Aran Sei

கட்சிவிட்டு கட்சி தாவும் விகிதம் 39% அதிகரிப்பு – ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு அறிக்கை

ரசியல் சுயலாபத்திற்காக கட்சித் தாவி மாற்றுக்கட்சியில் வேட்பாளராக போட்டியிடும் விகிதம் 2016 லிருந்து 2020 வரை 39% அதிகரித்துள்ளதாக ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு (ASSOCIATION OF DEMOCRATIC REFORMS) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 443 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி வேறொரு கட்சியில் போட்டியிட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் சிஏஜி அறிக்கை தாக்கல் 75% குறைந்துள்ளது – ஆர்டிஐ மூலம் அம்பலம்

ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பின் அறிக்கையில், 2016-2020 காலகட்டத்தில் கட்சியை விட்டு விலகி மாற்று கட்சியில் போட்டியிட்ட 405 சட்டமன்ற உறுப்பினர்களில் 49% பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பாஜகவில் இருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிப் போட்டியிட்டுள்ளதாகவும் இது 405 பேரில் 4.4% ஆகும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

இதே போலக் கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் போட்டியிட்டவர்களில் 44.9% பேர் பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், 9.4% பேர் காங்கிரஸில் சேர்ந்துள்ளதாகவும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் 6.2 % பேர்  சேர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிமாறிய 12 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும், மாநிலங்களவையில் இருந்து விலகிய 17 பேரில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் 2016-2020 ஆம் ஆண்டில் கட்சி விட்டுக் கட்சித்தாவி போட்டியிடுவது 39% அதிகரித்து உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை

அறிக்கையின் படி கட்சி விட்டுக் கட்சி மாறிப் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர்களால் மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம், கர்நாடக ஆகிய மாநில அரசுகளுக்குச் சிக்கல் ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் அரசியல் லாபத்திற்காக கட்சி மாறுவதை அரசியல்வாதிகள் குறைத்து கொள்ள வேண்டும் எனவும் இது ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்குகிறது என்றும் ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.

SOURCE :  ASSOCIATION OF DEMOCRATIC REFORMS, REPORT ABOUT ANALYSIS OF RE-CONTESTING MPs AND MLAs WHO CHANGED PARTIES SINCE 2016

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்