Aran Sei

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

ளர்ந்து நிற்கும் தினை பயிர்கள் கோதுமை நாற்றுகளுக்கு வழி கொடுத்து நிற்கிறது. பருவநிலை மாற்றம் பூல்கரியின் வயல்வெளிகளில் தெளிவாகத் தெரிகிறது.

தன்னுடைய 19 வயது மகள் தினை வயல்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்திருக்கின்றன. இப்போதும் அவர் முகத்தில் சிரிப்பு என்பது இல்லை; சிரிப்பை போல ஏதோ ஒன்று மெலிதாய் உள்ளது. அந்த பெண்ணின் மரணமும், குடும்பத்தின் அனுமதி இல்லாமல், நடு இரவில் அவள் தகனம் செய்யப்பட்டதும் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது.

தலித் கொலை வழக்கு : விசாரிக்காத காவல் துறையினர் – உயர்நீதிமன்றம் நடவடிக்கை

மத்திய புலனாய்வு துறை ஹத்ராஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை நியாயமாக இருப்பதாக தெரிவித்தார்.

குற்றப்பத்திரிக்கையில், சட்டப்பிரிவுகள் 376, 376D, 302 மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சந்தீப் (20), ராமு (26), ரவி (35) மற்றும் லவ்குஷ் (21) ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலிகர் மாவட்ட சிறையில் உள்ளார்கள்; மேலும், அஹமதாபாத்தில் உள்ள அரசு பரிசோதனை மையத்தில் , விசாரணைக்காக அவர்களுக்கு நார்கோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

”நாங்கள் குற்றப்பத்திரிக்கையை பார்க்கவில்லை, ஆனால், குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இது சரியான முடிவு என்று சொல்கிறார்கள்” என எட்டு கண்காணிப்பு கேமராக்களும், கன்சர்டினா வயர்களும், அதிரடிப்படை அதிகாரிகளும் நின்று காவல் காக்கும் வீட்டில் உள்ள கட்டிலில் அமர்ந்தபடியே அவர் சொல்கிறார்.

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நம்பிக்கைக்கு காரணம் சி.பி.ஐ விசாரணை மட்டுமல்ல, கிராமத்தில் இருக்கும் பதட்டத்திற்கு மத்தியிலும், பயிர்களை பகிர்ந்தளிப்பதாக பக்கத்து வீட்டில் உள்ள பார்ப்பன குடும்பம் கூறியுள்ளது.

“இப்படியான சூழலில் பயிரிடுவது சாத்தியமற்றதாக இருந்தது” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சொல்கிறார்.

அவருடைய பக்கத்து வீட்டுக்காரர், ஜக்தீஷ் சந்திர பசௌரி, தெரியாதவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க விரும்பாதவர், கிராமங்களில் சமூக படிநிலைகள் உள்ளதென்றாலும், “இங்கே ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் நிற்போம்” என்கிறார்.

`தலித்துகளும் ஆதிவாசிகளும் படிக்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்’ – ராகுல் காந்தி

“வயலில் பயிரிடுவதற்கு அவர்களுக்கு ஆட்கள் தேவையாக இருந்தது. அவரின் சம்மதித்தின் பேரில், அவர் வயலில் கோதுமை பயிரிட்டேன். அறுவடையைப் பகிர்ந்து கொள்வோம். இதில் ஒன்றும் தவறில்லை, யாரும் இதைச் செய்யக் கூடாது என்று என்னை தடுக்கவும் முடியாது. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்” என்கிறார் பசௌரி.

ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என பிரச்சினைகள் இருக்கிறது.

“கிராமத் தலைவரோ, அவருடைய மகனோ எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவில்லை. துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு என்ன நோக்கம் என்று புரியவில்லை. ‘நீங்கள் எங்கேயுமே பாதுகாப்பாக இருக்க மாட்டீர்கள்’ என்று ஒருவர் ஃபோனில் அழைத்து மிரட்டினார்” என்கிறார் அப்பெண்ணின் தந்தை.

இந்த அச்சத்தினால், “இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும், அங்கே எங்களுக்கு தங்க வசதி செய்து தர வேண்டும்” என்று சொல்கிறார்.

விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே

இதற்கு அர்த்தம் தன்னுடைய மூதாதையர்களின் நிலத்தை விட்டுச் செல்வது இல்லை என்று சொல்பவர் உடனே அது உண்டாக்கும் தாக்கத்தை உணர்கிறார். “நாங்கள் சமூக படிநிலைகளை மதித்தோம், கிராமத்தில் உள்ள நிறைய பேருக்கு இது தெரியும்.. நாங்கள் எல்லை தாண்டி நடக்கவில்லை. இவ்வளவு வருடங்கள் நாங்கள் கோவிலுக்கு வெளியே கை கட்டி நின்றோம். எங்கள் அரச மரத்திற்கும், துளசிக்கும் கங்கை நீரை ஊற்றினோம். இருந்தாலும், எங்கள் மகள்கள் பாதுகாப்பாக இல்லை, மரியாதையோடு தகனம் செய்யவும் முடியவில்லை” என கசப்புணர்வோடு சொல்கிறார்.

மாவட்ட மாஜிஸ்திரேட்டின் முறைகேட்டிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பெண்ணின் இளைய சகோதரன் சுட்டிக் காட்டுகிறான்.

“என்னுடைய அக்காவை நடு இரவில் தகனம் செய்ததற்காக மூத்த அதிகாரிகளை உயர் நீதி மன்றம் தண்டிக்கிறது. திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் தகனம் செய்யும் இடத்திற்கு என எங்களுக்கு ஒரு பாரம்பரிய சடங்கு இருக்கிறது. அந்த இரவில் தகனம் செய்யப்பட்டது யார் என்று தெரியாததால், இன்னமும் அவளுடைய அஸ்தியை கரைக்காமல் வைத்துள்ளோம்” என குடும்பத்தினரின் அனுமதியின்றி நடுஇரவில் நடந்த தகனத்தை நினைவுகூர்கிறார்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

எதிர்காலத்தை நினைத்தும் அக்குடும்பம் கவலையோடு இருக்கிறது.

“ நிவாரண உதவியாக 25 லட்ச ரூபாய் வந்தது, ஆனால் முதலமைச்சர் உறுதி அளித்தது போல ஒரு குடும்ப உறுப்பினருக்கு வேலையும், வீடும் என்ன ஆனது என்று தெரியவில்லை. நானும் என்னுடைய தம்பியும், முழு அடைப்பிற்கு முன் டெல்லியில் வேலை செய்து கொண்டிருந்தோம். ஒருவரும் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அப்பாவும் உள்ளூரில் ஒரு பள்ளியில் சுகாதார பணியாளராக வேலை செய்து மாதம் மூன்றாயிரம் ரூபாய் சம்பாதித்தார். எவ்வளவு நாட்கள் தான் நாங்கள் அடைபட்டு இருப்போம்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

சிபிஐ-ன் குற்றப்பத்திரிக்கை , ஃபோன் அழைப்புகளின் தரவுகளை வைத்து சொல்வது போல, தன்னுடைய அக்காவிற்கும், குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப்பிற்கும் இடையே எந்த உறவும் இருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

“சந்தீப் , வீட்டு எண்ணிற்கு அழைத்து ‘டில்லியின் டான்’ பேசுவதாக அடிக்கடி கூறியதுண்டு. என்னுடைய மருமகளிடம் முறைகேடாகப் பேசினான். அது சந்தீப்பின் எண் என்று தெரிந்த பிறகு, மார்ச் மாதம் அவனுடைய அப்பாவிடம் சொன்னேன். அவரும் அது சந்தீப்பின் எண் என்று ஏற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக கூறினார்” என்கிறார்.அப்பெண்ணின் தந்தை.

ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்றம்சுமத்தப்பட்டவர்களின் வீட்டில், ஒரு நம்பிக்கையின்மையும் கோபமுமான சூழல் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை குறித்து பேச தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சந்தீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையே “உறவு” ஒன்று இருந்ததாகச் சொல்கிறார்கள்.

“உண்மை நிலைக்கும். சிபிஐ வேண்டுமானால் எங்கள் மகன்களை குற்றவாளிகள் என்று சொல்லலாம். ஆனால் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் முறையிடப்பட வேண்டியிருக்கிறது” என்று ராமுவின் தந்தை ராகேஷ் சொல்கிறார். அவர் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லாது போனதால் தன் மகன் சம்பவம் நடந்த நேரத்தில் அருகிலுள்ள பால் பண்ணையில் இருந்தான் என்பதை சிபிஐ கணக்கில் கொள்ளவில்லை என்கிறார்.

இன்னொரு குற்றவாளியாகிய ரவி என்பவரின் தந்தை அத்தார் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணுடைய மரண வாக்குமூலத்தின் மீதே சந்தேகம் எழுப்புகிறார். “அவள் தனது முதல் வாக்குமூலத்தில் சந்தீப்பை மட்டுமே குறிப்பிடுகிறாள். அவளுடைய தாயும் சந்தீப்பின் மீதே குற்றம் சாட்டுகிறார். அவர்கள் சாதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரின் மகளின் உந்துதலுக்குப் பின்னரே மற்ற மூவரையும் குற்றம் சாட்டுகிறார்.” என்று அத்தார் சிங் கூறுகிறார். “எங்கள் மகன்கள் மூவரின் பெயர்களையும் பாதிக்கப்பட்ட பெண், அலிகார் மருத்துவமனையில் தன் வாக்குமூலத்தின் குறிப்பிடும் முன்னரே, எம்.பியின் மகள் சமூக வலைத்தள பக்கங்களில் எங்கள் மகன்களில் பெயர்களை குறிப்பிட்டிருப்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்” என்றும் ராகேஷ் கூறுகிறார்.

ஜனநாயகத்தை நொறுக்கும் மோடி அரசு – புதிய பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் – திருமாவளவன்

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சுயசாதித் தலைவர்களின் ஆதரவின் மூலமே நிலைத்து வருகிறார்கள். அத்தலைவர்களோ இவர்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்தும் நடத்துகிறார்கள். புதன்கிழமை அன்று பாரதிய கிஸான் சங்கேதானின் ஹத்ராஸ் பிரிவின் தலைவராகிய நித்தீஷ் சௌஹன், கிராமத்திற்கு இவர்களுக்கு ஆதரவாக வருகை தந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர்களையும் பரிசோதிக்கவும் விசாரணை செய்யவும் வேண்டும் என்று வலியுறுத்தியதை ராகேஷ் மறுக்கிறார்.

சீபிஐ இவ்வழக்கை கையில் எடுத்ததும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான ஆதரவு குறைந்துவிட்டது என்று அக்கிராமத்தவர்கள் கூறினாலும் இன்னமும் சாதி அமைப்புகள் அங்கே வன்மத்தைத் தூண்ட முயன்றபடிதான் இருக்கின்றன. வியாழக்கிழமை அன்று கர்னி சேனா பாரத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்தைக் கூட்ட முயன்றதாக ஹத்ராஸ் போலீசார் கைது செய்தனர். வெள்ளியன்று, அவ்வமைப்பின் தலைவர் குற்றம் சாட்டப்படவர்களின் குடும்பங்களைச் சந்திக்க அனுமதிக்கப் படுகிறார்.

`கழினியில் இறங்கிய மாட்டைப் போல, மக்களை அடித்துத் துரத்துகிறார்கள்’-இயக்குனர் கோபி நயினார்

அதிகாரிகளின் அக்கறையின்மை:

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அப்பெண்ணின் உறவினர்கள் அருகில் இல்லாமலேயே போலீசார் அடக்கம் செய்த செப்டம்பர் 30ஆம் தேதியின் இரவை நினைவு கூர்கையில், அப்பெண்ணின் பிணத்தைச் சிலர் மொரோதாபாத்-ஆக்ரா நெடுஞ்சாலையின் குறுக்கே போட்டு போராட்டம் செய்யத் திட்டமிடுவது போல் தங்களுக்குத் தகவல்கள் கிடைத்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

“அது கிராமத்தில் கலவரத்தைத் தூண்டியிருக்கக் கூடிய செயல். நிர்வாகம் எப்படி செயல்படுவது என்று முடிவெடுக்க வேண்டிய இடம் அது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமான அளவுகோல்களில் வினையாற்ற வேண்டி இருக்கிறது. இம்முறை தேவையைவிட கொஞ்சம் அதிகமாகவே வினையாற்றி விட்டனர் போலும்” என்று அவலமான நகைச்சுவைத் தோரணையில் அவர் கூறுகிறார். “ஒருவேளை இன்னும் அதிகமான அளவில் படைகளைக் குவித்து நியாயமான முறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் உங்களுடைய (செய்தியாளர்கள்) மற்றும் என்னுடைய வருகைகள் இக்கிராமத்திற்கு அவசியப்படாமல் போயிருக்கலாமோ என்னவோ” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆர்எஸ்எஸ்-ம் அம்பேத்கரும் – என்றுமே இருந்திராத தோழமை

 

பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, தனக்குக் குற்றப்பத்திரிகையின் முழு வரைவு இதுவரை கிடைக்காத போதிலும் குற்றம் சாட்டப்பட்ட சட்டப்பிரிவுகளை கவனிக்கும்போது, இது பாதிக்கப்பட்டவருக்கான நீதிக்கான பாதையில் ஒருபடி முன்னேறியது போல்தான் என்று கூறுகிறார். வழக்கு கடினமான ஒன்றாக இருந்தாலும் வன்புணர்வு சட்டங்கள் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு வெகுவாக மாறிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

“ஜனவரி 4 ஹத்ராஸ் நீதிமன்ற விசாரணைக்கு இவ்வழக்கு வரும்போது நாங்கள் வழக்கை உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே கொண்டுசெல்வதற்கு கோரிக்கை வைக்கப் போகிறோம். மேலும் அல்லஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் பங்கைப் பற்றியும் கேள்வி எழுப்புவோம்” என்று அவர் கூறுகிறார்.

( தி இந்து ஆங்கில இதழில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம் )

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்