Aran Sei

பேரறிவாளனை மன்னித்து இந்தக் கொடூரமான விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் – பாடகர் டி.எம்.கிருஷ்ணா

செய்யாத ஒரு குற்றத்திற்காக இளமையைத் தொலைத்த எழுவர் குறித்து கடந்த வருடங்களில் நிறையவே பேசியாயிற்று. இருந்தாலும், எழுவர் விடுதலை என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த எழுவரில் ஒருவரான பேரறிவாளன் குறித்தும், எழுவரின் சிறைவாசம் குறித்தும், பிரபல இசைக்கலைஞரும் சமூக ஆர்வலருமான டி.எம்.கிருஷ்ணா, தி வயர்  இணைய தளத்தில் கட்டுரையொன்று எழுதியிருக்கிறார்.

நவம்பர் 2020. இன்னும் சில தினங்களில் பரோல் முடிவடைந்துவிடும் என்ற சூழ்நிலை. இடைப்பட்ட நாட்களுக்கு மட்டும் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டுருந்தார் அவர். கூடடைந்திருந்த பறவையென்ற மகிழ்ச்சியுடன், பரோல் முடிவடையப்போகிறது என்ற நிலையிலிருந்த பேரறிவாளனை தொலைபேசி வாயிலாக நான் தொடர்புகொள்ள முடிவு செய்தேன்.

பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஏன்? – உச்சநீதிமன்றம்

தவறே செய்திருக்காத ஒரு நபரை, நீதி மற்றும் அரசியல் அமைப்புகளை பொருட்படுத்தாமல், அரசும் நீதிமன்றமும் ஒன்றுசேர்ந்து குற்றவாளி என பழிசுமத்தி, அவர் வாழ்விலிருந்து 30 ஆண்டுகளை பிடுங்கியிருக்கிறது. பேரறிவாளன் தன் வாழ்வில் இழந்த விஷயங்களை, கோர்வையாகச் சொல்ல என் அகராதியில் சரியான வார்த்தைகள்கூட இல்லை. வார்த்தைகளற்று நான் வியந்து போயிருக்கும் நபரிடம், இப்போது நான் பேசப்போகிறேன். அவர் அழைப்பை எடுத்துவிட்டால், அவரிடம் என்ன பேசுவது, எதைப்பற்றி பேசுவது என்றெல்லாம் யோசனையில்லை. அப்போதைக்கு மனம் முழுக்க பதற்றம் மட்டுமே இருந்தது. தொலைபேசியை எடுத்து பேரறிவாளன் பேசியபோது, அவர் குரலில் இருந்த கம்பீரத்துடன் கூடிய மென்மை, என்னை சற்றே ஆச்சர்யப்படுத்தியது.

“தேர்தல் வெற்றிக்காக அணு ஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்குத் தள்ளினார் மோடி” – இம்ரான் கான் குற்றச்சாட்டு

இத்தனை வருட சிறைவாசத்தில், அவருடைய மனது அதிர்ச்சி, கோபம், வேதனை, வலி, நம்பிக்கை ஆகிய உணர்வுகளை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு, அந்த உணர்வு போராட்டத்தின் முடிவில், உணர்வற்று இருப்பதையே நிம்மதியாக நினைத்திருக்கக்கூடும். ஒருவேளை அவர் இடத்தில் நான் இருந்திருந்தால், இத்தனை உணர்ச்சிகளையும் எதிர்கொள்ள என்னிடம் மன உறுதி இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் பேரறிவாளன் மட்டுமல்ல, அவரின் தாய் அற்புதம் அம்மாளும் தன் நம்பிக்கையை கொஞ்சம்கூட தளரவிடவில்லை. அதனால்தான், இப்போதுவரை தங்களின் உரிமைப் போராட்டத்தை இருவருமே கைவிடவில்லை. இவர்களின் இந்த உறுதிதான், இன்று இவர்களை நிரபராதிகளாக நிரூபித்துக்கொள்ள உதவியிருக்கிறது, விடுதலை நோக்கியும் நகர்த்தி வருகின்றது.

’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்

முதன்முறையாக விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டபோது, அவருக்கு வயது 19 தான் இருந்திருக்கக்கூடும். புரட்சிகர கருத்து கொண்ட ஒரு துடிப்பான இளைஞனாக இருந்தார் அவர். நம் நாட்டை பொறுத்தவரை முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில், உடனடி தண்டனைதான் பரிந்துரையாக இருக்கின்றதே தவிர, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பெரும்பாலானோர் யோசிப்பதில்லை. இந்த `உடனடி தண்டனை’ என்ற எண்ணம், நிரபராதிகளை குற்றவாளிகளாக மாற்றியமைக்கும் சூழலையே வளர்த்தெடுக்கும். ராஜீவ் கொலை வழக்கிலும் அதுவே நடந்தது. இக்காரணத்தினால்தான், எழுவர் விடுதலையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவை வழங்க, அரசின் முழு செயல்முறையும் கையாளப்பட்டிருக்கிறது.

எழுவர் விடுதலையைத் தடுத்து வைத்திருப்பது அநீதி – ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்த மொத்த விவகாரத்திலும் பேரறிவாளன் நிரபராதி என்பதில் சிறு ஐயம்கூட இல்லை. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றமென்பது, படுகொலைக்கு உடந்தையாக இருத்தல் என்பது கூட முறையான ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டு நிரூபிக்கப்படவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முறையான ஆதாரமாக சமர்ப்பிக்கப்படாத இந்தக் காரணத்தை வைத்துதான், பேரறிவாளன் தடா சட்டத்தின் கீழ் முதன்முறையாக கைது செய்யப்பட்டார். ஆக, நீதிமன்றமே முன்னுக்கு பின் முரனாகவும் விநோதமாகவும்தான் பதிலளித்துள்ளது.

பேரறிவாளனை இந்தக் கொலை வழக்கில் உடந்தை என சொல்ல முக்கிய காரணம், அவர் இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கி கொடுத்தார் என்பதுதான். இதை அவரும் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அதை எதற்காக வாங்க சொன்னார்கள் என்பதோ, அதை வைத்து என்ன செய்வார்கள் என்பதோ அவருக்கு தெரிந்திருக்கவில்லை. பேட்டரிகளை வாங்கினேன் என கூறியபோதே, அதை ஏன் வாங்கினேன் என்றும் தெரியாது என குறிப்பிட்டிருந்திருக்கிறார் பேரறிவாளன். இதை கடந்த 2017 ம் ஆண்டு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் உறுதிபடுத்தியிருந்தார். இதற்கு பின் நடந்தவை, நாம் அறிந்ததே.

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

2017 ம் ஆண்டு இந்தக் கருத்து நீதிமன்றத்தில் கூறப்படும் முன்பே,பேரறிவாளன் தமிழக ஆளுநருக்கு தன் தண்டனையை நீக்குமாறு கருணை மனுவை 2015 – ம் ஆண்டில் அளித்திருந்ததார். ஆனால் ஆளுநர் அப்போதிருந்து இப்போதுவரை அதை ஓயாமல் ஒத்திவைத்துக்கொண்டேதான் இருக்கிறார். இத்தனை வருடங்களில் மூன்று ஆளுநர்கள் மாறிவிட்டார்கள், ஆனால் ஒத்திவைப்பு மட்டும் அப்படியே இருக்கிறது!

இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு, பேரறிவாளன் 2015-ஆம் ஆண்டு தமிழக ஆளுநரிடம் சமர்பித்த கருணை மனு மீது முடிவெடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. அதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 161ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் ஆளுநர் விடுவிப்பார் என எதிர்ப்பார்ப்பும் எழுந்தது. ஆனால், இன்னும் ஆளுநர் இழுத்தடிக்கவே செய்கிறார்.

2020 ம் ஆண்டு, மத்திய அரசும் எழுவர் விடுதலைக்கான முடிவு ஆளுநர் கைகளில்தான் இருக்கிறதென கூறி, பேரறிவாளனை நிரபராதி என சொல்லியது. ஆனாலும் மறுதினமே, ஆளுநரின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியது. அந்த கேள்வி, ஆளுநரின் தாமதத்தை நீட்டிக்கொண்டே போகிறது!

பேரறிவாளன் விடுதலைக்காக ’மிஸ்டு கால்’ இயக்கம் – தலைவர்கள், நடிகர்கள் அழைப்பு

ஆக, பேரறிவாளன் விடுதலையில் சட்டசிக்கல்கள் என்று எதுவுமில்லை, நீதிநெறிமுறைகள் சிக்கல்தான். சட்ட ரீதியாக, பேரறிவாளனை குற்றவாளி என்றவர்களே அவரை நிரபராதி என்று சொல்லிவிட்டாலும்கூட, இப்போது அவர்களால் அவரை விடுவிக்க முடியவில்லை. ஆக, செய்த தவறை திருத்தமுடியாமல், மேலும் மேலும் அதில் கூடுதல் சிக்கல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. `தவறு செய்வது மனித இயல்பு’ என்ற வழக்கெல்லாம், நீதிமன்றங்களுக்கு வரையறுக்கப்படவில்லை என்பதாலேயே, அவர்கள் செய்த தவறை திருத்திக்கொள்ளாமல், சிக்கல் மேல் சிக்கலை உருவாக்குவது சரியாகாதில்லையா!? இவர்கள் இந்த சிக்கல்கள், பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் வதைக்கவே செய்கிறது. அரசு அலுவலகங்களில் கையெழுத்துக்காக காத்திருக்கும் காகிதங்களை போல, பேரறிவாளனின் விடுதலைக்கான மனு இங்குள்ளவர்களின் நாற்காலிகளுக்கு பந்தாடப்பட்டுவருகிறதென்றே சொல்ல வேண்டியுள்ளது.

மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்

அரசின் இந்த மெத்தன போக்கு, அவர்களின் ஆணவமோ என்ற கேள்வியை எழுப்புக்கிறது. நீதித்துறை, அதிகாரத்துவம் – புலனாய்வு அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், அதிலுள்ள யாராக இருந்தாலும், அவர்களுக்கு தங்களின் ஒரு பிழையை ஒப்புக்கொள்வது மிகவும் கடினமாகத் தெரிகிறது. அதனால்தான் தர்க்கரீதியான முடிவை எட்டுவதற்கு அவர்கள் நத்தை வேகத்தில் செயலாற்றுகின்றனரோ என்றெண்ண வேண்டியுள்ளது. இந்த வேகம், பிரச்னையை அதன்போக்கிலேயே விட்டு, எப்போது முடிகிறதோ அப்போது முடியட்டும் என்பது மெத்தன போக்கல்லவா?

(www.thewire.in இணையதளத்தில் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்