் மற்றும் வழக்குகள் பதியப்பட்டு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டது. எதிர்ப்புகளின் மீது எந்த அளவு கடுமையான குற்றவியல் குற்றச் சாட்டுக்கள் சுமத்துவது அதிகரித்து வருகிறது என்று காட்டுவதே இதன் நோக்கம்.

கடுமையான மருந்துவ உதவித் தேவைப்படும் நிலையிலும்  உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பிணை விடுதலை மறுக்கப்படுகிறது. சிலர் தங்கள் பெற்றோர்களின் இறுதிச் சடங்குகளை செய்யக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். இதே போல ஒரு மாணவி கருத்தரித்த இருந்த போதும் மூன்று மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பல சூழ்நிலைகளில் புத்தங்களோ அல்லது பிற பொருட்கள் அவர்களுக்குத் தரப்படவில்லை. இந்த அட்டவணை முழுமையானதல்ல. ஆனால் விளக்கமானவை.

 

எண்   ஆண்டு    இடம்    பேச்சாளர்    தலைப்பு நடவடிக்கை
1 ஏப்ரல்2012 ஜாதவ்பூர் பல்கலை கழகம் அம்பிகேஷ் மகாபாத்ரா “மரியாதைக்குரிய மனிதர்கள்” மீது அவதூறுகளை பரப்புவது மம்தா பானர்ஜி குறித்து கேலிச் சித்திரம் வரைந்தததற்காக, பெண்களின் அடக்கத்தை கேள்விக்குள்ளாக்கியது, தகவல் தொழில்நுட்ப சட்டம், ஐபிசி யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குப் பதியப்பட்டது.
2 மே2014 தில்லி பல்கலை கழகம் ஜி.என். சாய்பாபா, தி.ப. ஆசிரியர் உபா

UAPA

ஆயுள் தண்டனை, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு. கடும் உடல்நலமிலன்மையிலும் கூட பிணை விடுதலை தர மறுப்பு
3 பிப்ரவரி 2016 இந்திய பத்திரிகையாளர் சங்கம் சர் கீலானி,

தி.ப. ஆசிரியர்

தேசத்த துரோகம் இந்தியாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர்  நிரபராதி என விடுதலை. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக பல பேராசிரியர்கள் விசாரணைக்கு ஆளாயினர். முன்னதாக நாடாளுமன்ற குண்டு வெடிப்பு வழக்கிலிருந்தும் விடுதலை.
4 மைசூர் பலகலை கழகம் மகேஷ் சந்திர குரு ராமனை “இழிவு படுத்துவது” தலித் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். மோடியையும் இராணியையும் அவமானப்படுத்திய தாக குற்றம் சாட்டப்பட்டார்
5 நவம்பர் 2016 தில்லி பல்கலை கழகம்,

ஜேஎன்யூ

நந்தினி சுந்தர், அர்ச்சனா ப்ரசாத் மேலும் நான்கு பேருடன் உண்மை கண்டறியும் குழுவாக சென்று ஒரு ஆதிவாசியை கொலை செய்ததாக குற்றம் சாட்டினர் கொலை, ஆயுத சட்டம், கலவரம் செய்தல்,உபா ஆகியவற்றின் கீழ் வழக்கு. ஆனால் உச்சநீதிமன்றம் பாதுகாப்பு கொடுத்தது. பின்னர் குற்றச்சாட்டுகள் பிப்ரவரியில் கைவிடப்பட்டன
6 ஜூன் 2018 நாக்பூர் பல்கலை கழகம் ஷோபா சென் UAPA பீமா கோர்கோயன் வழக்கில் மாவோயிஸ்டுகள் தொடர்பு என்ற பெயரில் கைது
7 ஆகஸ்ட் 2018 தி.ப., சட்டப் பல்கலைக்கழகம் சுதா பரத்வாஜ் UAPA பீமா கோர்கோயன் வழக்கில் மாவோயிஸ்டுகள் தொடர்பு என்ற பெயரில் கைது
8 செப். 2018 மணிப்பூர் பல்கலை கழகம் ஆசிரியர்களும், மாணவர்களும் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லுதல் துணை வேந்தரின் உதவியாளர் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றதாக கூறியதால் நள்ளிரவில் காவல்துறை சோதனை
9 செப். 2018 ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலை கழகம் EFLU சத்யநாராயணா மருமகனாக இருப்பது வரவரராவின் மருமகனாக இருப்பதால் மாவோயிஸ்டு தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தில் வீட்டில் சோதனை
10 பிப்ரவரி 2019 ஐகான் வணிகவியல் கல்லூரி,

கவுகாத்தி

பாப்ரிZ பானர்ஜி தடுப்புக் காவல் தனது முகநூல் பக்கத்தில் காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தை விமர்சனம் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டார்
11 மே 2019 ஜாம்ஷெட்பூர் கூட்டுறவு கல்லுாரி விக்ரம் ஹான்ஸ்டா, ஆசிரியர் தடுப்பு காவல் 2017ல்ஐஐடி,சென்னையில், முகநூலில் மாட்டுகறி விருந்தை ஆதரித்ததாக குற்றம் கூறப்பட்டார்
12 அக்டோபர் 2019 ஆஸ்மேனியா பல்கலை கழகம் கே. ஜெகன் UAPA மாவோயிஸ்டுகள் தொடர்பு என்ற பெயரில் கைது
13 நவம்பர் 2019 அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்-

AMU

ஹியூமா பர்வீன் பகைமை வளர்ப்பது,

பகைமையை வளர்க்கும் அறிக்கைகள்

இந்து மகாசபா தலைவரின் புகாரின் பேரில் கணவருடன் முதல் தகவல் அறிக்கை பதிவு. அதில் இருவரும் முகநூல் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறப்பட்டுள்ளது
14 டிசம்பர் 2019 AMU மருத்துவர். கஃபீல் கான் தேசிய பாதுகாப்பு சட்டம் சிஐஏ எதிர்ப்பு போராட்டத்தில் உரையாற்றியதற்காக சிறை வைக்கப்பட்டார்
15 ஜனவரி 2020 ஆஸ்மேனியா பல்கலை கழகம் சி. காசிம் UAPA மாவோயிஸ்டு தொடர்பு குற்றச்சாட்டு

 

4). ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள்

இந்த அட்டவணை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான கொலைகள் முதல்(எம்.எம். கார்புர்கி, எச்.எஸ்‌ சபர்வால்) பல்வேறு உடல் ரீதியான தாக்கல்களை கொண்டுள்ளது. பெரும்பாலும் ஏபிவிபி தொடர்புடைய தனிநபர்களால் இவை நடத்தப்பட்டுள்ளன. சிலவற்றில் பிற குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை ஐயத்திற்குரிய வகையில் ஏபிவிபிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர்.

 

எண் ஆண்டு       இடம் நிகழ்ச்சி/ மாணவர்                   நடவடிக்கை
1 ஆகஸ்ட் 2011 புனித ஜோசப் பள்ளி, தம்கா, ஜார்க்கண்ட் அன்னா அசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒருநாள் அனைத்து நிறுவனங்களையும் மூட ஏபிவிபி அழைப்பு. அதற்கு கல்லூரி மறுப்பு. முதல்வர் அறையிலிருந்த பொருட்களை ஏபிவிபியினர் உடைத்தனர். வகுப்பிலிருந்த ஏபிவியினர் பாடம் நடத்த விடாமல் மேசையைத் தட்டி,சத்தம் எழுப்பி இடையூறு செய்தனர்.
2 செப். 2014 ஜாதவ்பூர் பல்கலை கழகம் வெளியிடப்பட வில்லை மாணவிகள் உறைவிடத்திலிருந்து இழுத்து வரப்பட்டு மாணவர்கள் உறைவிடத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளாயினர். திரிணாமுல் கட்சியினரும் காவல்துறையும் இதில் ஈடுபட்டனர்.

‘எழுச்சி உருவாகட்டும்’ இயக்கம் உருவானது.

3 நவம்பர் 2015 தில்லி ஜேஎன்யூ,, தி.ப. உள்ளிட்ட பல பல்கலைகழக மாணவர்கள் புத்தாய்வு மாணவர் நிலையை நீக்கியதை எதிர்த்த போராட்டம். காவல்துறையினர் தாக்குதல்
4 ஜனவரி 2016 ஐதராபாத் மத்திய பல்கலை கழகம் ரோஹித் வெமுலா தற்கொலை. தலித் மாணவர்கள் உறைவிட வசதி நீக்கம். சாதியம், நிறுவனக் கொலைகள். நீண்ட நாள் போராட்டம். மாணவர்களும் பேராசிரியர்களும் அடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்
5 ஆகஸ்ட் 2015 தார்வாட் எம்.எம். கல்புர்கி இந்து தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
6 பிப்ரவரி 2016 லக்னோ பல்கலை

கழகம்

ராஜேஷ் குமார் ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பேசியதால் ஏபிவிபியினர் அவரது உருவபொம்மையை எரித்தனர்.
7 ஆகஸ்ட் 2018 மகாத்மா காந்தி மத்திய பல்கலை கழகம் சஞ்சய் குமார் வாஜ்பாயை எதிர்த்து முகநூலில் பதிவு செய்ததற்காக ஆர்எஸ்எஸ் அணியினால் தாக்கப்பட்டார்.
8 செப். 2018 பேரா. தினேஷ் குப்தா அரசு முதுகலை மாணவர்கள், மான்டாசூர், ம.பி. ஏபிவிபியினரின் அச்சுறுத்தல் முழக்கம் எழுப்பி வகுப்பை இடையூறு செய்தனர்

வந்தே மாதரம் பாட விட வில்லை என்றும் பாரத் மாதாகி ஜே சொல்ல விடவில்லை என்றும் கூறி அவரை தேச விரோதி என்றனர். பேராசிரியரை அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்தனர்.

9 ஜூன் 2019 கட்ச் பல்கலை கழகம் ஜிரின் பாக்ஸி வாக்காளர் பதிவை தேர்ந்தெடுத்து நிராகரிப்பதாகக் கூறி ஏபிவிபியினர் அவர் முகத்தில் கரியைப் பூசி இழுத்து ஊர்வலம் சென்றனர்.
10 நவம்பர் 2019 பனாரஸ் இந்து பல்கலை கழகம் ஃபெரோஸ் கான் ஒரு முஸ்லீம் சமஸ்கிருதம் கற்றுத்தரக்கூடாது எனக் கூறி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
11 டிசம்பர் 2019 பனாரஸ் இந்து பல்கலை கழகம் சாந்தி லால் சால்வி பேரா. ஃபெரோஸ்கானை ஆதரித்தால் மாணவர்கள் இவரைத் தாக்கி, சாதிபபெயரால் இழிவுபடுத்தி பேசினர்.

5).  ஆசிரியர்கள் பணி நீக்கம்/ பணிவிடை நீக்கம்/ பணி விலகல் மற்றும் மாணவர்கள் இடைநீக்கம்

இந்த அட்டவணை அரசியல் காரணங்களுக்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பணிநீக்கம்/ இடைநீக்கம் செய்வதை விளக்குகிறது.  அழுத்தத்தால், பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிற முன்னணிகளால் தரப்படும் அழுத்தங்கள் காரணமாக தங்கள் பணியை எடுத்துக் கொள்ளாமலும் அல்லது பணி விலகியவர்களையும் உள்ளடக்கியது. இந்தப் பட்டியல் விளக்கமானது ஆனால் முழுமையானது அல்ல.

 

எண்   ஆண்டு   நபர்கள்/ குழு       இடம்       நடவடிக்கை
1 ஜனவரி 2016 பேரா. சந்தீப் மான்டே( மக்சேசே பரிசு பெற்றவர்) ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலை கழகம் நக்சலைட் என்ற ஐயத்தின் பேரில், தேச விரோதி செயல்களில் ஈடுபட்டது, ” இந்தியாவின் மகள்கள்” என்ற தடை செய்யப்பட்ட திரைப்படத்தை மாணவர்களுக்கு காண்பித்தது ஆகியவற்றிற்காக பணி நீக்கம்
2 மார்ச் 2016 அமித் சென்குப்தா ஐஐஎம்சி,

தில்லி

வெமுலா தற்கொலைக்கு எதிர்ப்பு, ஜேஎன்யூ, FTII பிரச்சனைகளை ஆதரித்ததற்காக தன்னிச்சையாகத் தரப்பட்ட இடமாறுதல் உத்தரவை மறுத்து பதவி விலகினார்.
3 டிசம்பர் 2016 நரேந்திர சிங் ராவ் ஐஐஎம்சி, தில்லி 25 தலித் துப்பரவு தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததையும், முஸ்லீம் மாணவர்கள்  மீதான துன்புறுத்தலையும், கல்வியை காவிமயமாக்குவதையும்  எதிர்த்தும் பேசியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
4 டிசம்பர் 2016 ராஜேந்திரன் நாராயணன் அசோகா பல்கலை கழகம், தில்லி காஷ்மீர் பற்றிய மனுவில் கையொப்பமிட்டதற்காக ஆசிரியரல்லாத ஊழியர்களை பதவி விலகச் செய்ததை எதிர்த்து பதவி விலகினார்.
5 பிப்ரவரி 2019 சல்மான் ஷாஹிதீன் லவ்லி புரஃபசனல் பல்கலை கழகம், பஞ்சாப் தனது மாணவர் இட்ட புல்வாமா பற்றிய சமூக வலைதள பதிவில் கருத்து தெரிவித்ததற்காக காஷ்மீர் பேராசிரியரான இவரை வலுக்கட்டாயமாக பதவி விலக செய்தனர்.
6 ஜூலை, நவம்பர், 2019 ராமச்சந்திர குஹா ஐஐஎஸ்சி, பெங்களூரு, அகமதாபாத் இவரது நியமனத்தை வலதுசாரிகள் எதிர்த்தனர்

குஹா தனது பேராசிரியர் பதவியை திரும்பப் பெற்றுக் கொண்டார். (காந்தி குளிர்கால பள்ளி இயக்குநர் பதவியையும் விலக்கிக் கொண்டார்). ஏபிவிபி எதிர்த்த பிறகும் அலகாபாத் பல்கலைக்கழகம் இவருக்கு பதவி வழங்கியது.

7 ஜனவரி 2020 பிரிஜேஷ் குமார் ராய் ஐஐடி, கவுகாத்தி நிறுவனத்தின் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள் பற்றி பேசியதற்காக கட்டாய ஓய்வில் செல்ல ஆணையிடப் பட்டார்.
8 மார்ச்,2021 பிரதாப் பானு மேத்தா அசோகா பல்கலை கழகம் மோடி அரசு மற்றும் பாஜக பற்றி விமர்சனங்களை பேசியதை எதிர்த்ததால் முதலில் துணை வேந்தர் பதவியிலிருந்து விலகிய அவர் அதே காரணத்திற்காக பேராசிரியர் பதவியிலிருந்தும் விலகினார்
9 மார்ச்,2021 அரவிந்த் சுப்ரமணியம் அசோகா பல்கலைக்கழகம் பிரதாப் மேத்தாவிற்கு எதிராக நிதியாளர்கள் அழுத்தத்திற்கு அரசு உடன்பட்டதை எதிர்த்தும், கல்வி சுதந்திரம் மறுக்கப்படுவதை எதிர்த்தும் பதவி விலகினார்.

 

 

6). ஆராய்ச்சி விசாக்கள் மறுப்பு/ கல்வி பரிமாற்றத்தில் தடைகள்

எதிர்காலத்தில் தங்களுக்கு விசா மறுக்கப்படும் என்ற அச்சத்தில் வெளிநாட்டு கல்வியாளர்கள் தங்கள் விசா பிரச்சனை குறித்து பேசத் தயங்குவதால் இந்தப் பட்டியல் மிகவும் குறுகி உள்ளது. ஆப்பிரிக்க மாணவர்கள் மீது இனவாதம் காட்டப்பட்ட நிகழ்வுகளும் இருக்கின்றன. அவை இதில் பட்டியலிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தற்போதைய சூழல் வெளிநாட்டு அறிஞர்கள் வரவேற்கத்தக்கதாக  இல்லை.

 

எண்  ஆண்டு         பெயர்                பாதிக்கப்பட்ட நிகழ்வு
1 2016 ஜார்ஜ் யோ அரசின் தலையீடு காரணமாக நலந்தா பல்கலைக்கழகத்திலன் வேந்தர் பதவியிலிருந்து விலகினார்
2 2017 பேட்ரிசியா சவுத்தாஃப் வெளிநாட்டவர் யோகா கற்றுத்தருவதை ஆர்எஸ்எஸ் எதிர்த்ததால் நலந்தா பல்கலைகழகத்தில் அவரது யோகா வகுப்பிற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை
3 ஜூலை 2018 பாகிஸ்தான் மாணவர்கள் ஆசிய ஆய்வு சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் மாணவர்களுக்கு விசா மறுப்பு
4 2018 பாக்.  மருத்துவர்கள் கல்லீரல் பற்றிய ஆய்வு குறித்து  ஆசிய பசிபிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு வரவிருந்த 30 பாக். மருத்துவர்களுக்கு விசா மறுப்பு
5 2019 சீன கல்வி நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து நடத்தும் கல்வியியல் மற்றும், ஆய்வுகளுக்கும், இருநாட்டு மாணவர்கள், ஆசிரியர்களை பரிமாற்றம் செய்துக் கொள்வதற்கும்  மத்திய உள்துறை மற்றும் அயலுறவுத்துறை அமைச்க ஒப்புதல் பெற வேண்டும் என புதிய நிபந்தனை.
6 2020 ஜேக்கப் லின்டென்தால் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால் விசா திரும்பப் பெறப்பட்டது
7 2021 அஃப்சாரா அனிகா மீம் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்த படங்களை பதிவிட்டுள்ளார் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
8 பிப்ரவரி 2021 அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கிற்கு வெளியுறவு அமைச்சக அனுமதி தேவை என உத்தரவு. பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது
9 மார்ச் 2021 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்திய உள்துறை அமைச்சகம், பத்திரிகை துறை செயல்பாடுகளுக்கும், ஆய்வு பணிகளுக்கும் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என விதி வகுத்துள்ளது.

 

www m.thewire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்