Aran Sei

பிரதமர் மோடியும் ஏழு கொடிய பாவங்களும் தவறான சவடாலும் – பத்ரி ரெய்னா

image credit : thewire.in

கிறிஸ்துவராக மாறிய பிரதமர் நரேந்திர மோடி, பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள “ஏழு கொடிய பாவங்களை தவிர்க்க வேண்டும்” என்று கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி மீது தனது வெஞ்சினத்தை பொழிந்துள்ளார்.

இந்திய குடியரசின் எந்த ஒரு அரசியல் அமைப்பு நிறுவனம் இந்த பாவங்களை செய்ததில் அதிக குற்றவாளி என்று நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அதன் முடிவுகள் மோடியை வருத்தும் அளவுக்கு ஆச்சரியப்படுத்தும் என்பது தனி விஷயம்.

அது ஒரு புறம் இருக்க, முன்பு ஒரு முறை “அரசியலமைப்புச் சட்டம் நமது புனித நூல்” என்று மாண்புமிகு பிரதமர் பிரகடனம் செய்திருந்தது பாவங்கள் பற்றி விஷயத்தை இன்னும் சிக்கலுக்குள்ளாகிறது.

அது அப்படி இருக்கையில், ஒரு குடியரசுவாத அல்லது அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் கீழான கொடிய பாவங்களின் பட்டியல் பின்வருமாறு மறு வரைவு செய்யப்பட வேண்டும்

 1. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலேயே பொறிக்கப்பட்ட ஒரு “அடிப்படை அம்சம்” ஆன மதச்சார்பின்மையை சீர்குலைத்தல்;
 2. கருத்து சுதந்திரம், தேர்வு செய்யும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகளை சீர்குலைத்தல்;
 3. அரசியல் மற்றும் அறிவுத்துறை எதிரிகள் மட்டுமின்றி தவறு செய்யும் அனைவரும் பயமோ சாதகமோ இல்லாமல் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தின் முன் சமம் என்ற கொள்கையை சீர்குலைத்தல்.
 4. பொதுப் பிரச்சினைகளையும் தனிப்பட்ட பிரச்சினைகளையும் நியாயமாக பாரபட்சமற்று புலனாய்வு மற்றும் பரிசீலிக்கும் அரசு நிறுவனங்களின் அரசியல் சட்ட ரீதியான மற்றும் சட்ட பூர்வமான சுயேச்சை தன்மையை சீர்குலைத்தல்;
 5. தேசிய செல்வங்கள் ஒன்று குவிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் நாட்டின் இயற்கை வளங்கள் மீதான மக்களின் உரிமையை பராமரித்து பாதுகாக்கவும் அரசியல் சட்டம் பிறப்பித்துள்ள கட்டளையை சீர்குலைத்தல் (பிரிவு 39-ஐ பார்க்கவும்);
 6. அரசியலை பிற்போக்கான உணர்ச்சிகர கருத்துகளால் பிரிப்பது மூலமும் ஆளும் விருப்பங்களுக்கு பாதகமாக இருப்பதாக கருதப்படும் மக்களின் சில பிரிவுகளை குறி வைத்தல் மூலமும் சமூக நல்லிணக்க உணர்வுகளை சீர்குலைத்தல்;
 7. அரசியல் எதிர்த்தரப்பினர் தமது தரப்பு வாதங்களை முன் வைத்து, விமர்சன பகுப்பாய்வின் முகவர்களாக செயல்படுவதை தடுப்பதற்காக என திட்டமிட்டு, நாடாளுமன்றமும் அதன் குழுக்களும் வெளிப்படையாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுவதை சீர்குலைத்தல்;
 8. இலாபகரமான அரசு சலுகைகளை இழப்பது அல்லது ஒரு மோசமான தண்டனை பெறுதல் ஆகிய அச்சுறுத்தலின் கீழ் ஊடகங்களில் ஒரு பெரும் பகுதியை அதிகாரபூர்வ கருத்து நிலைக்குள் கொண்டு வருவது;
 9. அரசியல் சட்ட தகவல் அறியும் உரிமையின் கீழ் அனைத்து அரசு தரவுகளும் அரசு செயல்பாடுகளும் குடிமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையை சீர்குலைத்தல் ;
 10. பொது நலனுக்கும் ஜனநாயக அமைப்புக்கும் பாதகமானவை என்று கருதும் நடவடிக்கைகளை எதிர்த்து அமைதியாகவும் பயமின்றியும் கூடும் குடிமக்களின் உரிமையை சீர்குலைத்தல்;
 11. அதிகாரபூர்வ ஆதரவுடனும் போலீஸ் ஒத்துழைப்புடனும் உதிரித்தனமான எதிரிகளால் அச்சுறுத்தப்படாமல், மதரீதியான மற்றும் பிற சிறுபான்மையினர் அமைதியான முறையில் தமது நம்பிக்கையை பயிலவும், கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் உள்ள உரிமையை சீர்குலைத்தல்.

குடியரசு உடலிலும் ஆன்மாவிலும் ஆரோக்கியமாகவும் ஜனநாயகமாகவும் இருக்க வேண்டுமானால் மேலே சொன்ன பாவங்களை கொள்ளை நோய் போல கருதித் தவிர்க்க வேண்டும் என்று புனித நூலாகிய அரசியலமைப்புச் சட்டம் கோருகிறது. .

அரசியல் அமைப்பச் சட்டத்தின் புனிதத் தன்மை பற்றிய பிரதமர் மோடியின் சொந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால், பழைய ஏற்பாட்டின் பாவங்களை விட இந்தப் பாவங்கள் குறித்துதான் குடியரசின் முதன்மை செயல் அலுவலரான அவர் கவலைப்பட வேண்டும் என்று ஒருவர் கருதலாம். பாதிரியார்களும் பூசாரிகளும் முல்லாக்களும் வேறு எதற்கு இருக்கிறார்கள்?

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலவும் அறிவார்ந்த கருத்துக்களை வைத்துப் பார்த்தால் ஆளும் கட்சியும் அரசாங்கமும் இந்தப் பாவங்களை தவிர்ப்பது தொடர்பாக பல விளக்கங்களை அளிக்க வேண்டியுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டம் தனது புனித ஆன்மாவை இழந்து விட்டால், குடியரசுவாத கொள்கைகள் வெறும் கூடாக மாற்றப்பட்டு விட்டால், தேர்தல்களால் என்ன பயன்?

சுருக்கமாகச் சொன்னால், நமது பாவங்களின் பட்டியல் அரசியல் அமைப்பின் புனித கட்டளைகளுக்கு பொருத்தமானவையாக இருக்க வேண்டும்.

thewire.in இணையதளத்தில் வெளியான பத்ரி ரெய்னா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்