Aran Sei

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

1818 ஜனவரி 1 அன்று மராட்டியத்தின் பீமா நதிக்கரையில் சித்பவனப் பார்ப்பனர்களாகிய பேஷ்வாக்களின் படையைக் கிழக்கிந்திய கம்பனியின் படையிலிருந்த மகர் சிப்பாய்கள் வீழ்த்தி வெற்றி கொண்டபோது எழுப்பிய முழக்கம் “ஜெய் பீம்”.

( பீமா நதிக்கரையில் உள்ள கோரேகான் என்ற இடத்தில் இந்த வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டத்தினை தடுக்க நடந்த வன்முறை – அதன் தொடர்ச்சியில் புனையப்பட்ட பொய்வழக்குகள், கைதுகள்- பிகே 16 -பீமா கோரேகான் 16- எனக் குறிப்பிடப்படும் 16 பேரில் ஒருவர் தான் ஸ்டேன் சாமி)

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

1936 ஆகஸ்ட் 15 அன்று அண்ணல் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்குகிறார். அக்கட்சியின் தலைமைச்செயலாளரும், அக்கட்சி சார்பில் காம்தி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவருமான எல்.என். பாபு ஹர்தாஸ், 16.02.1937 அம்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பீம்ராவ் அம்பேத்கருக்கே வெற்றி என்ற பொருளில் “ஜெய் பீம்” என்ற முழக்கத்தை மறுபுழக்கத்திற்கு கொண்டுவருகிறார். அதன்பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்துகொள்ளும்போது பரஸ்பரம் கூறிக்கொள்ளும் வணக்கச்சொல்லாகிய ஜெய் பீம், பினாளில் தலித்துகளை ஒன்றுபடுத்துகிற- ஆவேசமூட்டுகிற ஆற்றல்படுத்துகிற முழக்கமாகவும் வீறுகொண்டது.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

ஜெய்பீம் என்ற முழக்கம் உருவான இந்தப் பின்புலம் அறியாமலே அது ஜெய் ஸ்ரீராம் போன்றதுதான் என்று சில மூடர்கள் இகழ்வதுண்டு. ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தினை மறுதலித்து உருவாக்கப்பட்டதே ஜெய்பீம் முழக்கம் என்று எலினார் செலட் போன்ற ஆய்வாளர்களும் கூட தவறாக கூறியதுண்டு.

பி.டி.ராம்டெக் மராத்தியில் வெளியிட்டுள்ள ‘Jai Bhim’ che janak — Baboo Hardas L. N.” என்ற ஆய்வுத்தாள் “ஜெய் பீம்” என்ற முழக்கம், ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை விடவும் காலத்தால் முந்தியது என்பதையும், அது உருவாகி வந்ததன் உண்மை வரலாற்றையும் உரைக்கிறது.

வரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்

இந்த முழக்கத்தின் வரலாற்றுக்கும் இருப்புக்கும் நியாயம் செய்யும் விதமாக சூர்யாவின் அடுத்தப்படமான “ஜெய் பீம்” இருக்குமா? மீதியை வெள்ளித்திரையில் காண்போம்.

– எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்