Aran Sei

இசையின் நடுவே படுகொலை – மரண ஓலத்தில் இசையை ரசித்த நாஜிக்கள்

20 வயதான எலியாஸ்,  1943 டிசம்பரில் ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ வதைமுகாமிற்கு ஒரு கால்நடைகள் ஏற்றி வரும் வண்டியில் கொண்டுவரப்பட்டார். அவர் குடும்ப முகாமின் 6 வது பிரிவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு  ஒரு குழுவாக வயலின், கிளாரினெட், அகார்டியன், தாள இசைக் கருவிகள் ஆகியவற்றை இசைக்கும்  இசைக்கருவி கலைஞர்கள் சிறைக் கைதிகளாக இருந்தனர்.  அந்தக் குழுவில் இளம் ஆண்களும், பெண்களும் இருந்தனர். அவர்கள், சிறைக்கைதிகள் அன்றாட பணிகளுக்கு வெளியே செல்லும்போது மட்டுமின்றி, சிறைக்கைதிகளின் மீது தடியடி நடக்கும் போதும் தங்கள் இசைக்கருவிகளை வாசித்தனர். நாஜிக் கட்சியின் துணை ராணுவப் படைக் காவலர்களான எஸ்எஸ்யின் (சுஸ்தாப்பெல் காவலர்கள்- ஜெர்மானிய இராணுவ படைக் காவலர்கள்- ஆரம்பத்தில் ஊர்க்காவல் படையினராக இருந்தவர்கள்) உத்தரவின் பேரில் முன்கூட்டியே கூட  இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிரட்டல் – வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் பரிசீலனை

போருக்குப் பிந்தைய நேர்காணல் ஒன்றில் இலியாஸ்,  எவ்வாறு எஸ்எஸ் படைகள் அடிக்கடி பின்னிரவு நேரத்தில் குடித்து விட்டுச் சிறைப்பகுதிக்குள் நுழைவார்கள் என்பதை விளக்கினார். முதலில் அவர்கள் குடிக்கும்போது இசைக்குழுவை பாடப் சொல்வார்கள். பிறகு சிறையறையில்(bunks) இருக்கும் இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்வதற்காக இழுத்து வருவார்கள். தங்களை அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொள்ள எலியாஸின் பின்புறமாக அழுத்திக் கொண்டு நிற்பார்கள். எலியாஸ் தனது சக கைதிகளின் திகிலூட்டும் அலறல்களைக் கேட்பார். இந்தக் கொடுங்கோலர்கள் இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ” இசை இசைக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் எலியாஸ்.

இயல்பாகவே இசை பெரும்பாலும் நல்லது என்றே கருதப்படுகிறது. நாடக ஆசிரியர் வில்ஹெல்ம் காங்கிரீட்டின், “இசைக்கு மிருகத்தனமான மார்பகங்களை ஆற்றும் வசீகரம் உள்ளது,” என்பது அடிக்கடி பேசப்படும் ஒரு மேற்கோள். இசை இசைப்பவர்கள் மற்றும் கேட்பவர்கள் இருவரின் மதிப்பையும் உயர்த்துகிறது. அதன் அழகியல் பண்புகள் இயல்பானதையும், கொடூரத்தையும் மீறுவதாக உள்ளது. சித்திரவதை மற்றும் தண்டனையை எளிமையாக்கவும் கூட  இசையைப் பயன்படுத்துவதால், அது குறித்து ஆய்வு செய்வது பயனுடையதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு அனுமதி மறுப்பு

“இனப்படுகொலையில் குடிபோதை: நாஜி ஜெர்மனியில் மது மற்றும் வெகுமக்கள் படுகொலை” என்ற எனது நூலுக்கான ஆய்வின்போது, முகாம்களிலும், யூதர்கள் வாழும் பகுதிகளிலும், கொலைக் களங்களிலும்  இசை எந்தெந்த வழிகளில்  மரணங்களுடன் இணைந்து வந்தது என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அழகிய இசை, கொலை மற்றும் பாலியல் வல்லுறவுடன் இணைந்து வருவது இயல்பு மீறிய மற்றும் குழப்பமான சூழல் ஆகும். ஆனால் அது குற்றவாளிகள் தங்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்வதற்கும், தங்கள் செயலைக் கொண்டாடுவதற்கும் பயன்படுத்துவது இசையின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்துவதுடன், இனப்படுகொலையில் ஈடுபட்டிருந்த கொலையாளிகளின் ஆரவார மனநிலையைப் பற்றிய உள்நோக்கிய பார்வையைத் தருகிறது.

இசையோடும் பாடலோடும் இணைந்து சித்திரவதை மற்றும் கொலை செய்யும் செயல்கள் அடங்கிய, கொலை செய்வதில் ‘மகிழ்ச்சி’ அடையும் கதைகள் போரில் தப்பிப் பிழைத்தவர்களின் நேர்காணல்கள் மற்றும் நினைவுகள் முழுவதும் உள்ளன.

’எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு தொடரும்’: உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையில் தவறானது – வழக்குரைஞர் ராஜசேகரன்

ஆஷ்விட்சைப் போலவே, பெல்சாக் கொலை மையத்தில் தங்கள் பொழுதுபோக்கிற்காக எஸ்எஸ் படையினர் ஒரு சிறைக்கைதிகள் இசைக்குழுவை அமைத்திருந்தனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் குடிக்கும் விருந்தின்போது எஸ்எஸ் படையினர் தங்கள் மகிழ்ச்சிக்காக இசைக்குழுவை இசைக்கக் கட்டாயப்படுத்தினர். ஒரு எஸ்எஸ் படைப்பிரிவு, இசைக்குழுவை ஒரே இன்னிசைக் பாடலை மீண்டும் மீண்டும் பாடச்சொல்லி, மற்ற சிறைக் கைதிகளை அந்தப் பாடலுக்கு ஓய்வின்றி நடனமாட செய்தனர். தப்பிய மற்றொரு யூதர், இசைக்குழுவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்போது அதனுடன் முகாமின் நச்சுவாயு அறையில் கொல்லப்படுபவர்களின் அழுகுரலையும் கேட்டதாக நினைவு கூர்கிறார். இசைக்குழு இல்லாத நேரங்களில் படைப்பிரிவினரே தன்னிச்சையாகப் பாடத் துவங்கி விடுவர்.

1941 ஆகஸ்டு மாதத்தில் ஜெனிவா டொமியானோவா என்ற ரஷ்ய நாட்டு பள்ளி  ஆசிரியை விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கும் ஆளாக்கப்பட்டார். முதல் தாக்குதலுக்குப் பிறகு, தான் கண்ணாடி குடுவைகள் உரசும் சத்தத்தையும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவன் ,” இந்தக் காட்டுப்பூனை நன்றாக வளர்க்கப்பட்டுள்ளது,” என்று கூறியதையும், மற்ற ஜெர்மானிய வீரர்கள் தங்கள் முறையை ஜெனியா மீது பயன்படுத்தியதையும், தன்னை எத்தனை பேர் பயன்படுத்தினார்கள் என்ற எண்ணிக்கையே மறந்து போய் விட்டதாகவும் கூறினார்.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

ஜெனியா. அவர் தரையில் அடிபட்டு இரத்தக் கசிவில் கிடந்தபோது அவர்கள்,” ஒலித்துக் கொண்டிருந்த (ராபர்ட்) ஷூமானின் உணர்ச்சிகரமான பாடலை மெல்ல பாடிக் கொண்டிருந்தனர்,” என்கிறார் அவர்.

ஐன்சாட்ஸ்க்ரூப்பனிலிருந்த பெயர்பெற்ற எஸ்எஸ் கொலைப் படைப் பிரிவின் ஒரு தளபதியாக இருந்த கர்னல். வால்டர் ப்ளும்  கொலையை நடத்தி முடித்த ஒவ்வொரு நாளும் மாலையிலும் ‘கேம்ப் ஃபையரை’ சுற்றி பாடி, ஆட ஆட்களை ஒன்று சேர்ப்பார் என்பது பரவலாக தெரிந்த ஒன்று.

படுகொலைகளின் திருவிழாக்கள்

1943, நவம்பர் 3 ல் மஜ்தானெக்கில் உள்ள ஒரு வகை முகாமில் கைதிகளின் மிகப்பெரிய படுகொலை நிகழ்ந்தது. “அறுவடைத் திருவிழா நடவடிக்கை” என்ற கொண்டாட்ட குறியீட்டுப் பெயர் கொண்ட இந்தத் திட்டத்தின்ப்படி ஜெர்மானியர்கள்  யூத இனத்தைச் சார்ந்த ஏறத்தாழ 18,000 ஆண், பெண் குழந்தைகளைச் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலைகள் நடந்துக் கொண்டிருந்தபோது வியன்னஸ் வால்ட்செஸ் மற்றும் டாங்கோஸ் நடனப் பாடல்களும், இராணுவ அணிவகுப்பு இசையும் முகாமிலிருந்து ஒலி பெருக்கிகளில் ஒலித்தன. போருக்குப் பிந்தைய விசாரணையில் ஒரு காவலர் தனது சக ஊழியர்,” இராணுவ அணிவகுப்பு இசைக்குத் துப்பாக்கியால் சுடுவது மிகவும் நன்றாக இருக்கிறது,” என உற்சாகமாகக் கூவியதைக் கேட்டதாகக் கூறினார். இதன்பிறகு படையினர் ஒரு ” மிகப்பெரிய விருந்திற்காக” தங்கள் தங்குமிடத்திற்கு திரும்பினர். பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் தோய்ந்த  சீருடையுடன், வோத்காவை வீசிக் கொண்டாடினர்.

1941, செப்டம்பரில், உக்ரேனின் கட்னவ் நகரில் ஜெர்மன் காவல்துறையினர் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 400 யூதர்களைக் கொலை செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். போருக்குப் பிறகு கூறிய சாட்சிகளில் ஒரு காவலர், வாத்தியங்கள் இசைக்கத் தங்கள் சவக்குழிக்கு  யூதர்கள் அணிவகுத்துச் சென்றனர் என்று விவரித்தார். “அது மிகப் பெரும் சத்தமாக இருந்தது. ஒரு திருவிழா சத்தம் போல,” என்கிறார் அவர்.

நீட் முதுகலைத் தேர்வுகள்: ‘11600 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே மையங்கள்’ – சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

இது போன்ற பலவற்றை நான் எனது ஆய்வின்போது கண்டேன். வெகுமக்கள் படுகொலைகளைத் திருவிழா அல்லது ஒரு “திருமண விழா சூழ்நிலையைத்” தூண்டுவதாக விவரித்தனர்.

பிற இடங்களில் நடந்த இனப்படுகொலைகளிலும் கூட இத்தகைய கொடூரக் கொலைகளின் நினைவுகளின் ஒரு பகுதியாக வெறுப்பூட்டும் கொண்டாட்டங்கள் நடந்தேறி உள்ளன.

ருவாண்டா படுகொலைக்குப் பின்னர் ஒரு ஹூட்டு இனத்தைச் சேர்ந்த  குற்றவாளி,” அந்த இனப்படுகொலை திருவிழா போல இருந்தது,” என்று கூறினான். கொலை செய்த அன்று தனது பிற கொலை செய்த நண்பர்களுடன் பீருடனும், பார்பெகாயூவுடனும் கொண்டாடியதாகக் கூறினான் அவன். ஒரு  தப்பிப் பிழைத்த டுட்சி இனப் பெண் குடிபோதையில் இருந்த குற்றவாளிகள் தங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாடிக்கொண்டே வேட்டையாடினார்கள். மொத்தமாக பாலியல் வன்புணர்வு செய்தார்கள்,” என்று கூறினார்.

ஒயின், கொலை, பாடல்கள்

மதுவும், இசையும், பாடல்களும் வெகுமக்கள் படுகொலையுடன் ஒன்று கலப்பது நாஜிக்களால்  வன்முறை இயல்பாக்கப்பட்டதுடன், கொண்டாடப்பட்டுள்ளதையும் காட்டுகிறது.

நாஜிக்களின்  ஆட்சியின் கீழ்  இசை மற்றும் பாடல் போலி சமூகம், நட்புறவு மற்றும் பகிரப்பட்ட நோக்கம். படைப்பிரிவு மதுபானக் கூடங்களில், கேம்ப்ஃபையர்களில், கொலைக்களங்களில் இசையைச் சேர்ப்பது அது ஒரு பொழுதுபோக்கு வடிவம் என்பதற்கும் மீறிய ஒன்று. இசை ஒரு பொதுவான நோக்கத்தை முன்னெடுப்பதற்கும், மக்களை ஒன்று சேர்ப்பதற்குமான ஒரு  கருவியுமாகும்.

பாடல்களை ஓதுவது, குடிப்பது, நடனமாடுவது ஆகியவற்றின் மூலம் நாஜிக்களின் செயல்கள் ஒன்று சேர்க்கப்படலாம் மற்றும் இயல்பாக்கப்படலாம். மேலும் அவர்களுடைய மிகப்பெரிய செயல்திட்டமான  வன்முறை எளிதாக கட்டவிழ்த்து விடப்படலாம்.

வலதுசாரி ஊடகங்களின் இயங்கியல் கூறுகள் – பகுதி 6

இறுதியாக, இனப்படுகொலை ஒரு சமூக முயற்சி; இசையும், பாடலும் – அரசியல் தத்துவங்களைப் போல- சமூகத்தின் கலாச்சார கலைப் பொருட்கள். எனவே வெகுமக்கள் படுகொலை ஒரு சமூகத்தின் மையக் கொள்கையாக மாறும்போது ஒரு பரப்பரப்பான பாடல், ஒரு கிளர்ச்சியூட்டும் இராணுவ அணிவகுப்பு அல்லது ஒரு உணர்ச்சிகரமான ஷூமன் பாடல் ஆகியவற்றின் பின்னணியில் இந்த அட்டூழியங்கள் நடத்தப்படுவதில் ஆச்சரியமில்லை.

www.thewire.in இணைய தளத்தில் எட்வர்ட் பி. வெஸ்டர்மான் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்