Aran Sei

‘விராத்.. இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்’- உலக கோப்பை போட்டியில் முழக்கமிட்ட பெண்

விரோத் கோலி இந்திய விவசாயிகளுக்கு துணை நில்லுங்கள் என்று கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மைதானத்தில் முழக்கமிட்டுள்ளார்.

நேற்று முன்தினம்(நவம்பர் 9), ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் நமீபியா அணியும் விளையாடின. அதில், இந்திய அணி வெற்றிப்பெற்றது.

அப்போட்டியின் போது, பெமிலியனுக்கு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களை நோக்கி, இந்தியாவில் ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கோரி பெண் ஒருவர் முழக்க எழுப்பியுள்ளார்.

பார்வையாளர்கள் பகுதி வழியாக வரிசையாக பெவிலியன் திரும்பிய தீபக் சாகர், ஷீகர் தவான் மற்றும் விராத் கோலி ஆகியோரை நோக்கி, முழக்கம் எழுப்பியுள்ளார்.

“தீபக் சாகர்.. உங்கள் அணியினரிடம் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தர சொல்லுங்கள். உங்கள் மக்களை ஆதரியுங்கள். தவான்.. இந்திய விவசாயிகளை ஆதரயுங்கள். உங்கள் மக்களுக்காக உடன் நில்லுங்கள். விராத்.. விவசாயிகளின் உரிமைகளுக்காக உடன் நில்லுங்கள். விவசாயிகளின் ஒற்றுமை ஓங்க வேண்டும். கழிப்பறை காகித கட்டு நீங்கள்” என்று அப்பெண் அவர்களை நோக்கி முழக்கமிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்