Aran Sei

ஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கூடாது – பரிந்துரைக்கு எதிராக களமிறங்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

ஐடி கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யும்படி, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ராம்கோபால் ராவ் குழு, கடந்த ஆண்டு பரிந்துரைத்திருந்தது. இக்குழுவின் பரிந்துரை குறித்து, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான தேசிய ஆணையம் (என்.சி.பி.சி), தற்போது விசாரணை கோரியுள்ளது. தங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக என்.சி.பி.சி. கூறியுள்ளது.

விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு – ஐஐடி மற்றும் ஐஐஎம்கள் கவலை

ஆங்கில நாளிதழ் ஒன்றின் தகவலின்படி, அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட இந்த குழு, கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வி செயலாளர் அமித் கரேக்குக்கு, ஜனவரி 5 ம் தேதி கடிதமொன்றை எழுதியுள்ளது. அதில், 15 நாட்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பாக இணக்க அறிக்கையை குழு கோரியிருக்கிறது. இந்த கடிதத்தை அமைச்சகம் திங்கட்கிழமை பெற்றது என்று அந்த ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

இந்தச் சூழலில்தான் தற்போது என்.சி.பி.சி இந்த விசாரணையை கோரியிருக்கின்றது. இந்த விசாரணை விவகாரத்தில், தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரான தர்மேந்திர குமார் அளித்த புகாரையும் என்.சி.பி.சி எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. தர்மேந்திர குமார் அளித்திருக்கும் புகாரில், `தங்கள் சங்கத்தின் பரிந்துரையை அரசு நியமித்த குழு ஏற்கவில்லை என்றும், விரைவில் அரசு இவ்விவகாரத்தில் தேவையானதை செய்ய வேண்டும்’ என்பதையும் என்.சி.பி.சி-யிடம் கோரியிருப்பதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் ஐ.ஐ.டி டெல்லியின் இயக்குனர் வி.ராம்கோபால் ராவ் தலைமையில் அரசு ஒரு குழுவை கடந்த ஏப்ரல் மாதம் நியமித்திருந்தது. அக்குழுவின் பரிந்துரையில்தான், `23 ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களின் ஆசிரிய நியமனத்தில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரையின் மூலம் அக்கல்வி நிலையங்களை `சிறந்த கல்வி நிலையங்களுக்கான’ பட்டியலில் சேர்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஐஐடியில் இடஒதுக்கீடு மறுப்பு `மநு’வை நடைமுறைப்படுத்தும் திட்டம் – திருமுருகன் காந்தி

மேலும் இக்கல்வி நிலையங்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்த, பிரச்சாரங்களையும், நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் பணி நியமணத்தையும் சம்பந்தப்பட்ட அந்தக் குழு, தங்கள் பரிந்துரையில் முன்னிறுத்தியிருந்தது. இப்படியாக இக்குழு தனது ஐந்து பக்க அறிக்கையை கடந்த ஜூன் 17 அன்று கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தாலும், அது உத்தரபிரதேசத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தின் மூலம், டிசம்பர் 16 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆகவே அதன்பிறகுதான் பிரச்னை தெரியவந்து பேசுபொருளானது. இதற்குப் பிறகுதான் தர்மேந்திர குமாரும் புகார் அளித்திருந்திருக்கிறார்.

அவர் என்.சி.பி.சி.க்கு அளித்த புகாரில், “இந்த நடைமுறை மூலம் எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்த பணியாளர்களை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். இது, குறிப்பிட்ட அந்த ஆசிரியப் பதவிகளை காலியாக வைக்கவே வழிவகுக்கும்” என்ற கூறி குழுவின் கூற்றை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதில் “60-70 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட பல ஐ.ஐ.டி கல்வி நிலையங்கள் இங்கு உள்ளன. அதேநேரம் இந்த நிறுவனங்களின் 95% க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒதுக்கப்படாத வகையை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இருந்தபோதிலும், எந்த கல்வி நிலையமும் உலகளவில், முதல் 200 க்குள் கூட உலக தரவரிசை பெறவில்லை.

ஐஐடி களில் இடஒதுக்கீடு ரத்து : அறிக்கையைக் குப்பையில் எறியுங்கள் – சு. வெங்கடேசன்

இதன்மூலம் ஆணையத்தின் பரிந்துரை, மிகத்தீவிரமான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது. பாம்பே ஐஐடியை சேர்ந்த அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம், குழுவின் இப்பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

என்.சி.பி.சி. தலைவர் பகவான் லால், ஆங்கில தளத்துக்கு அளித்த பேட்டியொன்றில், “குழுவின் பொருத்தமற்ற பரிந்துரைகளை, எங்கள் ஆணையம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுடன் (AICTE) எடுத்துக் கொள்ளும். ஐ.ஐ.டி கல்வி நிலையங்ககள் யாவும், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் எனும்போது, இந்த அடிப்படை அரசாங்கக் கொள்கையிலிருந்து அவர்களை எவ்வாறு விலக முடியும்? இது ஒரு பொருத்தமற்ற பரிந்துரைதான்.

இடஒதுக்கீடு விதிமீறிய உயர்கல்வித்துறை செயலர் : பதவி நீக்க வலியுறுத்தும் வேல்முருகன்

மேலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி நிறுவனங்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்கள் ஆசிரிய மற்றும் ஊழியர்களின் மட்டத்தில் கூட நிரப்புகிறார்களா, அல்லது இடஒதுக்கீட்டைத் தவிர்ப்பதற்கு அவர்கள் ‘பொருத்தமானவை இல்லை (என்.எஃப்.எஸ்)’ விதிமுறையைப் பயன்படுத்துகிறார்களா என தெரியவில்லை. அதுகுறித்தும் நாங்கள் ஆராய வேண்டியுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்