Aran Sei

தமிழகத்தில் முதுகலை மருத்துவர்கள் படும்பாடு – கண்டுகொள்ளுமா அரசு?

2020 ஆம் ஆண்டு கொரோனா நோயின் வீரியத்தை நாம் அனைவரும் கண்டோம். தனியார் மருத்துவமனைகள், கொரோனாவை சமாளிக்க முடியாமல் தவிக்க, கொரோனாவை கேடயம் கொண்டு தாங்கியது அரசு மருத்துவமனைகள். இந்த அரசு மருத்துவமனைகளின் முதுகெலும்பாகச் செயல்படுவது இளங்கலை பயிற்சி மருத்துவர்களான சிஆர்ஆர்ஐ ஆவார்கள். இந்த வருடம் மருத்துவ இறுதி ஆண்டு தேர்வு இது வரை நடை பெறதாதால், அடுத்த தொகுதி சிஆர்ஆர்ஐ மருத்துவர்கள் இன்னும் மருத்துவ பணிக்கு வந்து அடையவில்லை.

ஒரு அரசு மருத்துவமனையில் அனைத்து முக்கிய வேலைகளையும் இரவு பகல் பாராது நிகழ்த்தி முடிப்பது முதுகலை பட்ட பயிற்சி மாணவர்கள் ஆவார்கள். ஏற்கனவே கொரோனா நோயால் தங்கள் ஒரு வருட பயிற்சி காலத்தை இழந்துள்ள இந்த முதுகலை மருத்துவர்கள், இப்போது தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் சிஆர்ஆர்ஐ மருத்துவர்கள் இல்லாமல் அனைத்து பணிசுமைகளும் தாமே ஏற்கும்  பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்

ஒரு மருத்துவமனையில் நோய் சமந்தப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய முதுகலை மருத்துவர், தற்போது இரத்தம் எடுப்பது, மாத்திரைகள் அளிப்பது, நோயாளிக்கு இடம் அளிப்பது, சர்க்கரை அளவு பார்ப்பது, இரத்த அழுத்தம் பார்ப்பது, பதிவு செய்வது என சிஆர்ஆர்ஐ மருத்துவர்களின் பணி மட்டும் அல்லாது செவிலியர்களின் பணிகளையும் சேர்த்து செய்யும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

உதவ மறுக்கும் செவிலியர்கள்

செவிலியர்களின் சங்கம் அதிக பலத்துடன் இருப்பதால், டியூஸ் எனப்படும் ஊசி போடுதல், இரத்தம் எடுத்தல் ஆகியது போன்ற பல பணிகளை  அரசு செவிலியர்கள் செய்வதில்லை என்பது அனைத்து மருத்துவர்களும் அறிந்த உண்மையே. இப்போது கொரோனாவில் ஏற்பட்ட அதிக பணிசுமையினால் மருத்துவர்கள் அதிக உடல் சுமை மற்றும் மன சுமைக்கு உள்ளாகியுள்ளர்கள்.

கொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு

கொரோனா இல்லாத நேரத்திலேயே தங்கள் சிறப்பு துறையின் அதிக பணிகளை ஏற்கும் முதுகலை  மருத்துவர்கள், இப்போது கொரோனா காலத்தில் தங்கள் துறை பணிகளையும் செய்து கொரோனாவின் வேலைகளும் இளங்கலை பயிற்சி மருத்துவர்கள் (சிஆர்ஆர்ஐ) இன்றி, செவிலியர்களின் ஒத்துழைப்பின்றி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாத மாதம் வழங்க வேண்டிய உதவி தொகையாகிய ஸ்டிபெண்ட் (stipend) மருத்துவர்களைச் சென்றடைவதில்லை, இந்தியவிலேயே தமிழ் நாடு முதுகலை மருத்துவர்களுக்கு மிக குறைவான உதவி தொகை பெற்று வருகிறார்கள். உதாரணத்திற்கு பீகாரில் முதல் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர் ரூ.68,545 பெறுகிறார், அண்டை மாநிலம் கேரளாவில் ₹55000 பெறுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில்  ₹37000 மட்டுமே மருத்துவர்கள் பெறுகிறார்கள்.

கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

கல்வி கடன் செலுத்தவேண்டிய திருமணமான மருத்துவர்கள், இந்த உதவித்தொகையை வைத்து தங்கள் குடும்பங்களை இயக்குவது மிக கடினமாக உள்ளது என கூறுகிறார்கள். இந்த நிலையில் குடும்பங்களைக் காணாமல் இன்னுயிர் தந்து பணி புரிந்த மருத்துவர்களுக்கு அரசு உறுதி அளித்த ஒரு மாத கூடுதல் உதவி தொகை ஒரு வருடம் ஆகியும் மருத்துவர்களை எட்ட வில்லை.

நேற்று (ஏப்ரல் 3) செவிலியர்களின் உதவி வேண்டும் எனவும், கூடுதல் பயிற்சி மருத்துவர்களின் உதவி வேண்டும் எனவும், தங்கள் உதவி தொகையை  அதிக படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

– மருத்துவர் ஏகலைவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்