Aran Sei

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

ற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. அதை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு உரு மாற்ற முடியும். மனித மனதின் அளப்பரிய சக்தியும் அதே போல அழுத்தத்தின் காரணியாக உரு மாறும், பரிணாமம் அடையும்.

ஒரு மனிதனுக்கு வாழ்வில் பல பிரச்சனைகள், சவால்கள், சம்பவங்கள் நடப்பது இயல்பே. அதனை அவன் அறிவை கொண்டும், ஆற்றல் கொண்டும் அவன் சமாளித்து கடந்து செல்வதுண்டு. ஆனால் அனைத்து மனிதர்களின் சூழ்நிலைகளும் அதற்கு ஏற்பானது அல்ல; முக்கியமாக மனத்திடம் அனைவருக்கும் ஒன்றாக அமைவதில்லை. எனவே கையறு நிலையில் மனதிற்கு ஏற்படும் உபாதைகளளுள் ஒன்று இந்த மனபிறழ் நோய்.

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

வெளிமனது ஒரு பொறுப்புள்ள மனிதன், சமுதாய கோட்பாடுகளுக்கு ஒன்றி நடக்கும் ஒரு பொறுப்பான பிள்ளை. ஆனால்,உடம்பில் ஒரு உறுப்பாகவோ, மூளையில் ஒரு தனித்த இடம் பெறாத நம் ’ஆழ் மனது’, பல்லாயிர கணக்கான நியுரங்களின் சங்கமம், ஒரு அடம் செய்யும் குழந்தை. குழந்தை அடம் பிடிக்கும் சண்டையிடும்; ஆனால் ஆழ் மனதிற்கு சண்டையிட வழியும் இல்லை, இடமும் இல்லை.

உடலில் உபாதை ஏற்பட்டால், உடல்யியங்கியலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, அது வலியாகவோ, புண் ஆகவோ, வேதனையாகவோ வெளிப்படும். ஆழ் மனதின் வேதனை வெளி வருவதற்கு இடம் இல்லாததால் அதற்குப் பிறழ் ஏற்படும்.  அதுவே மன பிறழ்  என்னும் மன உபாதை ஆகும்.

ஒரு இள வயது பெண்ணை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம், ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்தச் சமுதாயத்தில், அவளின் சொந்த கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கவோ, இல்லை பரிசீலனை செய்யவோ ஒரு நபரோ உறவினரோ இருக்க மாட்டார். அந்தத் தருணத்தில், ஆழ் மனம், விம்மி எதிர்மறை கருத்துகளால் தடுமாறும். வெளியே கூறவும் இயலாது, உள்ளே வைத்திருக்கவும் முடியாது. அந்த ஆழ் மன தடுமாற்றம் பரிணாமம் அடையும், மனம் பிறழும். மனம் பிறன்டு வேறு உடல் நோயாக அது வெளிப்படும். அந்த மனிதருக்கு உடல் இயங்கியளில் எந்த வித  அசதரணமும் இல்லாது ஆனால் வலியகவோ, வேதனயாகவோ, செயல் இழப்போ ஏற்படும்.

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

இந்த மனபிறழ் ஞாபக மறதியாகவோ, சில சமயம் கண் தெரியாதது போலவும், காது கேட்காது போலவும், வயிற்று வலி, உடல் வலி என எந்தப் பரிணாமம் வேண்டுமானாலும் அது அடையும்.

நோய் பட்டவரின் கவனிப்பாளர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். இது ஒரு நோய், மன நோய் என்றாலும் நோய்வாய் பட்டவரின் சக்திக்கு அப்பால் ஏற்பட்டது ஆகும். அவர் அறியாமல் நடக்கும் ஒரு ஆழ் மன பரிணாமம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் – மத்திய ஆயுஷ் அமைச்சர் கருத்து

இந்த மனபிறழ் ஒரு எதிர் முரண், அந்த நோய் வந்தபின், நோய் வாய்ப்பட்ட நபருக்கு அதிக கவனம், அன்பு, அக்கறை கிடைப்பதாக ஆழ் மனம் கருதிக் கொண்டு, அன்பிற்கு இதே வழி என நோய் வீரியம் அதிகம் ஆகும்.

உடலியியங்கியலில் எந்தக் குறையும் இல்லை என்றாலும், உடல் இயங்குவதற்கு மனம் சம நிலையில் இருத்தல் மிக அவசியம் என்பதனை இந்த நோய் போல வேர எந்த ஒரு விஷயமும் விளக்க இயலாது.

நன்கு இயங்கி கொண்டிருக்கும் ஒருவர் தீடீரெனக் காது கேளவில்லை, கண் தெரியவில்லை என்றால் உங்கள் மருத்துவரை உடனடி அணுகுங்கள்.

– மருத்துவர் முகமது நவீத்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்