Aran Sei

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

ந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் மூவர்ண கொடியுடன் குடிமக்களின் உறவு ஆழமடையும் என்றும் இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசு கூறுகிறது.

மோடி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு – தி பிரிண்ட் இணையதளம் ஆய்வில் தகவல்

தற்போதுவரை இந்தியக் குடிமக்களுக்குத் தேசியக் கொடியுடனான உறவு, முறைசார்ந்த மற்றும் அமைப்புரீதி உறவாக மட்டுமே இருந்துவருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்குப் பிறகு இந்த உறவு தனிப்பட்டதாக மாறும் என்று இந்திய அரசு கருதுகிறது.

இந்த திட்டம் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு மேல் உள்ளது. ஆனால் இது தொடர்பாக இரண்டு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

முதல் சர்ச்சை ஜம்மு காஷ்மீரில் ஒரு மாவட்டத்தின் கல்வித் துறையின் உத்தரவு தொடர்பானது. இந்த இயக்கத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற வகையில், பட்காம் மண்டல கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளதால், அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவின் விளைவுகளை கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் சந்திக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்தின் கீழ், எல்லா குழந்தைகளும் தேசியக் கொடியை வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.”என்று இதுகுறித்து பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் திட்டத்தின் கீழ் சுமார் 20 கோடி வீடுகளில் கொடி ஏற்ற ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 4 கோடி கொடிகள் மட்டுமே உள்ளன என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. அதாவது, மீதமுள்ள கொடிகளின் ஆர்டரை மாநில அரசோ, இந்திய அரசோ அவர்களின் மட்டத்தில் தயாரித்து விற்பனை செய்யும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்.

மாநில அரசு விரும்பினால், மாநிலத்தின் தேவைக்கேற்ப ஒன்றிய அரசிடம் மொத்த கொடிகளை கோரலாம் அல்லது தானே கொடிகளுக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

ஒன்றிய அரசின் கூற்றுப்படி, கொடிகள் மூன்று அளவுகளில் கிடைக்கும். மூன்றின் விலையும் மாறுபடும். ரூ.9, ரூ.18 மற்றும் ரூ.25 க்கு கொடிகள் கிடைக்கும்.

கொடி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இந்த கொடிகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்குக் கடனாக வழங்கும்.

குடிமக்கள் தங்கள் சொந்த பணத்தில் கொடியை வாங்க வேண்டும்.

மக்கள் விரும்பினால், மொத்தமாக கொடிகளை வாங்கி மற்றவர்களுக்குப் பரிசளிக்கலாம். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் இதைச் செய்யலாம்.

உள்ளாட்சிகள், கடைக்காரர்கள், பள்ளிகள், கல்லூரிகள் இதில் இணைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அஞ்சல் நிலையங்களிலும் கொடிகள் கிடைக்கத்தொடங்கும்.

இந்திய அரசின் இலக்கு 20 கோடி வீடுகளில் கொடி ஏற்றுவது. கொடியின் குறைந்தபட்ச விலை 10 ரூபாயாக இருந்தாலும், மொத்தமாக 200 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் செலவிடப்படும்.

கொடிகளை வாங்கும் மக்களிடமிருந்து இந்த 200 கோடி ரூபாய் வரும். இந்தியாவில் இவ்வளவு அதிகமான கொடிகளை ஒரே நிறுவனத்தால் தயாரிக்க முடியாது.

என்.எல்.சியின் புதிய சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

இதற்காக சிறு, குறு தொழில்களுடன் தொடர்புடைய பல சுயஉதவிக் குழுக்கள், வணிகர்கள், வணிக நிறுவனங்களுக்கு டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முழு இயக்கத்தையும் ராஜஸ்தானின் உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்:-  ராஜஸ்தான் அரசு ஒரு கோடி வீடுகளில் கொடிகள் பறக்கவிட இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் 70 லட்சம் கொடிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசு 30 லட்சத்தை ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தனது ஏழு மண்டலங்களுக்கான 70 லட்சம் கொடிகளை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே சில பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.

பிரச்சனை என்னவென்றால், 10 ரூபாயில் கொடி, கம்பு, எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவு எல்லாம் அடங்கும். இந்தப் பணம் மிகவும் குறைவு என்று சில நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக இந்திய அரசு மாநிலங்களுக்குக் கொடியை மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் சில இடங்களுக்கு மட்டுமே அளிக்கிறது, எல்லா மாவட்டங்களுக்கும் அல்ல.

இரண்டாவது பிரச்சனை பணம் செலுத்துவது. சில மாநில அரசுகள் கொடி விற்பனை செய்தபிறகு கொடி தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொடுப்பது பற்றிப்பேசின. இந்த சூழ்நிலையில், எல்லா கொடிகளும் விற்றுப்போகாவிட்டால்,  பணம் என்னவாகும் என்பது நிறுவனங்களின் அச்சமாக உள்ளது.  டி.எம்.சி (TMC) தலைவரும் ஆர்.டி.ஐ (RTI) ஆர்வலருமான சாகேத் கோகலே இந்த முழு திட்டத்தையும் ஓர் ‘ஊழல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ட்வீட்கள் பதிவுசெய்த அவர்,  இந்த இயக்கம்,மோடி அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான தொடர்பின் விளைவு என்று குறிப்பிட்டார். மேலும் இந்த இயக்கத்திற்காக இந்திய கொடி சட்டத்திலும் அரசு மாற்றங்களைச் செய்துள்ளது என்று கூறினார்.

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

இந்தியக் கொடிச் சட்டம் 2002ன் படி, தேசியக் கொடியை கையால் நெய்த அல்லது கையால் நெய்யப்பட்ட துணிப் பொருட்களிலிருந்து மட்டுமே உருவாக்க முடியும். ஆகவே குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொடிகளை உருவாக்குவது எளிதல்ல.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தக் கொடி சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றத்திற்குப் பிறகு இப்போது தேசியக் கொடியை, கையால் ராட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட, கையால் நெசவு செய்யப்பட்ட அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட பட்டு, பருத்தி, பாலியஸ்டர் துணிகள்மூலம் தயாரிக்கலாம்.

இந்தியாவில் பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் (Reliance Industries Limited) என்று சாகேத் கோகலே கூறுகிறார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு ஜவுளி ஆலை உரிமையாளர்களுக்குக் கொடிகள் தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் ரிலையன்ஸ் நேரடியாக ஈடுபடவில்லை என்று பிபிசிக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

கொடியை பெரிய அளவில் தயாரிக்க சம்மதித்துள்ள நிறுவனங்கள், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மற்ற வியாபாரிகளிடம் துணை ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது மட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் இதுவரை தேசியக் கொடி ஏற்றப்படாத நிலையில் திடீரென இந்த உத்தரவு ஏன்?

இந்தக்காரணத்தை சுட்டிக்காட்டும் அசாமின் ஏஐயுடிஎஃப் தலைவர் அமினுல் இஸ்லாம், மோடி அரசின் இந்த இயக்கத்தை ஒரு ‘முரண்பாடு’ என்று அழைக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

பொதுமக்களின் கையில் இருந்து 16 ரூபாயை செலவழிக்க வைப்பதே இதன் நோக்கம் என்றும் அமினுல் இஸ்லாம் கூறினார். 16 ரூபாய் செலவழிப்பதால் ஒரு குடும்பம் தேசபக்தியை நிரூபிக்க முடியும் என்று அமினுல் இஸ்லாம் கருதவில்லை.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் சுதந்திரத்தின் ஆடை என்று நேரு வர்ணித்த காதி மூலம் தேசியக் கொடியை உருவாக்கியவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் அழிக்கிறார்கள்” என்று விவரிக்கிறார்.

ஹூப்ளியில் உள்ள காதி கொடி தயாரிக்கும் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 90 லட்சம் கொடிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றது என்றும் கொடி சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் இந்த ஆண்டு 14 லட்சம் கொடிகளுக்கான ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.

காதியை ஊக்குவிக்க குறைந்தபட்சம் ஒரு காதி கைக்குட்டையையாவது வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்திவரும் நிலையில் காதி கொடிகளின் இந்த நிலைமை இந்தியாவில் காணப்படுகிறது.

நன்றி: பிபிசி தமிழ்

வருகிறது 5G அழிகிறது BSNL | 5G Spectrum | Adani | Jio | Vodafone idea | Airtel | Ambani | BJP | Modi

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்