இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாப்ளாக்களின் வீரச் செயல்களை கருத்தில் கொள்ள தயக்கம் காட்டுவதும் அத்துடன் விமர்சன அறிக்கைகளை வெளியிடுவதும் மேலும் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்தினரைக் கொடியவர்களாகக் காட்டுவதும், இந்தியர்களை சாதி, மத அடிப்படையில் பிரிக்க கடுமையாக உழைத்த காலனித்துவ வாதிகளின் நோக்கத்திற்குச் சேவை செய்வதுமாகும். இப்போது நாம் காணும் தியாகிகள் மீதான இந்த விவாதம், தியாகத்தின் நிலை மற்றும் அவர்களுடைய மத அடையாளங்கள் மீதான அவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றை அரசியலாக்கும் ஒரு முயற்சி அல்ல. ஆனால் அதற்கு மாறாக, வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்ட அரசியலுக்கு பிணைக்கைதியாக மாற்றுவதற்கான முயற்சி ஆகும்.
இருப்பினும், 1921 மாப்ளா எழுச்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2021 ல் துவங்கி இருக்கும் இந்த வேளையில் எழுந்துள்ள இந்த சர்ச்சை, வரலாற்றாளர்கள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தி அவர்களை அந்த இயக்கத்தின் பன்முகத்தன்மையையும், மாப்ளா விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும் ஆய்வு செய்யவும், அந்த தகவல்களை பொது மக்களிடையே கொண்டு செல்லச் செய்யும். செய்ய வேண்டும். 1921 ம் ஆண்டின் எழுச்சியை சில நிகழ்வுகளின் கலவையாக ஆய்வு செய்வதை விட, வளர்ந்து வரும் கல்வியாளர்களும், அறிவுஜீவிகளும் மாப்ளா எழுச்சியை சுதந்திர போராட்டத்தின் விரிந்த திரையில் நிலைநிறுத்துவது, குறிப்பாக 1921 ல் மைய உந்துதலாக இருந்த கிலாஃபத் இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றுடன் இருத்துவது மட்டுமின்றி, பன்முகத்தன்மை கொண்ட துணை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட பல அடுக்கு கதைகளுடன் இருத்த வேண்டும். இத்தகைய பல அடுக்கு, பல இழைகளோடு கூடிய கதைகளை வேறுபட்ட வரலாற்று ரீதியான சிந்தனைக் கொண்ட வேறுபட்ட வரலாற்றுப் பிரிவுகளைச் சேர்ந்த சில காலனித்துவத்திற்குப் பிந்தைய அறிஞர்களான கான்ராட் வுட், ராபர்ட் ஹார்ட்கிரேவ், டி.என. தனாகரே, ரனாஜித் குஹா, கே.என்.பணிக்கர், கங்காதர மேனன் மற்றும் எம்.டி. அன்சாரி போன்றவர்கள் இந்த எழுச்சியை காலனிய எதிர்ப்புப் போராட்டமாகப் பார்ப்பதுடன்,1921 எதிர்ப்புக் கிளர்ச்சியை பரவலான வகுப்புவாத மோதலாக, மிக எளிதாக காட்ட முயல்வதை எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர்.
1921 மாப்ளா எழுச்சி
தென் மலபாரில் விவசாயிகள் ஏழ்மையால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்ததே 1849 முதல் 1921 வரை நடந்த 35 எழுச்சிகளுக்கும் நேரடியான காரணமாகும். மலபாரின் ஆங்கில நிர்வாகிகளிலும் கூட, மலபார் மாவட்ட ஆட்சியராக இருந்த வில்லியம் லோகன் 1913 லும், குடியேற்ற அதிகாரி சி.ஏ. இன்ஸ் 1884 லும் விவசாயிகளின் பிரச்சனைகளால் ஆபத்து வளர்ந்து வருவதாகவும், நிலச் சீர்திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் நிலைமையை மேம்படுத்த எதுவும் செய்யப்படவில்லை. எனவே, 1919 களிலேயே விவசாய தகராறுகளால் மலபாரில் சட்ட ஒழுங்கின்மை தீப்பொறியாக கிளம்பியதில் வியப்பொன்றுமில்லை என்கிறது தி இந்துவில் 1919, பிப்ரவரி 13 ல் வெளியான ஒரு செய்தி அறிக்கை.
1921-22 எழுச்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. சமகால கருத்துக்களாக, குறிப்பாக, சட்டமன்ற விவாதங்கள், இந்திய அலுவலக பதிவேடுகள் மற்றும் தனியார் ஆவணங்கள் போன்ற காலனியத்துவ பதிவேடுகள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள், ஜென்மி அல்லது நில உரிமையாளர்களுக்கு எதிரான குத்தகை விவசாயிகளின் விவசாயப் குறைபாடுகளால்தான் இந்த எதிர்ப்பு தோன்றியது என வெட்கத்துடன் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக இருந்த ரீடிங்கும் கூட, அப்போது நடந்து வந்த கிலாஃபத் பரப்புரை “கிளர்ச்சிக்கான” முன்னோடி காரணமாக இருந்தாலும், விவசாயிகளின் அதிருப்தியே “முன்கூட்டிய காரணி” என கருதியதுடன், குத்தகை சட்டத் திருத்தக் கேள்வி குறித்து பரிசீலனை செய்வதே மலபாரின் எதிர்கால அமைதிக்கான விரும்பத்தக்கத் தீர்வு என எண்ணி, சென்னை மாகாண ஆளுநர் வெலிங்டன்னுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினார். இந்தியா அலுவலகம் பராமரித்து வரும் ஒரு கோப்பில் வெல்லிங்டன்னுக்கு, ரீடிங் எழுதிய கடிதம் உள்ளது. அதில்,” நாம் மலபார் குறித்து கவலைக் கொண்டுள்ளோம். வெறும் ஒழுங்கை மீட்டெடுப்பது மட்டுமே நமது நோக்கம் அல்ல. மாப்ளாக்களை அமைதியான, நமக்கு உண்மையாக உள்ள குடிமக்களாக மாற்ற வேண்டும். மேலும் இந்தத் திசையில் விவசாய சீர்திருத்தங்களே வலிமையான செல்வாக்குச் செலுத்தும்,” என்று ரீடிங் எழுதி உள்ளார்.
ஒருவேளை இந்த எழுச்சி இயல்பில் விவசாயத்தைச் சார்ந்ததாக இல்லாமலிருந்திருந்தால், ஒப்பீட்டளவில் மலபார் பகுதியின் வசதி படைத்த மாப்ளாக்கள் இதிலிருந்து விலகி நிற்கவோ அல்லது அரசு பக்கமோ நின்றிருக்க மாட்டார்கள் என்பதும் ஒரு நேர்மையான வாதம்தான். புதிய பார்வையை வெளிப்படுத்தும் ‘கடவுளுக்கும் அரசுக்கும் எதிரானது’ ‘ என்ற தனது நூலில் கே.என். பணிக்கர்,” மலபாரில் உழவர்கள் கடவுள் மற்றும் அரசு எனும் இரட்டையர்களால் வறுமையின் எல்லையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்,” என்று எழுதுகிறார். விவசாயிகளின் பிரச்சனைகள் இதற்கு அடியில் இருக்கும் காரணியாக இருந்தாலும், பிற காரணங்களும் எழுச்சிக்கு காரணமாக இருந்தன: ஆழமாக உணரப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான அச்சுறுத்தல், ஆத்திரமூட்டும் செய்திதித்தாள் அறிக்கைகள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் ஆத்திரமூட்டல்கள் ஆகிய அனைத்தும் எழுச்சிக்குக் காரணிகளாக இருந்தன. வரலாற்றாளர் கான்ராடு வுட்டின் “1921-22 மாப்ளாஸ் கிளர்ச்சியும் அதன் தோற்றமும்” என்ற முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை, கிலாஃபத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் ஊக்கிகளாக செயல்பட்டன என்கிறது.
முந்தைய மாப்ளா எழுச்சிகளின் போது செய்ததைப் போலவே, காலனித்துவ கட்டுரைகளும், காலனிக்குப் பிந்தைய மேற்கத்திய அறிஞர்களும், 1921-22 கிளர்ச்சியைத் தூய்மையான மத வெறியின் வன்முறை வெளிப்பாடாக முன்னிறுத்த முயற்சித்தன; காங்கிரஸ் – கிலாஃபத் கிளர்ச்சி ‘ ஆங்கில அரசைக் கவிழ்க்க’ அதிலும் குறிப்பாக இந்து எதிர்ப்பு கிளர்ச்சி, என 1921, ஆகஸ்ட் 22 மற்றும் 30, மெட்ராஸ் மெயில் அறிக்கைகளிலும், மெட்ராஸ் ஆளுநர் வெல்லிங்டனுக்கும் இந்திய, பர்மிய அரசு செயலாளராக இருந்த எட்வின் மான்டேகுவிற்கும் இடையிலான குறிப்பானைகளிலும் கூறப்பட்டிருந்தது. விவசாயிகளின் அதிருப்தி முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டு அதனை ஒரு ‘கட்டுக்கதை’ என 1923 அக்டோபர் மாத மாஸ்லெம் வேர்ல்டு வெளியீட்டில் வந்த ‘மாப்ளா எழுச்சி 1921′ என்ற ஜான் ஜே. பன்னிங்காவின் கட்டுரை கூறியது. இந்த விடயம் பற்றிய அண்மைக்கால கீழ்நிலை அறிஞர்களின் ஆழமான குற்றச்சாட்டு, அதிருப்தி வெளியேறுவதற்கு மதம் மட்டுமே ஒரே வழி எனக் காட்டுவதற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். .
தனது “மாப்ளா கிளர்ச்சி 1921- விவசாயிகளின் கலகம்’ என்பதில் ராபர்ட் ஹார்ட்கிரேவ்,”இந்த எழுச்சி மாப்ளாக்களின் மத உணர்வுகளை உயர்த்திய கிலாஃபத்- ஒத்துழையாமை இயக்கப் பரப்புரையின் எல்லைக்குள் நடந்த வெளிப்படையான அரசியல் செயல்பாடு. அது அவர்களை இயல்பாகவே இந்த இயக்கத்தில் ஈர்த்தது. 1920 ஏப்ரலில் மஞ்சேரியில் நடந்த மாநாட்டிற்குப் பிறகு மாப்ளாக்கள் கிலாஃபத் இயக்கத்தால் கவரப்பட ஆரம்பித்தனர்,” எனக் குறிப்பிடுகிறார். ஜூன் மாதவாக்கில் கிலாஃபத் இயக்கம் மலபாரில் மக்களை செயல்பாட்டுக்கு கட்டளையிட்டது. அடுத்த ஆண்டு முஸ்லீம் மற்றும் இந்து தலைவர்களைக் கொண்ட ஏறத்தாழ 200 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் பின் செப்டம்பர் மாதத்தில் சவுக்கத் அலி மகாத்மா காந்தியுடன் மலபாருக்கு வந்து பரப்புரை பயணத்தை நடத்தினார்.
காந்தி கிலாஃபத் இயக்கத்தை ‘நூறாண்டுகளாக இல்லாத வகையில் இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பாக’ கருதினார். 1920, செப்டம்பர் 24 ல் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து நடத்திய மாநாட்டில் கிலாஃபத் இயக்கம் பற்றிய கேள்வி விவாதிக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திற்கு காந்தி தலைமைத் தாங்கினார். அவர் ஒத்துழையாமை இயக்கம் கிலாஃபத் இயக்கத்தின் கோரிக்கைகள், விவசாயிகளின் அதிருப்தி மற்றும் மலபாரின் பொருளாதார நிலை ஆகியவற்றை தீர்க்க வழி கூற வேண்டும் என வாதிட்டார். இதன் பொருள் இந்து உயர்சாதி நில உரிமையாளர்களுக்கு உள்ள தன்னிச்சையான விலக்குகள் மற்றும் அடக்குமுறை அரசு நிலவரியை உயர்த்தி வருவது ஆகியவற்றுடன் மத ரீதியான குறைகளும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன,” என்கிறார் பான்னிங்கா.
காங்கிரஸ்- கிலாஃபத் தலைவர்கள் இரண்டு பொதுக் கூட்டங்களில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவது அவர்களின் ஆன்மீக மற்றும் தேசிய கடமை என அறிவித்தது, மாப்ளாக்களை இந்த இயக்கத்தில் பங்கேற்க ஊக்குவித்தது என 1925 ல் வெளியிடப்பட்ட ‘1921, மலபார் எதிர் கிளர்ச்சியின் ஒரு வரலாறு’ என்ற தனது நூலில் ஆர்.எச். ஹிட்ச்காக் எழுதியுள்ளார். கிலாபஃத் இயக்கத்தின் முக்கியத் தலைவரும், பின்னாளில் இந்த எழுச்சியில் பங்கேற்றதற்காக விசாரணைக்குள்ளானவருமான எம்.பி. நாராயண மேனன், 1922, ஜூலை 28 ல் வெளியான மெட்ராஸ் மெயில் பத்திரிகைக்கு ஒரு அறிக்கைக் கொடுத்துள்ளார். அதில், “ஆங்கில அரசாங்கம் இறுதி கட்டத்தில் உள்ளது. அதனிடம் படைத் துருப்புகள் இல்லை. மாப்ளாக்கள் ஒற்றுமையாக இருந்தால் மிக எளிதாக இந்த அரசை தூக்கி எறிந்து விட்டு ஒரு கிலாஃபத் ஆட்சியை நிறுவ முடியும். கிலாஃபத்திற்காக அனைவரும் தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக வேண்டும்,” என அவர் அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.
1920 ம் ஆண்டின் இறுதியில் கிலாஃபத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் மலபார் முழுவதும் விரிவாகப் பரவி முஸ்லீம்களை பெரும் அளவில் கவர்ந்தது. 1923 ல் வெளியிடப்பட்ட சி. கோபாலன் நாயரின் ‘1921, மாப்ளா கலவரம்’ என்ற நூல், ‘கோடையின் நடுவில் கராச்சியில் கூடிய கிலாஃபத் இயக்க மாநாட்டில், இந்திய குடியரசை நிறுவுவது என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது, மாப்ளாக்களிடையே ஆங்கில அரசின் வீழ்ச்சி கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக நம்பச் செய்தது.’ என்று கூறியது. 1921, ஆகஸ்ட் 21 ல் “மாப்ளா எழுச்சி எனும் எரியும் நெருப்பைத் தூண்டிவிடும் தீப்பொறிகளாக
மாப்ளா கிலாஃபத் இயக்கத்தினர் விளங்கினர்,” என்றார் ஹிட்ச்காக். “நீண்ட நாள் வன்மத்துடனிருந்த காலனிய அரசு அதிகாரிகள் அலி முஸ்லியார்(1861-1922) உள்பட சில கிலாஃபத் தலைவர்களை திரூரங்காடியில் கைது செய்ய முயன்றது. பல மாப்ளா குடும்பத்தினரை கொடுமைப் படுத்தியதுடன் அவமானப்படுத்தியது. திரூரங்ஙாடியில் காந்தி குல்லா அணிந்தவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது. கிலாஃபத் கொடியை அவமானப்படுத்தியது. கிலாஃபத் இயக்கத் தொண்டர்களை விசாரணைக்கு ஆட்படுத்தியது,” என 1922 ல் வெளியான தனது ” மாப்ளா எழுச்சி 1921-22 என்ற நூலில் ஜி.ஆர்.எஃப். டோட்டன்ஹாம் எழுதி உள்ளார். நீண்டகால, கடுமையான காவல்துறையினரின் ஆத்திரமூட்டும் செயல்களுக்குப் பிறகு திரூரங்காடி கைதுகள் நடைபெற்றன. கிலாஃபத் இயக்கத்தின் முழு ஆதரவால் எர்நாடு, வள்ளுவநாடு மற்றும் பொன்னானி ஆகிய தாலுக்காக்களில் மாப்ளாக்களின் உணர்வுகள் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், ஆங்காங்கே வன்முறைகளும் நடக்கத் தொடங்கின. 1989 ல் தான் எழுதிய மலபார் கிளர்ச்சி(1921-22) என்ற நூலில் கங்காதர மேனன், “குத்தகைதார் மற்றும் கிலாஃபத் இயக்கங்களுக்கு இடையிலான ஒருவர்மீது இன்னொருவரின் சார்புத்தன்மைப் பற்றி குறிப்பிடும் போது, “எர்நாடு மற்றும் வள்ளுவ நாட்டிலிருந்த பெரும்பாலான குத்தகைதாரர்கள் மாப்ளாக்களாக இருந்ததால் குத்தகைதாரர்களின் போராட்டம் கிலாஃபத் உள்ளுணர்வால் கிளர்ச்சியூட்டபட்டது,” என்கிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.