Aran Sei

பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

பிரதமரை போற்றுபவர்கள் கோடிக்கணக்கில் இருக்க, தூற்றுபவர்கள் சில லட்சங்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் போற்றுபவர்களும், தூற்றுபவர்களும் ஒன்றை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்: சில விதிவிலக்குகளுடன் சுல்பிகர் அலி பூட்டோவை எடுத்துக் கொண்டால், 1947 லிருந்து தெற்காசியாவில் உருவான தலைவர்களிலேயே, நரேந்திர மோடிதான் மிகச் சிறந்த வாய்ச் சொல் வீரர் என்பதுதான் அது.

ஜவஹர்லால் நேரு தனது காலத்தில் ஒரு சிறந்த மக்கள் தொடர்பாளராக இருந்தார். மனோவசியம் செய்பவர் என்பதைவிட இணக்கம் செய்பவர் எனலாம். பிற்காலத்தில் இந்திரா காந்தி ஒரு மேடைப் பேச்சாளர் என்கிற வகையில் தனது திறனை வளர்த்துக் கொண்டார். ஆனால் அவரால் மக்களை கவரமுடியவில்லை. அடல் பிகாரி வாஜ்பாய் திறமையான சொற்பொழிவாளர். ஆனால் அவரால் அவரது தளத்தை மட்டுமே உற்சாகப்படுத்த முடிந்தது. அதேசமயம் நரேந்திர மோடியிடம் தனது கூடாரத்தில் இல்லாதவர்களை கவர்ந்திழுக்க மட்டுமல்ல தனது பக்தர்களை பேரின்ப மழையில் நனையச் செய்யும் நிரூபிக்கத்தக்க பரிசும் உள்ளது. உண்மையில், 2014 ல், இந்தியாவில், எட்டமுடியாத உயரத்தைக் கைப்பற்றி மழையிலும், வெயிலிலும் வேரூன்றி நிலைத்திருக்கிறார் என்பதை எளிதில் ஒப்புக்கொள்ளலாம். ஆரவாரப் பேச்சு, போர்கள ஆதிக்கத்தால் மோடி தேர்ந்தெடுத்து துப்பிய எந்த செய்தியையும் எந்த எதிர்க்கட்சியாலும் சீர்குலைக்க முடியவில்லை. மாறாக, தேசிய கற்பனை தொடர்பான இந்த போட்டியில் எதிர்கட்சிகள் முகாம் எந்தவித  எதிர்ப்பையும் காட்டமுடியாமல் பரிதாபமாகத் தோல்வியுற்றுவிட்டனர் என நாம் புலம்பலாம்.

எடுத்துக்காட்டாக, ராகுல்காந்தி ஒரு மேடை பேச்சாளராக அவ்வப்போது அரசியல் அரங்கிற்கு வரும்போதும் முகமிழந்து போவதை நாம் அறிவோம். அவரது சகோதரி பிரியங்கா, தீவிர அரசியல் ஆளுமை இன்றி, ட்விட்டர் – செயல்பாட்டாளராக மாறி விட்டார்; வேறு எந்த காங்கிரஸ் தலைவருக்கும் மேடையைப் பயன்படுத்த அனுமதி இல்லை. மம்தா ‘தீதி’ (அக்கா), மேற்கு வங்காளத்திற்குள் முடக்கப்பட்டுள்ளார். பிரதமரின் இந்த தொற்று நோய் போல் பரவக்கூடிய தாளத்தை நிலைதடுமாறச் செய்வதற்கு, இந்தி நிலத்திலிருந்து ஒருவரும் இல்லை. இந்த  ஆரவாரப் பேச்சின் ஆதிக்கத்தால்தான் இது இயற்கைக்கு மிகவும் மாறானதாக – மற்றும் வியப்பூட்டுவதாக – இருப்பதால்தான் இதனை எடுத்துக் கொண்டு பிரதமரால், பொது மேடையில் விவசாயிகள் எதிர்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படு கிறார்கள் என்று புகார் எழுப்ப முடிகிறது. இது ஆளும் குழுவிற்கு கணிசமான அதிருப்திக்குரியதாக இருக்க வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை (27/12/20) பிரதமர் மீண்டும் ஒரு ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றியதை விவசாயிகள் தங்கள் தட்டுக்களைத் தட்டி கேலி செய்தது மோடியின் வாய்வீச்சு அதன் வீரியத்தை இழந்து விட்டதோ எனத் தீவிரமாக சிந்திக்க வைத்திருக்க வேண்டும். விற்பனையில் (போட்டியில்) இருக்கும்  மூன்று விவசாயப் சட்டங்களைப் பாதுகாப்பதற்காக  பிரதமர் மீண்டும் மீண்டும் செய்யும் விற்பனை சுருதி (தந்திரம்) விவசாயிகளை அசைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக பொது மக்கள் தங்கள் கருத்துப் போரில், மோடிக்கு எதிராக தங்களைத் தாங்களே வைத்துள்ளனர் என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கட்சியின் தேர்தல் அறிக்கையில் “விவசாய சீர்திருத்தங்கள்” என அழகாக அச்சிடப்பட்டிருப்பதாலேயே, இந்த விவசாய சட்டங்களை பாஜக மக்கள் மீது சுமத்த ஆணையைப் பெற்றுள்ளது என்று, மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறுவது முற்றிலும் நகைப்பிற்குரியது. 2019 ஆம் ஆண்டு தேர்தல், முழுக்க முழுக்க பாலக்கோட், பாகிஸ்தான், தேச வெறி மற்றும் முஸ்லீம் விரோதப் போக்கு என்பதாகவே இருந்தது.

எந்த ஒரு நிலையிலும், ஒரு தேர்தல் வெற்றி, வெற்றி பெற்றவருக்கு,  மாறுபட்ட கருத்துடையவர்கள் மீதும், விமர்சகர்கள் மீதும் சவாரி செய்வதற்கான உரிமத்தை வழங்குவதில்லை; அது நியாயமான, நேர்மையான, திறந்த, பொறுப்புணர்வு மற்றும் பதிலளிக்க வேண்டியவை என்கிற கடமையிலிருந்து “ஆட்சியாளரை” விடுவிப்பதில்லை.

பாராளுமன்றத்தின் ஒவ்வொரு நடைமுறையையும், நெறிமுறையையும் மீறி, ஞாயிற்றுக்கிழமை இந்த மசோதாக்களை நிறைவேற்றியதற்கான காரணம் மற்றும் பகுத்தறிவை, எந்த ஒரு மத்திய அமைச்சருமோ, எந்த ஒரு அரசின் செல்லப் பிராணிகளாக/பிள்ளைகளாக வளர்க்கப்பட்டுள்ள மற்ற பொருளாதார வல்லுநர்களோ, அல்லது வாடகைக்கு வாங்கிய வாய்களோ இதுநாள் வரை விளக்கவே இல்லை. அடல் பிகாரி வாஜ்பாய் இன்று  இருந்திருந்தால் “டால் மே குச் காலா ஹை” என்று பொருளோடு கூறியிருப்பார்.

தன் நேரத்தை சோதித்த “கேவலமான” தந்திரங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்பதே, மோடியின் நிறுவனத்திற்கு தற்போது மிகுந்த கவலைக்குக் காரணமாக உள்ளது. விவசாயிகளை பிரிவினைவாதிகள், வகுப்புவாதிகள் என்று சாயம் பூசுவதற்கு எடுத்த எல்லா முயற்சிகளும் கேலிக்கூத்திற்கும், ஏளனப்பேச்சுக்களுக்குமே வழிவகுத்தன. மாபெரும் மோடியின் வாய்வீச்சு ரத யாத்திரையின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு, வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாதது. ஒரு மக்களாட்சியில், வாய்வீச்சுகள் உண்மையில் கையளவு சிறுபான்மையினருக்கு மேல் எவரையும் இணக்கமடையச் செய்யும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஆனால் வாய்வீச்சுக்கள் நீடித்திருக்கின்றன. ஏனெனில் அவர்கள் தங்களுக்குத் தாங்களே, நியாயமான தன்னம்பிக்கையை கவசமாக அணிந்திருக்கின்றனர். விரைவில் அவர்களே தங்கள் வாய்வீச்சு ஆர்வத்திற்கும், மருட்சிக்கும் அரசின் வலுக்கட்டாய அதிகாரங்களையும்  தலைமையேற்று வழிநடத்த வேண்டியவர்களாக, தங்களைத் தாங்களே கண்டு கொள்கிறார்கள்.

வாய்வீச்சு, முதலில் தெருக்களில் தனக்கான ஆதரவை உருவாக்குகிறது; எதிர்ப்பவர்கள் அல்லது உடன்படாதவர்கள் ஆட்சியின் குண்டர்கள் மற்றும் / அல்லது சீருடை அணிந்த அணிகளால் கொடூரமாகக் கையாளப்படுகிறார்கள்; இரண்டாவதாக, வாய்வீச்சின் எந்தவொரு எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்க நீதித்துறைப் பயன்படுத்தப்படுகிறது; மூன்றாவதாக, கேள்விக்கிடமின்றி சட்டத்துடன் இயங்குவதற்கான உரிமமாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வெளிப்படுகிறது. பின்னர், எதிரிகளை கொடுமையானவர்களாகக் காட்டுவதற்கும், எதிர்ப்புகளை சட்டவிரோதமானவையாகக் காட்டவும் அரசின் பரப்புரை வளங்கள் பயன்படுத்துகின்றனர்.

எல்லா வாய்வீச்சாளர்களையும் போல், இப்போது மோடி நாற்சந்திக்கு வந்துள்ளார். மேலும் அவரது அரசாட்சி சுயமாக ஊனப்படுத்திக் கொண்ட ஊனமுற்றோரை வேலைக்கு வைத்துள்ளது‌‌. அது சுயமாக உருவாக்கிக் கொண்ட “முடிவெடுக்கும் தன்மை” தோற்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது, எப்போதும் பிளவுபட்டுள்ள, நிரந்தர சந்தேகத்திற்கிடமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிரான தேர்தல் வித்தை ஆகும். ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகும் இந்த முடிவெடுக்கும்தன்மை மீதுள்ள மோகத்தின் மீதான பயணம் எளிய, பொதுவான அரசியல் அறிவு கூட ஏற்காத நல்லாட்சியின் திட்டவட்டமான எதிரியாக மாறிவிட்டது. இப்போது மோடியின் படை, அரசை ஒரு அங்குலம் கூட நகர்த்தவில்லை. மோடியின் வாய்வீச்சில் மயங்கியவர்கள் இது ஒரு வலுவான அரசாங்கம் என்றும், அது எந்த முடிவையும் திரும்பப் பெறாது என்றும் தங்கள் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த அழகிய “ஆர்வலர்களைத்” தவிர அதிகாரத்துவ ஆசை, கார்பரேட் பேராசை என்கிற எண்ணெய் தடவிய தொழில்நுட்ப மேலடுக்கு, மோடியின் எதேச்சாதிகார செயல்திட்டம் என்ற தொடர் வண்டியுடன் தன் பெட்டியை முட்ட வைத்துள்ளது‌. இந்த உயரடுக்கு மக்களாட்சி விரோத தூண்டுதல்களை கொண்டுள்ளதுடன், அதை வெளிக்காட்ட அஞ்சுவதும் இல்லை. இந்த அதீதமாக விரும்பப்படும் “கூட்டத்தின் அறிவு”, விரும்பத்தக்க புளித்துப் போன சொல்லாக இனியும் இல்லை.

பொது மக்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய முடிவுகளை எடுப்பதற்கான உரிமத்தை தனக்குத்தானே ஆவணப்படுத்திக் கொள்வது போல, “தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீர்கள்”, தயவு செய்து இதை வைத்து அரசியல் விளையாட்டை ஆடாதீர்கள்” என்பவை இப்போது அதன் புதிய மந்திரம் ஆகிவிட்டது. இதற்காக, “வளர்ச்சி” என்ற பெயரில் வாய்வீச்சு சூறாவளியைத் தூண்டிவிடுவதில், தலைவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த புதிய மேலடுக்கு, மோடியின் கற்பனைக்குள் மகிழ்ச்சியாக நுழைந்துள்ளது. அவர் மட்டுமே ‘சரியான’ முடிவு எடுப்பதற்கு சிறப்பாக பரிசளிக்கப்பட்டவர் என்று உறுதியாக பயிரிட்டு வளர்த்துள்ள தற்பெருமையை கிள்ளி விட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்ப மேலடுக்கினருக்கிடையே சிக்கி, கார்பரேட் அதிபர்கள் மற்றும் ஊடகத்தில் உள்ள அவர்களின் புகழ்பாடிகளால் உற்சாகப்படுத்தப்பட்டு, ஆளும் அரசியல் நிறுவனங்களின் தவறான அல்லது முட்டாள்தனமான உந்துதலால், ‘வலுவான’ தலைவரான மோடி, மக்களாட்சி சலிப்புத் தருவதாக, சிக்கலான அரவைக்கல் எனக்  கண்டுபிடித்த போது, இந்த நாற்சந்தியில் வந்து நின்று கொண்டிருக்கிறார்.

வடிவமைப்பில் மக்களாட்சி, உரையாடல், கலந்துரையாடல், சமரசம் ஆகியவை கொண்டது. தற்புகழ்ச்சியில் முற்றிலும் மூழ்கிக் கிடக்கும் ஒரு அரசியல் ஆளுமைக்கு இது வெறுப்பைத் தருவதாகும். இப்போதெல்லாம் அவரிடம் “தில்லியில் சிலர்” மக்களாட்சிப் பற்றி சொற்பொழிவு நடத்தினால் அவருடைய பேச்சுத் தொனியில், மனக்கசப்படைந்து ஒரு எல்லைக்கு வந்து விட்டதாக தெரிகிறது. ஒருவேளை விவசாயிகள் போராட்டம் அவரை எல்லையைத் தாண்டி தள்ளி விடலாம்.

(www.thewire.in இணையதளத்தில், ஹரிஷ் காரே எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்