Aran Sei

கோவாக்சினும், கோவிஷீல்டும் ஒரே மாதிரியான சிகிச்சையை அளிக்கின்றனவா?

நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே‌. பால், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (DGCI) டி.ஜி.சோமானி, வெவ்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் அங்கீகரித்துள்ள கோவிட்19 க்கான இரண்டு  தடுப்பூசிகளையும் உண்மையில் “சமமாக” கருத வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பால் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரிசையில் காத்திருப்பவர்களுக்கு, எந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது என்று  முடிவெடுக்கும் வாய்ப்பு இருக்காது என்று கூறியதாக ராய்டர் செய்தி நிறுவன அறிக்கைத் தெரிவிக்கிறது.

சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டை, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தொடர்புபடுத்தும்/இணைக்கும் (bridging) சோதனைகளின்  ஆரம்ப செயல் திறன் தரவுகளின் அடிப்படையில், டிஜிசிஐ அங்கீகரித்திருந்தது. அந்த சமயத்தில், கோவாக்சினைத் தயாரிக்கும் பாரத் பயோடெக், இந்த தரவுகளைத் தரவில்லை. ஏனெனில் அப்போது மூன்றாம் கட்ட சோதனை முழுவீச்சில் துவங்கவில்லை. மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லாத  நிலையில், தனிப்பட்ட அறிவியலாளர்கள், டிஜிசிஐ குழப்பத்தில், தரவுகள் இல்லாததையும் எதிர்த்து கோவாக்சினின் பெயரை உச்சரித்திருக்கலாம் என எண்ணுகின்றனர்.

இந்த பின்னணியில் இந்தியாவின் தடுப்பூசி போடும் திடடம் குறித்த பால் அவர்களின் அறிக்கை, மேலும் ஒரு குழப்பத்தை கொண்டிருக்கிறது. திட்டத்தின் துவக்கத்தில், கோவிஷீல்ட் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றும் கோவாக்சின் “மருந்து சோதனை பயன்முறையில்” “கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு” ” ஏராளமான  முன்னெச்சரிக்கை”  என்ற நிலையில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

“மருத்துவ பரிசோதனை பயன்முறை” என்பதன் பொருள், அப்போதும் இப்போதும் தெளிவற்று உள்ளது. ஏனெனில் அந்த பெயரின் சட்டரீதியான சொல் அல்லது கருத்து எதுவும் இல்லை. எனினும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) மருத்துவர் சமிரான் பாண்டா இந்த வாரத் துவக்கத்தில், “பயன்முறை”  என்பது உண்மையில் ஒரு வகையான மருத்துவ சோதனை (single-arm clinical trial) என்றும், அது மருந்து போலியைக் கொண்டிருக்கும், அதன் முடிவுகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட  இதழ்களில் கிடைக்காது, ஆனால் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றாகவே இருக்கும் என்று கூறினார்.

“கோவாக்சின் பெறும் ஒவ்வொருவருக்கும், அதன் சாதக பாதங்களைப் பற்றி முழுமையாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தாமாக முன்வந்து இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவராக இருக்க வேண்டும். தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் அதை ரத்து செய்து கொள்ளவும் வாய்ப்பு தரப்பட வேண்டும்,” என்கிறார் பாண்டா.

ஆனால் பால் அவர்களின் சமீபத்திய கருத்து, இந்த பகுதியில் குழப்பமடையச் செய்கிறது. மருத்துவர் பாண்டாவுடன் உரையாடலை பின் தொடர்ந்த போது, அவர் கருத்துக்களும்  பாலின் கருத்துக்களும் முரண்பாடானவை அல்ல என்று கூறினார். பாலின் கருத்து தடுப்பூசி போடும் திட்டத்தின் முதல் கட்டத்துடன் தொடர்புடையது. இதில் முன்னுரிமை குழுக்களான மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட முன்னணித் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசிப் போடப்படும். இதே போன்ற வாய்ப்பு, நேரம் வரும் போது பொது மக்களுக்கு வைக்கப்படாது. (இந்த தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16 ல் துவங்க உள்ளது)

இரண்டாவதாக, பாண்டாவின் வார்த்தைகளில், செல்வி என்ற ஒரு சுகாதார ஊழியர் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். இப்போது செல்விக்கு ஒரு தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வருமாறு ஒரு செய்தி வரும். அத்துடன் தொடர்புடைய விவரங்கள் மற்றும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு பற்றிய உண்மை தகவல் அறிக்கைகளும் தரப்படும். இந்த இடத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஒப்புதல் வேண்டும் என்பது செல்லுபடியாகும். அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வாய்ப்பு இருக்கும்.

“என் தலை சுற்றுகிறது, ” என்கிறார் பிரபல மருந்து அறிவியலாளர் ககன் தீப் காங். அவரைப் பொறுத்தவரை,  தடுப்பூசி மருத்துவ சோதனைக்கு ஒப்புக் கொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் என்ன தடுப்பூசி என்பதுடன் பங்கேற்பாளர் எந்த ஊசி வேண்டுமானாலும் போட்டுக் கொள்கிறாரா அல்லது எதனுடைய விளைவுகள் ஒப்பிடப்பட்டுள்ளதோ அதை போட்டுக் கொள்கிறாரா என கேட்கப்பட வேண்டும். “இதை புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது,” என்கிறார் அவர்.

“ஆனால் அரசு ஒரு தடுப்பூசியை போடும், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்,‌ அதன்பிறகு அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். என்கிற ரீதியிலான ஒரு தடுப்பூசி போடும் திட்டத்தை  அல்லது தடுப்பூசி சோதனையை நான் கேள்விப்பட்டதே இல்லை,” என்கிறார் மருத்துவர் ககன் தீப் காங்.

ஒரு வேளை, செல்வி தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒப்புக் கொண்டால், அவர் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு ஒரு அரசின் பிரதிநிதி, கோவாக்சினோ அல்லது கோவிஷீல்டோ போடுவார்.  பாண்டாவை பொறுத்தவரை, “இது பால் குறிப்பிடுவது போல பங்கேற்பாளர்கள் எதைப் போட்டுக் கொள்வது என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்புத் தரப்படாது” என்பதாகும்.

கோவிஷீல்டும் கூட “மருத்துவ பரிசோதனை பயன்முறை” யின் ஒரு பகுதியாக இருக்குமா என, ககன் தீப் காங் வியப்படைகிறார். சோதனை பங்கேற்பாளரின் ஒப்புதல் இரண்டு வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை கருத்தில் கொண்டால், நான் கோவாக்சின் எடுத்துக் கொள்கிறேன் அல்லது கோவிஷீல்டு எடுத்துக்கொள்கிறேன் என்பதாக இருக்கும். இந்த வழியில் ஒப்புதலைப் பெறுவது, அடுத்தடுத்த முடிவுகள் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ககன் தீப் காங்.

“உரிமம் பெறாத அல்லது ‘கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தும்’  தடுப்பூசிகளுக்கு, அரசு உண்மையில் தரவுகளை சேகரிக்க ஒரு வழிமுறையை வைத்திருந்தால், அது எதிர்காலத்தில் பயனுடையதாக இருக்கும். அது மிகவும் நல்லது, ஆனால் நான் அவ்வாறு எதுவும் திட்டமிடப்பட்டு நடப்பதாகக் கேள்விப்படவில்லை. ஆகவே, “மருத்துவ சோதனை பயன்முறை” எதை சேகரிக்கப் போகிறது?  பாதுகாப்பு என்பதாக இருக்கலாம். ஆனால் என்ன செய்யப்படுகிறது என்ற நெறிமுறை இல்லாத நிலையில், எங்களுக்கு உண்மையில் என்னவென்று தெரியவில்லை” என்று கூறும் ககன் தீப் காங் இறுதியாக “அரசின் குறிக்கோள் அனைவரின் குறிக்கோள்” என்பதற்காக, அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்று கூறி முடித்தார்.

(www.thewire.in இணையதளத்தில் வாசுதேவன் முகுந்த் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்