Aran Sei

ஆரோக்கியத்தை கொடுக்கும் சாதி மறுப்பு திருமணம் – மரபணு ஆய்வு முடிவு

றத்தாழ 70 தலைமுறைகளுக்கு முன்பிருந்து, இந்தியர்கள் வேறு சாதிகளில் இருந்து திருமணம் செய்வதை நிறுத்திக்கொண்டு, சொந்த சாதிகளுக்குள் மட்டுமே திருமணம் செய்யும் முறையை கையில் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

சமீப காலங்கள் கிடைத்த முக்கிய ஆய்வு முடிவுகளை வைத்து, ஹார்வெட் பல்கலை கழகத்தின் டேவிட் ரைச் ’நாம் யார். நாம் எப்படி இங்கே வந்தோம்’ (Who We Are and How We Got Here) என்ற மனித மரபணு தொடர்பான ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

“நான் பேசுவது ஒருபக்க சார்புடையதாக தெரியலாம். ஆனால் பிரியா மூர்ஜனி, கே.தங்கராஜ், வகீஷ் நரசிம்மன் மற்றும் பலரின் ஆய்வு முடிவுகளை கொண்டு எழுத்தப்பட்ட இந்தியா குறித்தான அத்தியாயம் தவிர்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த விஞ்ஞானிகள் பல வரலாற்று ஆய்வு திறப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.”

அதில் முக்கியமான ஆய்வு முடிவு, ‘ இந்திய மூதாதையர்களை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். வட இந்திய மூதாதயர்கள் (ANI) மற்றும் தென்னிந்திய மூதாதையர்கள் (ASI). பெரும்பாலான இந்தியர்களின் மூதாதையர்கள் கலப்பு திருமணம் செய்தவர்கள். மேலும் இந்திய மக்கள் தொகையில், வட இந்திய மூதாதையர்களும் (ANI) தென்னிந்திய மூதாதையர்களும் (ASI) மட்டுமல்ல, அந்தமான்-நிக்கோபார் தீவைச் சேந்தவர்களும், திபெத்திய-பர்மானியர்களும், ஆஸ்த்ரேலிய-ஆசிய குழுக்களும் பெரும் பங்கை செலுத்தியிருக்கின்றன.’ என்பது.

ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த மக்கள் எந்த இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்கள் எப்படி அழிந்து போனார்கள் என்பதையும் அறிய முக்கிய காரணிகளாக இருப்பது டி.என்.ஏ எனப்படும் மரபியல் ஆய்வுகள் தான். ரஹிகர்ஹியில் கண்டெடுக்கப்பட்ட 4500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூட்டின் மரபணு ஆராய்ச்சியில், அது தென்னிந்திய மூதாதயர்கள் (ASI) வகையை சேர்ந்தது என்பது தெரிய வருகிறது.

வரும் ஆண்டுகளில், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் மரபணு ஆய்வு முறைகளையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்வதன் மூலம், நம் மூதாதயர்களின் தோற்றம் குறித்து துல்லியமான ஆய்வு முடிவுகள் வரலாம்.

மரபணு ஆய்வின் முடிவுகள்

  1. 4500 ஆண்டுகளுக்கு முன்பாக, வடஇந்திய மூதாமையர்களும் (ANI) தென்னிந்திய மூதாதையர்களும் (ASI) எவ்வித திருமண உறவுகளிலும் ஈடுபடவில்லை.
  2. அதற்கடுத்த 2000 ஆண்டுகள், இவர்களுக்குள் அதிக அளவிலான திருமண உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
  3. 70 தலைமுறைகளுக்கு முன், இவ்வகை திருமணங்களை நிறுத்திக்கொண்டு, சிறுகுழுக்களை உருவாக்க தொடங்கினர்.
  4. அக்குழுக்கள் தான் இப்போது இருக்கும் சாதி குழுக்களாக மாறியிருக்கிறது.
  5. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இந்தியர்கள் இக்குழுக்களுக்கு உள்ளேயே திருமணங்கள் செய்யத் தொடங்குகின்றனர்.

ஹரப்பர்கள் தோற்றமும் அழிவும் குறித்த கேள்வி கல்விதளத்திலும், அரசியல் தளத்திலும் முக்கிய கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதி குழுக்களின் மரபணு ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தான், கடந்த 2000 ஆண்டுகளாக இந்தியர்களின் ஆரோக்கிய உடல் வளர்ச்சியை தெரிந்துக்கொள்ள முடியும். இந்த முடிவுகள் மூலம் வருங்கால இந்திய சமூகத்தை ஆரோக்கியமாக கட்டமைக்க முடியும்.

டேவிட் ரைச் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார். இந்தியாவை பற்றி கூறும் போது, “..அதிக எண்ணிக்கையிலான குறுங்குழுக்களின் தொகுப்பு..” என்கிறார்.

தங்கராஜ் மற்றும் அவரின் ஆய்வாளர்கள் குழு 263 சாதி குழுக்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். அதில் 81 சாதி குழுக்கள் அதிக அளவிலான வம்சாவளி அடையாளங்களை கொண்டுள்ளன. இந்த வம்சாவளி அடையாளங்களின் அளவு, உலகின் பிரபலமான மக்கள் குழுக்களான அஸ்கெனசி யூதர்களையும் ஃபின்ஸையும் விட அதிகம். இதில் 14 குழுக்களின் மக்கள் தொகை பத்து லட்சம்தான். காரணம், அகமண முறையால் சில மரபியல் நோய்கள் வருகின்றன. மேலும் சொந்தத்திற்கு உள்ளேயே திருமணம் செய்வதாலும், ஒரே மூதாதையர்களை கொண்டதாலும் கூட இது நிகழலாம்.

எடுத்துக்காட்டாக, அஸ்கெனசி யூதர்களிடையே இருந்த டாய்-சாச் என்ற தொற்று நோய் குறித்து சொல்கிறார் ரைச். மரபணு நோய்கள் குறித்தான சோதனை முகாம்கள் நடத்தப்பட்டதால், அந்த நோய் அம்மக்களிடையே முற்றிலுமாக குணமாகிவிட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் போன்ற எளிய முறையிலான மரபணு சோதனைகள் இப்போது குறைந்த விலையில் நடத்தப்படுகின்றன.

அஸ்கெனசி யூத குழு மக்களிடையே உள்ள நோய் தொற்றுகளை பட்டியலிட்டுள்ளனர். ஆனால் இந்த நோய்த் தொற்றுகள் மற்ற இனக் குழுக்களுக்கு வராது. நாம் இந்தியாவில் ஐந்தாயிரம் அகமண புரியும் சாதி குழுக்களை கொண்டுள்ளோம். ஆகவே நாம் ஐந்தாயிரம் நோய்த் தொற்று பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொரு சாதிக் குழுவில் இருந்தும், 200 தனி நபர்களை தேர்வு செய்து, அவர்களின் மரபணு மாதிரிகளை சேகரிக்க வேண்டும். பின் அவற்றை அச்சாதிகளில் உள்ள மரபணு நோய்களோடு தொடர்புப்படுத்தி, ஆய்வு செய்ய வேண்டும்.

ஒருவேளை நம்மிடம் இந்த ஐந்தாயிரம் சாதி குழுக்களின் மரபணு பற்றிய தகவல் தொகுப்பு இருந்தால், ஒரு சாதிக் குழுவுக்குள் ஏற்படும் மரபணு நோய்த் தொற்றுகளை எளிதாக கண்டறியலாம். எனவே ஆரோக்கியமான பொது சுகாதாரம் உருவாக்க தேசிய மரபணு தகவல் தொகுப்பை ஏற்படுத்துவது முக்கியம். இன்னொரு வகையில், பொது சுகாதாரத்தை ஆரோக்கியமான வழியில் செலுத்துவதன் மூலமும் சாதியை அழிக்க முடியும். கலப்பு சாதி திருமணங்களால் நமக்கு நன்மையே நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சராசரியாக 5 முதல் 6 சதவீதம் மட்டுமே கலப்பு திருமணங்கள்.

இந்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் 42,000 குடும்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. 2004-5 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் இதின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்கிறது. மிசோராம் (55 சதவீதம்), மேகாலயா (46 சதவீதம்), சிக்கிம் (38 சதவீதம்), ஜம்மு காஷ்மீர் (35 சதவீதம்) அதிகப்படியான கலப்பு திருமணங்கள் நடக்கும் மாநிலங்களாகவும், மத்திய பிரதேசம் (1 சதவீதம்), ஹிமாச்சல், சத்திஸ்கர் மற்றும் கோவா (2 சதவீதம்), பஞ்சாப் (3 சதவீதம்) ஆகியவை குறைந்த கலப்பு திருமணங்கள் நடக்கும் மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

லோல் ஃப்வுண்டேஷன் மற்றும் சி.எம்.ஐ.ஈ இணைந்து நடத்திய மற்றொரு ஆய்வில், தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில், தென்னிந்தியாவில் கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்கின்றன என்று கண்டறிந்துள்ளது. இதில் தமிழ்நாடு 3 சதவீதத்தில் இருக்கிறது.

(www.theprint.in இணையதளத்தில் நிதின் பால் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்