Aran Sei

‘பால் தேனீர் கூட்டணி’ – ஜனநாயகம் கோரி ஒன்றிணையும் மூன்று நாட்டு போராளிகள்

எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஹாங்காங், தாய்வான் மற்றும் தாய்லாந்தின் செயற்பாட்டாளர்கள் புதிய வகை அனைத்துலக கூட்டணியை உருவாக்கி உள்ளனர்

மொழிகள் வேறு, கோரிக்கைகள் வேறு, பின்புலங்களும் கூட வேறுவேறானவை. ஆனால் போராட்டம் மட்டும் ஒன்று. ஆம். கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கை அதிரச் செய்து வரும் போராட்டங்களை கவனித்து வரும் யாரும் சென்ற வாரம் பாங்காங்கில் நடந்த  போராட்டங்கள் ஒன்று போல் இருந்ததை உணர்வார்கள்.

கருப்பு உடையும் உறுதியான தொப்பியும், அந்த இளம் போராளிகள் கடைசி நிமிடத்தில் சமூக வலைதளத்தில் அறிவிக்கப்பட்ட இடத்தை அடைய வீதிகளில் வெள்ளமென திரண்டனர். காவல் துறையினர் வந்து தடுக்க முயன்ற போது அவர்களை எதிர்க்கவும் தயாராகினர். கை அறிவிப்புகளும், மனித சங்கிலிகளும் போராட்டத்தின் முன் வரிசையில் இருந்தவர்களுக்கும்  கூட நீர், பாதுகாப்பு முக கவசங்கள் போன்றவை எளிதில் சென்றடைந்தன.

அவர்கள் மேற்கொண்ட உக்திகள், அவர்களது தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட போதும், பிரதமர் ப்ரயுத் ச்சான் அவுச்சா போராட்டங்களுக்குத் தடை விதித்திருக்கும் போதும் தொடர்ந்து இயக்கம் தொய்வின்றி நடை போட்டது.

ஹாங்காங் போராட்டங்கள், பாங்காங்கிற்கு மட்டும் உத்வேகம் ஊட்டுவதாக இருக்கவில்லை. சமீப காலமாக தாய்வான், ஹாங்காங் மற்றும் தாய்லாந்து  முழுவதும் உள்ள போராளிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் இடையே எதிர்பாராத ஒற்றுமை வளர்ந்து வருகிறது. முதலில் நிகழ்நிலையில் இணைந்த இவர்கள்  தற்போது வேகமாக, அதிகமாக  தெருக்களிலும், நீதிமன்றங்கள் முன்பும் அதிகார மையங்கள் முன்பும் குவிகிறார்கள்.

அவர்களது எதிர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் எதிர்ப்புகளை அடக்குவதில்  இரக்கமற்ற பாரம்பரியம் கொண்ட  அரசுகளுக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார்கள். ஆனால், முறைசாரா கூட்டு யாவும் வீணானதது என்பது கிழக்கு ஆசியாவின் அடையாளமாகும். மூன்று இடங்களிலும்  குடிக்கப்படும் ஒரு எளிய பானம், முன்னணி போராளிகளை நினைத்துப் பார்க்க முடியாத எல்லைத் தாண்டிய ஆதரவாக மாற்றி விட்டது.

பால் தேநீர் கூட்டணி (Milk Tea Allience) 

தங்களது  தனிப்பட்ட போர் வேறுபட்டிருப்பது போலவே பால் தேநீர் பருகுவதும் வேறுபட்டிருந்தது. தாய்வானில் குளிர்ச்சியாக மரவள்ளி  கிழங்கு சீவலுடன் சேர்த்து பருகுவர். ஹாங்காங்கில் சூடாக , கடுப்பாக (strong) குடிப்பார்கள். தாய்லாந்திலோ பதப்படுத்தப்பட்ட பாலுடன் பனிக்கட்டியையும் இனிப்பையும் சேர்த்து சுவைப்பர் . ஆனால்  பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள் ஒன்றாகவே இருக்கும். அதுபோலவே போராளிகளின் அடிப்படை  நோக்கம் ஜனநாயகம் என்ற  ஒன்றுதான்.

“நீங்கள் பெரிய சக்திக்கு எதிராக போராட வேண்டும் எனில் ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும்“ என்கிறார் பாங்காக்கைச் சேர்ந்த முன்னணி மாணவர் போராளி ,  நெட்டிவிட்சோட்டிபாத்பாய்சல்(Netiwit Chotiphatphoisal) “ இந்த பால் தேநீர் கூட்டணி என்ற பெயர் அழகாக உள்ளது. மக்கள் இதனை கவர்ச்சியூட்டுவதாகப் பார்க்கிறார்கள். எதிர்ப்பைத் தூண்டுவதாக இல்லை.”

இந்த கூட்டணியின் ஆதரவாளர்கள் ஒருவர் மற்றவருக்கு என்ன செய்ய முடியும் என்பதைப்  பற்றி மிகைப்படுத்திக் கூறக்கூடாது அல்லது போராட்டங்களிடையே உள்ள  வேறுபாடுகளை முடிந்த அளவு குறைப்பது என்பதில் தெளிவாக உள்ளனர். தாய்வான் மாணவர்கள் ஒரு அரசாட்சியை எதிர்த்து, அதிக ஜனநாயக உரிமைக்காகவும், அரசு மக்களுக்கு அதிக   கடமையுடனும்  இருக்க வேண்டும் எனவும் போராடுகிறார்கள். ஹாங்காங்கில் போராடுபவர்கள் சீன ஆதரவுடன் ஆட்சி நடத்துபவர்களுக்கு எதிராக,  இங்கிலாந்து காலனியிலிருந்து விடுவிக்கப்பட்டு,  ஒப்படைக்கப்பட்ட போது,  கொடுத்த வாக்குறுதிகள்படி உரிமைகளையும், சுதந்திரத்தையும் தர வேண்டும் என்று  கோரி போரிடுகிறார்கள். அங்கு இந்த உரிமைகள், தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தால் அடியோடு பறிக்கப்பட்டுள்ளன. தாய்வானிலும் சீனாவிற்கு எதிராக ஒரு நிகழ்கால போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சீனா இதனை தன்னாட்சி பெற்ற தீவாக தனது நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், அதனால் படையை கொண்டாவது தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது.

ஆனால் இந்த வியப்பிற்குரிய கூட்டணியின் ஆதரவாளர்கள், பால் தேநீர் பகுதிகள் முழுவதும் பரவியுள்ள இந்த போராளிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் அன்றாட நடைமுறை சவால்களையும், தத்துவார்த்த கருத்துக்களையும் இராணுவத்தின் பின்னணியில் பாங்காக்கில் ஆட்சி புரிபவர்களின் முக்கிய கூட்டாளியான சீனாவின் வலிமை நாளும் அதிகரித்து வருவது குறித்த கவலையையும்  பகிர்ந்து கொள்கிறார்கள்.

தாய்வான் எதிர்ப்பாளர்கள் ஹாங்காங் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டனர். தங்கள் இருவருக்குமிடையே  அரசியல் அனுபவங்களில் உள்ள ஒற்றுமையையும், இரு பக்க செயற்பாட்டாளர்களும சீனாவின் எதேச்சாதிகாரத்தை எதிர்பவர்களாகவும் இருப்பதைக் காண்கிறார்கள் என்கிறார் தம்மசாட்  பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்  அரசியல் அறிவியல் துணை பேராசிரியர் ஜன்ஜிரா சொம்பத்பூன்சரி (Janjira Sombatpoonsari). ” ஹாங்காங்கை , தாய்வான் குடிமகனாகப் பார்த்தால், அது எதேச்சாதிகாரமான ஆட்சியாக- அடக்குமுறை, மாற்றிப் பேசுதல், பொய் மற்றும் பரப்புரை , தவறான தகவல்கள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை கொண்டதாகவே இருக்கும்.” என்கிறார் அவர்.

போராட்டத்தில் பங்கெடுத்த என்பதிற்கும் மேற்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். முக்கிய தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டு விட்டார்கள். அதில் மூன்று பேர் மீது,  அரசியின் வாகனத்தை இடை மறித்த தற்காக “ அரசிக்கு எதிராக வன்முறை செய்வதை” தடை செய்யும் ஒரு தெளிவற்ற சட்டத்தின்படி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசியின் உயிருக்கு ஆபத்து எனில் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

சில தாய்வான் எதிர்ப்பாளர்கள் ஜனநாயகத்தை மட்டும் ஒரே நோக்கமாக கொண்டிருப்பதை பார்க்கவில்லை ஆனால்  பீகிங்கில் உள்ள ஒரே எதிரியையும்   பார்க்கிறார்கள். தாய்வானில் வாழும் ஒரு மாணவ செயற்பாட்டாளர் இந்த கூட்டணியை கிழக்கு ஆசியப்பகுதி இயக்கத்திற்கான சரியான எடுத்துக்காட்டு எனக் கூறுகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதும் அடுத்தடுத்து ஒன்று வேண்டும். எல்லையை விரிவாக்க முடியவில்லை எனில் கம்போடியாவிலும், லாவோசிலும் அந்நாட்டுத் தலைவர்களை விலைக்கு வாங்கியது போல் தாய்வான் தலைவர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்“ என்று எச்சரிக்கிறார் அவர்.

தாய்வானில், 2014 ல் தோன்றிய சூரியகாந்தி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து (Sunflower Protest Movement)  உருவான ‘புதிய அதிகார கட்சியின் (New Power Party) அயலுறவுத் துறை இயக்குனர் ஜெர்ரி லியூ, தாய்வானில் பலருக்கும் பால் தேநீர் கூட்டணி “உறுதியற்ற, கவர்ச்சி முழக்கமாகவே“ இருந்ததாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் இந்த தீவின்,  ஒப்பீட்டளவில் சமீபத்திய ஜனநாயகப் படுத்துதலுக்கான வரலாறும், நிரந்தரமான சுயாட்சிக்கான சண்டையும் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களை எங்கிருந்தாலும்  அவர்களை இயற்கையான கூட்டாளிகளாக ஆக்கிவிட வேண்டும்.   இதை மனித உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் நாம் இதில் பல பொதுவானவை இருப்பதை காணமுடியும் என நாங்கள் நினைக்கிறோம்.” என்று அவர்  ‘ஜனநாயகத்திற்கான  தாய்வான் கூட்டணி’ ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார். இதுவே கூட்டணியின்  பிறப்பு பற்றிய நடைமுறை.

ஜனநாயக ஆதரவு இளம் செயற்பாட்டாளர்களின் இந்த நவீன கூட்டணியின் தோற்றம் அதன்  தற்செயலாக அதன் சின்னத்திலேயே உருவாகிவிட்டது. தாய்வானில் பிரபலமான ஒருவரும் அவரது தோழியும்  சமூக வலைதளத்தில் படங்களை பகிர்ந்ததிலிருந்து  இது துவங்கியது. அது ஹாங்காங் மற்றும் தைவான் சுதந்திரத்தை ஆதரிப்பதாக யாருக்கும்  தற்செயலாகக் தோன்றியது.

சீன இராணுவத்தின் உயர் விழிப்புணர்வு தேசபற்று பூதம்,  தாய்லாந்து  நாட்டின் பெருமையை சிறுமைப் படுத்தி, அதன் அரசமைப்பின் மீதும் பொருளாதாரத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி எதிர்தாக்குதல் நடத்தியது. ஆனால் அவர்கள் தங்கள் இலக்கைத் தவறாக மதிப்பிட்டு விட்டனர்.  தங்கள் நாட்டின் உருவாக்கத்தினை பற்றிய விமர்சனத்தை வைப்பதில் மிக வெளிப்படையாக இருப்பவர்களான தைவான் ட்விட்டரை பயன்படுத்துவோர், சில மாதங்களுக்குப் பின் அரசுக்கு எதிரான போராட்டமாக  தமது தாக்குதலைத் துவக்கினர்.

இந்தப் பதிவுகளைக் கண்டவர்கள் தங்களை பாதிப்பதாக உணரவில்லை. மாறாக அவைகளை தழுவி ஏற்றுக் கொண்டனர். அவைகளை கிண்டல் செய்தும், அவல நகைச்சுவை செய்தும் திருப்பி விட்டனர்.  இந்த அதிகரித்த நிகழ்நிலை சண்டை ஹாங்காங்கிலும், தைவானிலும் ஏராளமான நண்பர்களை கவர்ந்திழுத்தது.

எண்ணிலடங்கா போன்மிகள் (Memes) இணைய தளங்களில் உள்எதிரொலித்தன. ஆனால் நகைச்சுவையாக உருவான கூட்டணி, உண்மையான வடிவு பெற   ஆரம்பித்தது.  ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட ஒரு போராளி விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்திற்குள்  ஒரு  “தாய்வான் எதிர்ப்பு சின்னத்தை “ பளிச்சென்று காட்டினார்.

பயனுள்ள வகைகளில் தடைகளை  மீறுவது, அரசை எதிர்த்து நிற்பது, வரைகலைகளை பிரதி எடுத்து அனுப்புவது பற்றிய கட்டளைகளை பின்பற்றுவது மற்றும் போராட்டத்தின் போது  பாதுகாப்பாக இருப்பது, தங்கள் எண்ணியல் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்த அறிவுரைகளையும் தங்கள்அனுபவம் மிக்க,  திறமையான  ஹாங்காங் அமைப்பாளர்களிடமிருந்து தைவான் மாணவர்கள் பெற்றனர்.

“ஆசியாவில்  நிகழ்நிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்ப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மற்றும்  எதேச்சாதிகார அரசுகளை எதிர்த்து போராடுவது  ஆகியவற்றில் எண்ணிக்கை பெருக்கம் வலிமையானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்” என இந்த தாய்லாந்து போராட்டங்களை நிகழ்நிலையில் கூர்ந்து கவனித்து வரும் ஆஸ்திரேலிய போர் தந்திர கொள்கை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ட்ரேசி பீட்டீ தெரிவிக்கிறார்.

சீன தாய்பேய் நாடு இந்த கூட்டணி குறித்து எந்த நிலைபாடும் எடுக்கவில்லை என தெரிவித்த பின்னரும் தேசிய நாளான அக்டோபர் 10ம் தேதி துணை அதிபரின் ட்விட்டரிலும் கூட தாய்வானின் ‘பால் தேநீர் கவன ஈர்ப்பு முகப்பு ‘ (MilkTea hashtag) தலைகாட்டியது.

கடந்த ஆறு மாதங்களில், நிகழ்நிலை செயற்பாட்டாளர்கள் ஒரு குழுவுடன் இணைந்து” முலான்”(Mulan) என்ற டிஸ்னியின் நேரடி மறு உருவாக்கப் படத்தை புறக்கணிக்கக் கோரும் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினார். இது, சீனாவில் ஜிங்ஜியாங் நகரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்ட போது அங்கு சீன அதிகாரிகள் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும், ஹாங்காங் காவல்துறைக்கு ஒரு பிரபல நடிகர் சர்ச்சைக்குரிய முறையில் ஆதரவு தெரிவித்ததையும் குறித்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நடைபெற்றது.

இந்த இயக்கம், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மீகாங் ஆற்றின் வளத்தை சீனா சுரண்டுவதிலிருந்து, உய்குர் (Uighur) முஸ்லீம்கள் மீதான மத ஒடுக்குமுறைக்கு  எதிராக அரசுகள் சீனாவுக்கு எதிராக நிற்கக் கோருவது வரை அனைத்திற்கும் பயன்பட்டது.

தம்மசாட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஆசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர், சித்திஃபோன் க்ரௌராட்டிகன் அரசியல் மாற்றத்தை இந்த கூட்டணி எதிர்பார்க்கவில்லை எனினும் இது பீகிங்கின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பாகவும், அது  குறித்த கவலையை முடுக்குவதாகவும் உள்ளது என்கிறார்.

“ சீனா, அண்டை நாடுகளில் தைவான் தோழர்களின், மக்களின்  இதயத்தையும் மனதையும்   வெல்வதிலும் அல்லது அதிகாரத்தை மென்மையாக  செலுத்து வதிலும்  இன்னும் வெற்றி பெற முடியவில்லை” என்கிறார் அவர்.

( The Guardian இதழில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்