கிருஷ்ணஜென்ம பூமி என்று கூறப்படும் இடத்தை ஒட்டியுள்ள மசூதியை அகற்ற கோரி தொடரப்பட்ட மனுவை, மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, மாவட்ட நீதிபதி சாதனா ராணி தாக்கூர் நீதிமன்றம், நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, மதுராவில் உள்ள ஒரு சிவில் நீதிமன்றம், கிருஷ்ணர் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள ஷாஹி இட்கா மசூதியை அகற்ற உத்தரவு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது. நீதிபதி சாய சர்மா தனது செப்டம்பர் 30-ம் தேதி உத்தரவில், கிருஷ்ணருக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு பக்தருக்கும் இது போன்ற வழக்குத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டால், அது நீதித்துறை மற்றும் சமூக அமைப்பைப் பாதிக்கும் என்று கூறியிருந்தார்.
நீதிபதி சாதனா ராணி தாக்கூர், அறங்காவலர்கள் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றால், பக்தர்கள் அணுகுவார்கள் என்று கூறியதாக, மனுதாரர்களின் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் ‘தி இந்துவுக்கு’ தெரிவித்துள்ளார்.
வழிபாட்டு இடம் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ல் இந்த வழக்கு பொருந்தாது என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதை பற்றிய கூடுதல் விவரங்கள் இல்லை.
இந்த வழக்கை லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் ஏழு பேர் கிருஷ்ணர் கோயில் சார்பாகத் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி டிரஸ்ட், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜான்மா ஸ்தன் சேவா சான்ஸ்தான் ஆகியோருடன், யுபி சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் ஷாஹி இட்காவின் அறக்கட்டளை மேலாண்மை குழு ஆகியவை பிரதிவாதிகளாக நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு, 1973 ஜூலை மாதம், சிவில் நீதிபதி, மதுராவில் நிறைவேற்றிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோவில் பரப்பளவில் அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் கோருகிறது.
Following the denial of justice in #babrimasjidcase, Mathura court admitting plea to hand over the existing Masjid in the name of #KrishnaJanmabhoomi has opened the doors of another dark phase in Indian society & politics.
Any hope in judiciary remaining, getting shattered.— E M Abdul Rahiman (@EMAbdulRahiman1) October 16, 2020
“பாபர் மசூதி வழக்கில் நீதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ண ஜன்மபூமி என்ற பெயரில் தற்போதுள்ள மசூதியை ஒப்படைக்க வேண்டும் என்ற மனுவை மதுரா நீதிமன்றம் ஒப்புக் கொண்டது இந்திய சமுதாயத்திலும் அரசியலிலும் மற்றொரு இருண்ட காலத்தின் கதவுகளைத் திறந்துள்ளது. நீதி துரையின் மீது மீதம் உள்ள நம்பிக்கையும் சிதைகிறது,” என்று மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் ரஹிமான் அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.