Aran Sei

ஜனநாயக நிறுவனங்களுக்கு குழி பறிக்கும் இலங்கை அரசு – அம்பிகா சத்குணநாதன்

இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மூலம் இராணுவமயமாக்கல் மற்றும் குடிமை உரிமைகளைக் குறைக்கும் முயற்சிகள், இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த விவாதம் சமூக மதிப்பு அமைப்பு முறைகளையும், பொது கண்ணோட்டத்தில் அவை எவ்வாறு ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சி மீதான மரியாதையையும் குழி தோண்டி புதைக்கின்றன என்ற கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத தற்கால நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த பத்தாண்டுகளின் தொடர்ச்சியாகவே ராஜபக்சேவின் ஆட்சிகள்  வெற்றிகரமாக இவற்றை  கூர்தீட்டி உள்ளதால் இந்த நடைமுறைகள் எதுவும் புதிதல்ல. இலங்கையில் ஜனநாயகம் எந்தெந்த வழிகளில் அழிக்கப்படுகிறது என்பதை  புரிந்து கொள்ள ரஷ்ய அரசியல் அறிவியலாளரான அலெனா லெடெனேவா மற்றும் துருக்கிய ஊடகவியலாளர் ஈஸ் டெமெல்குரன் ஆகிய இரு பெண்களின் முன்னோடியான பணிகள் உதவுகின்றன.

பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் கைது – தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

மதவெறியை சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக ஒரு வெகுமக்கள் இயக்கத்தை உருவாக்குவது என்பதை  அடிமட்டத்தில் இருப்பவர்களை அணி திரட்டுவது மற்றும் ஆளுமை வழிபாட்டின் மூலம் ராஜபக்சேக்கள் வெற்றிகரமாக செய்துள்ளார்கள். இதுதான் அவர்களுடைய முக்கிய போர்தந்திரங்களில் ஒன்று என டெமெல்குரன் அடையாளம் காட்டுகிறார். முன்பு சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப் படாமலிருந்த, குறைந்தது பொதுவெளியில் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த  முஸ்லீம்களுக்கு எதிரான தப்பெண்ணத்தையும், மதவெறியையும் தற்போது வெளிப்படையாக கூறுவதன் மூலம் இந்த இயக்கம்  தேசப்பற்றுடையது என்பதில் நம்பிக்கையை உருவாக்குவது அதன் கடுமையான பணி ஆகும். தப்பெண்ணங்களை வெளிப்படுத்துவது மற்றும் அதன் அடிப்படையில் செயல்படுவதில் மக்கள்  நம்பிக்கையுடன் இருக்கும் போது, அது அவர்களுடைய சக ஊழியர்கள், அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கு எதிராகக் கூட தங்கள் நடத்தைகள் மாற்றிக் கொள்ளவதை தாங்கள் நேரில் கண்டதாக அவர் கூறுகிறார். தங்களின் நண்பர்கள் என நம்பி இருந்தவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை புதைப்பதற்குக் கூட‌ உதவிக்கு வராததைக் கண்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகப் பல முஸ்லீம்கள் தெரிவித்தனர்.

நான் அவர்கள் கூறுவதை கேட்கும் போது, 2019 ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு அபயா(பர்தா) அணிந்ததற்காக சக ஊழியர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதாக  ஏராளமான முஸ்லீம் பெண்கள் இதே போன்ற குறைகளைக் கூறியது எனக்கு நினைவிற்கு வந்தது. மேலும், இதற்கு முன்னால்  ராஜபக்சேவின் முதல் ஆட்சியில் முஸ்லீம் எதிர்ப்புப் பேச்சுக்களால் முஸ்லீம்களிடையே அச்சம் தோன்றியது. எனவே இது தொடர்ச்சியில் ஒரு பகுதியாகும்.

2020-ம் ஆண்டில் பெண் ஒடுக்குமுறை தொடர்பாக 80,000 வழக்குகள் – ராஜஸ்தான் அரசிற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இத்தகைய சூழலில், யாரெல்லாம் தப்பெண்ணத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்களோ அவர்கள் இந்த நாட்டை நேசிக்கும் “உண்மையான மனிதர்கள்” எனக் கொண்டாடப்படுகிறார்கள்.

அதேவேளையில், மத, இனவெறியை எதிர்ப்பவர்கள்  துரோகிகளாகவும்,நாட்டுப்ற்று அற்றவர்களாகவும் நாட்டிற்கு ஆபத்து விளைவிப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தலைவர் தன்னை “அரசியலுக்கு எதிரானவன்” என்று காட்டிக் கொள்வதன் மூலம் வித்தியாசமானவராகவும், பலனை எதிர்பார்க்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும் பார்க்கப்பட்டு, மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பார்.

கோத்தபய ராஜபக்சே, “மக்கள் பாரம்பரியமற்ற அரசியல்வாதிகளை விரும்புகிறார்கள். மக்கள் அத்தகைய பாரம்பரியமற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் எப்போதும் அரசியல்வாதியாக இருந்ததில்லை” என்று அறிவித்துக் கொண்டார். இதன்மூலம் தன்னை எதிர் அரசியல்வாதியாக காட்டிக் கொண்டார். நீண்ட காலமாக சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் ஏழ்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், அரசியல் ரீதியாகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். “உண்மையான மக்களை” பாதிக்கும் பிரச்சனைகளை உணராத வெளி உலகப் பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்(cosmopolitan) அரசியல்வாதிகளாக அல்லது முன்னுரிமை பெற்றவர்களாகப் பார்க்கப்படும் அரசியல்வாதிகள் குடிமைப் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டிருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. இதனால் அவர்கள் தங்களை எதிர் அரசியல்வாதிகளாக தங்களைக் காட்டிக் கொள்வதை நோக்கி ஈர்க்கப்பட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.

வாக்குச்சாவடி முகவர்களுக்கே பாஜகவில் திண்டாட்டம் – வெளியான பாஜக தொண்டர்களின் தொலைப்பேசி உரையாடல்

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைக் ‘காப்பாற்றியது போலவே தற்போது மக்களை ஏழ்மை, ஊழல், நிழல் உலக/ போதைப் பொருள் தாதாக்கள் மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றப் போவதாக அதிபர் மிகத் தந்திரமாக மக்களிடம் நினைவு படுத்துகிறார்.  நிலப்பிரபுத்துவத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், ஆதரவளிக்கும் கலாச்சாரத்தால் வழிநடத்தப்படும் இலங்கையில் தங்கள் கீழ்படிதலுக்கு ஈடாக அரசிடமிருந்து உதவிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் மக்கள் அவரை கதாநாயகனாக உயர்த்தி வைத்து, அவர் நாட்டை ஊழலிலிருந்தும், நேர்மையற்ற அரசியல்வாதிகளிடமிருந்தும் காப்பாற்றுவார் என நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் தங்கள் சுயநலனுக்கு எதிராக செயல்படுகிறார்கள்

இந்த ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் காவலர் என்ற முகமூடி கட்டமைப்பு சமத்துவமின்மையில் வேரூன்றி இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பதில் பயன்தரவில்லை. நிதிநிலை அறிக்கையில், கொரோனா நெருக்கடி காலத்தில் சுகாதார சேவைகளுக்கு நிதியை குறைத்தது மற்றும் வெளிநாடுகளில் பரிதவித்து நின்றிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்காததால் அவர்கள் தங்கள் சொந்த உடைமைகளை விற்றும், தனிப்பட்ட குடிமக்களிடமிருந்து நிதிஉதவி பெற்றும் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது உள்ளிட்டவை, இந்த அரசு ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களை கடுமையாக புறக்கணிப்பதைக் காட்டும்  சில சான்றுகள் ஆகும்.

சமத்துவமான சமுதாயத்தை விரும்பும் மக்கள் ஏன் முரண்பாடாக, இருக்கும் கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் மீட்பர்கள் மற்றும் ஆணாதிக்கவாதிகளை நோக்கியே ஈர்க்கப்படுகிறார்கள்? இந்தப் பகுத்தறிவற்ற‌ மையமும், ஆணாதிக்க அரசை உருவாக்குவதை ஆதரிக்கும் ஆளுமை வழிபாட்டையும் அசோகன் ஆளுமை  எனப்படும் இலங்கை பகுப்பாய்வு கட்டமைப்பின் மூலம் புரிந்துக் கொள்ள முடியும். மைக்கேல் ராபர்ட்ஸ் கருத்தின்படி, இந்த அசோகன் ஆளுமை என்பது  உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவருக்கும் அவரது உதவியாளருக்குமிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும் ஒரு பண்பாட்டு முன்னுதாரணம்.

சட்டவிரோதமாக குறியேறியவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

மேலும், அது உயர்பதவியில் இருக்கும் ஒருவரை நேர்மையான முன்மாதிரியாகக் கருதக்கூடிய ஒருவராக விளக்குகிறது. அவர் பெரும்பான்மையினருக்கு நன்மை தரும் ஆதாரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. தகுதி மற்றும் ஆரவாரத் தலைமை அதிகாரத்தின்  மைய நீரூற்றாகவும், அதன் விளைவாக மையமான முக்கிய சக்தியாகவும் விளங்குவதாக உள்ளது” புத்தமதம் சட்டபூர்வமான சக்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.  மகத்தான அதிகாரத்துடன் சிங்கள மன்னர்களை இதில் முதலீடு செய்துள்ளது. அவை உலக புதுப்பித்தலின் அமைப்பு ரீதியான செயல்களாகவும் இருந்தன. அதில் அரசனாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் கடவுளாக மாற்றப்பட்டார் அல்லது கடவுளாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டார்.

அதிபர் ராஜபக்சேவின் பதவி ஏற்பு விழா, ஒரு தமிழ் இளவரசனை தோற்கடித்தது. இலங்கை முழுவதையும் ஆண்ட துட்டுகேமுனு என்ற அரசன் கட்டிய புத்தமத புனித இடமான ருவான்வெளிசயா என்ற இடத்தில் நடைபெற்றது. இதனை மேற்கூறிய கருத்தின் தூண்டுதலாகக் காணலாம்,” என்கிறார் மைக்கேல் ராபர்ட்ஸ்.

நவீன காலத்தில், இந்த மீட்பர் – தலைவர்கள் மீதான கீழ்படிதலையும், விசுவாசத்தையும், அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் (கட்அவுட் களையும்) பதாகைகளை நிறுவுதல், அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் விளம்பர பலகைகளில் தொடர்ச்சியான செய்திகளை வெளியிடுதல் போன்ற துதிபாடி வேலைகளை செய்வதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் விளம்பரங்களில் வெளியிடும் இரங்கல் செய்திகளிலும் இந்த அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் சிறு அரசியல்வாதிகளின் புகைப்படத்தையும் கூட சேர்த்து வெளியிட்டு பொது மக்களின் வரிப் பணத்தால் மேற்கொள்ளப்படும் அரசின் முன்னெடுப்புகள் யாவும் அரசு அலுவலகத்தலைவர்களான இவர்கள் வழிகாட்டுதலால்தான் அமலாக்கப் படுகின்றன என அறிவிக்கிறார்கள். இதன்மூலம் அரசு தனிப்பட்ட அரசியல்வாதியுடன் ஒன்று கலந்து விட்டதுடன், தனிநபர் அரசாக மாறிவிடுகிறது. இந்த நிகழ்வில் அதிபர் அல்லது பிரதமர் அரசு சுற்றி வரும் வட்டத்தின் மையமாக இருக்கிறார். ஜனவரி 1,2021 அன்று மக்களுக்குச் சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்த போதே ராஜபக்சேவின் ‘ செழிப்பு மற்றும் அற்புதத்தின் காட்சி’ என்ற தேர்தல் அறிக்கையை நடைமுறைபடுத்துவதாகவும் உறுதிமொழி ஏற்கச் செய்த  நடைமுறை மேற்கூறியதை அடையாளப்படுத்துவதற்காகவே நடைமுறைபடுத்தப்பட்டது.

மக்கள் சுயவிருப்பத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு,’அரசியல் மொழியை குழந்தமையாக குறுக்கி விடுவது, காரணங்களை அழித்து விடுவது’ என்ற போர் தந்திரமே ஒருங்கிணைந்த பங்காற்றுகிறது என அடையாளங் காண்கிறார் டெமெல்குரன். தேர்தல் தேதிகளுக்கு சோதிடர்களை  சார்ந்துள்ள சமூகத்தில் தர்க்கத்திற்கு இடமில்லை. விமர்சனங்களையும், கருத்து வேறுபாடுகளையும் எதிர்ப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் விளம்பர மனிதத் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இனவாதத்தின் மீது சவாரி செய்யும் அதீத தேசியவாதம் மற்றும் ஆட்சியாளர்கள் சார்பான ஊடகங்களின் போலி செய்திகளால்  பீடிக்கப்பட்டுள்ள மக்கள், உண்மை, பகுப்பாய்வு மற்றும்  காரணங்களில் கவனம் செலுத்துவதில்லை.

மோடியின் வங்கதேசப் பயணம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

டெமெல்குரன் கூறுவது போல,” இறுதியில் பொய்கள் மூலமும், முட்டாள்தனத்திலிருந்து உருவான புதியது போல் தோற்றமளிக்கும் ஒரு நாட்டை கட்டமைப்பதன் மூலமும் அரசியல் உண்மைகளை மாற்றுவதற்கு, மாற்று உண்மைகளின் படைகள் போதுமான அளவு வலிமை பெற்றவையாக மாறி உள்ளன.”

முறையான அமைப்புகள் செயல்படாத போது முறையற்றவை மிக உயர்வானவையாக கோலோச்சுகின்றன

சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்குட்படுத்த ஒரு புதிய வடிவிலான சட்ட ஒழுங்குமுறை உருவாக்குவது என்ற மற்றொரு முறையை நடைமுறைபடுத்தப்படுகிறது. அதில் சமூக நடத்தைகளை கட்டுப்படுத்த, குறிப்பாக எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த சட்டத்தை அரசின் ஆயுதமாக மாற்றுவது நடக்கிறது. இங்கு சட்டத்தின் ஆட்சிக்கு மிகக் குறைவான மதிப்பே காட்டப்படுகிறது.

செப்டம்பர் 2020 ல் அரசு ஊழியர்களுக்கு கோத்தபய கூறிய குறிப்புகளில் அதிபரின் பார்வையில் சட்டத்தின் ஆட்சி பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தனது வாய் மொழி உத்தரவுகளை சுற்றறிக்கைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 2020, பிப்ரவரி அறிக்கையில்,” நீதித்துறை தேவையின்றி சட்டத்துறையிலும், நிர்வாகத்துறை தலையிடுவது கூடாது என்பது மிக முக்கியமானது,” என்று கூறியுள்ளார். நிர்வாகத்துறை யின் வசதிக்கான கருவிகளாக சட்டத்துறை

அமைப்புகள் பயன்படுத்தப்பட்டால், அல்லது செயல்படுத்தப்பட்டால் அது சட்டத்தை தேர்ந்தெடுத்த முறையில் செயல்படுத்துவதில் முடியும். எடுத்துக்காட்டாக, அரசும், முக்கிய எதிர்க்கட்சிகளும் பெரிய பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கையில், நீதிமன்றத்திடமிருந்து அரசு மற்றவர்களை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடை செய்வதற்கான உத்தரவை பெற முடியும். இதனால் முகக்கவசம் அணியாமல் பங்கு பெறுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். ஆனால் அதே சமயம், எந்த வித சுகாதார கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் அரசு நடத்தும் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் விழாவினை ஒளிபரப்பும் அரசுக்குப் பரிவு காட்டும் தொலை காட்சிகள் மீது எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது. இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து விடும். முறையான சட்டங்களும் நடைமுறைகளும் பயனுள்ள வகையில் செயல்படாத போதும், சமமற்ற அல்லது பாகுபாடான முறையில் மேற்கொள்ளும் போதும், இணையான முறையற்ற அமைப்புகள் ‘அந்த வேலையைச் செய்யும்’. இது நிறுவனங்களையும், சட்ட நடைமுறைகளையும் பாழாக்குவதை வழக்கமாகக் கொண்டுவரும்.

இதுவும் கூட நமது கலாச்சாரத்தில் ஊடுருவும். ஆனால் அது ராஜபக்சேவின் ஆட்சிகளில் புதிய வாழ்க்கையாக, வடிவமாக மற்றும் முக்கியமானதாக  எடுத்துக் கொள்ளப்படும்.

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

அலெனா லெடனோவா ரஷ்ய நாட்டில் உள்ள “சிஸ்டமா(sistema)  குறித்த விளக்கம்,(சிஸ்டமா என்பது மேற்கத்திய நாடுகளின் கூற்றுப்படி ரஷ்ய தற்காப்புக் கலை. 1990 சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு ஆசிரியர்கள் அவரவர் விருப்பம் போல் அவரவர் அமைப்புகளைப் பயிற்றுவித்தனர்) இதற்கு இணையாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை புரிந்துக் கொள்ள உதவும்  எனக் கூறுகிறது.

சிஸ்டமா, நிரந்தர நெருக்கடி நிலை என்ற ஒரு வகையில்  சமூக, இனக்குழுக்கள் , வணிகம், வலிமையான குலங்கள் மற்றும் குற்றக் கும்பல்கள் உள்ளிட்ட  சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ‘அவசர அரசு பிரச்சினைகளை’  தீர்ப்பதற்காக என்று கிரெம்ளின் முத்திரையிட்டு  அரசு தேசிய வளங்கள், பொது மற்றும் தனியார் மீது அளவற்ற அதிகாரத்தைச் செலுத்த வேண்டும் என்பதன் ஒருங்கிணைந்த கருத்தாகும்.

“ரஷ்யர்கள் ஊழல் அதிகாரிகளைக் கண்டனம் செய்வதில் நேர்மையானவர்கள்,” என்று கூறும் அவர்,” அவர்களும் சிஸ்டமாவின் ஆணாதிக்க வசதிகளை அனுபவிப்பதற்காக அதை பாதுகாக்கவும் அதற்காக மகிழ்ச்சி அடையவும் செய்கிறார்கள். அதன் சூழ்ச்சித் திறன் மற்றும் நெகிழ்வுத் தன்மை குறித்துப் பெருமைப் படுகிறார்கள். எதையாவது பெற ஏதாவது ஒரு வழி இருக்கும்,” என்கிறார் அவர்.

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

இது இலங்கை நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அவர் கூறுகிறார். முறையான அமைப்புகள் வேலை செய்யாத போது, தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள குறுக்குவழிகளைக்  கண்டுபிடிப்பது பொதுவானதாகிவிட்டது. அமைப்பை முறைப்படுத்துவதற்குப் பதில்  அரசியல்வாதிகள் தாங்களே நேரில் இறங்கி அந்த வேலையைச் செய்கின்றனர். இது அமைப்பை மேலும் சீரழித்து, செயலற்றத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு அதிபரின் “கிராமங்களுடன் விவாதம்” என்ற நிகழ்ச்சி.  அதிபர் கிராமங்களுக்குச் சென்று கிராமப்புற மக்களுடன் அவர்களுடைய நீண்ட காலப் பிரச்சனைகள் குறித்து, எந்த இடையீட்டாளர்களுமின்றி நேரடியாகப் பேசி, இயன்ற அளவில் உடனடியாக அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், இயலாதவற்றை அதிகாரிகள் மூலம் விரைவில் தீர்க்க உத்தரவிடுவதும்  இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி ஆகும்.

முறைசாரா அமைப்புகள் ஆதிக்கத்தின் விளைவு, ‘வேலைகளை முடித்துக் கொடுப்பதற்காக’  அரசின் நம்பிக்கைக்குரிய, சொந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை அதிகாரத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்துவது ஆகும். இந்த நபர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டு, சட்டவிரோத வழிகளில் செயல்பட முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, இலங்கை சுற்றுலாத் துறை ஆணையராக   நியமிக்கப்பட்டுள்ள அதிபரின் உறவினரான உதயங்கா வீரதுங்கா அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் மீறி சுற்றுலாத் துறையின் கீழுள்ள தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதைக் கூறலாம்.  அரசை ஆதரித்து அரவணைப்பதன்  மூலம் யாரும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதே இது தரும் செய்தி. காலப் போக்கில் இத்தகைய செயல்கள் நிறுவனங்களுக்கு ‘மிதமிஞ்சிய’ ஆட்கள் தேவையா என கேட்க வைத்து, அரசு அவற்றை ஒழித்துக் கட்ட சரியான நியாயத்தை வழங்குகிறது.

“முறைசாரா வலைப்பின்னல்களைப் பயன்படுத்தும் போது நீங்கள் நவீனமயமாக்கலின் இலக்குகளை ஒரு தலைவராக உங்களுக்கு திறனுள்ள  கருவிகளை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறீர்கள். ஆனால் நீண்டகால விளைவுகளிலிருந்து நீங்கள் தப்ப முடியாது,’ என்று சுட்டிக் காட்டுகிறார் லெடெனோவா.

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதைக்கு அச்சுறுத்தல் – கலையரசன் ஏ, எம் விஜயபாஸ்கர்

தற்போதைய அரசாங்கம், ‘செழிப்பு மற்றும் அற்புதங்களின் காட்சி’, ‘புதுமை மற்றும் மேம்பாடு’, ‘ நிலையான உள்ளடக்கிய வளர்ச்சி’ போன்ற லெடெனோவா குறிப்பது போன்ற பளபளப்பான வார்த்தை பந்துகளை பயன்படுத்தி நவீன கண்ணோட்டத்தைச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நடைமுறையில்  பொது நிறுவனங்களையும், விதிமுறை அடிப்படையிலான  அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை பாழாக்கும் ஆதரவு வழி நடத்தும் முறைசாரா வழிமுறைகளுக்கு நுழைவாயிலாக அமைந்து, இறுதியாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை வேரறுத்து விடும். இலங்கையில், ஜனநாயக விழுமியங்கள்  உள்வாங்கப்படாதது தேர்தல் சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து மிக எளிதாக குழி தோண்டி புதைக்க முடியும். இலங்கை மக்களைப் பொறுத்தவரை வாக்களிப்பதுடனேயே ஜனநாயகம் துவங்கி முடிவடைந்து விடுகிறது.

தேர்தல்களுக்கிடையில் அரசாங்கத்தை பொறுப்புக் கூறலுக்கு ஆளாக்க வேண்டும் என்ற குடிமக்களின் குடிமைக் கடமைக் குறித்து மிகக் குறைவான புரிதலே அவர்களிடம் உள்ளது. கேள்விக்கிடமில்லாத வகையில் வெளிப்படையாகத் தெரியும் ஒரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகளும் குறிப்பாக தற்போதைய ஆளும் அரசின் அரசியல்வாதிகள் அரசை விமர்சிப்பவர்களையும், எதிர் கருத்தாளர்களையும்  அவற்றை ஒவ்வொரு குடிமகனின் குடிமைக் கடமை என பார்ப்பதற்குப் பதில் தேச விரோதிகள் என்றும், நாட்டுப்பற்றறவர்கள் என்றும் பார்க்கிறார்கள். இதில்தான் மிகப் பெரும்பிரச்சனையே உள்ளது.

www.thewire.in இணைய தளத்தில் அம்பிகா சத்குணநாதன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்