Aran Sei

ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி

நீங்கள் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா ? என்று சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் கேட்டிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் அந்தச் சிறுமியைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். மேலும் இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என்று மிரட்டி மீண்டும் மீண்டும் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

இந்த வழக்கின் விசாரணையில் போதுதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். இப்படியொரு கொடுமையான வழக்கில் எப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமைகுறித்து துளியும் சிந்திக்காது. அநீதியையே தீர்வாகக் முன்வைக்கிறார்கள்.

பெண்ணின் நலன்குறித்து சிந்திக்காமல் ஆணாதிக்க மனோபாவத்தில் அதிகாரம் கையில் இருக்கிறது என்ற மமதையில் பெண்ணை ஒரு பொருளாக என்னும் போக்கிற்கு உதாரணம் இது.

பெண்கள் கால்நடையோ, உயிரற்ற பொருளோ இல்லை – ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம்

கடந்த மாதம் மத்திய பிரதேச முதல்வர்  அறிவித்துள்ள (மரியாதை) சமான் என்ற திட்டத்தின் படி  பெண்கள் பாதுகாப்பாக இருக்க வீட்டை விட்டு வேலைக்காக வெளியே சொல்லும்போது காவல் நிலையத்தில் பதிவு செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

கடந்த ஜனவரியில் மும்பை உயர்நீதி மன்றம் ஒரு பெண்ணின் ஆடை அகற்றாமல் அந்தப் பெண்மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் அது குற்றமில்லை என்று கூறுகிறது.

இதே போலப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அங்கன்வாடி பணியாளரைப் பார்க்கச் சென்ற தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் சந்திரமுகி “பெண்கள் இருட்டிய பிறகு வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது, அப்படி செல்வதாக இருந்தால் கணவரோடு செல்ல வேண்டும். ” என்று குறிப்பிடுகிறார்.

இது போன்ற வார்த்தைகள் சுயசிந்தனையற்று நம்மிடமிருந்து வெளிப்பட மிகமுக்கியக் காரணமே. பெண்களைக் குறித்து நாம் கட்டமைத்திருக்கும் போலி தோற்றங்கள் தான். தாய்மை புனிதமானது, பெண் தான் கடவுள் என்று கூறி பெண்ணைப் புனிதப்படுத்தி அதன்முலம் பெண்களைச் சுரண்டுவதும், பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும், பணிவாக இருக்க வேண்டும் என்கிற ஆணாதிக்க சிந்தனை மனநிலை மட்டுமேயாகும்.

“பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இனி உரக்க பேசுவார்கள்” – பிரியா ரமணி

பெண்கள்குறித்த இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு பெண்களின் உரிமைகள்குறித்து   நாம் அனைவரும்   அறிவூட்டப்பட வேண்டும் அதுமட்டுமல்லாது சட்ட வல்லுனர்களும், அரசின் கொள்கை முடிவை எடுப்பவர்களும் பெண் உரிமைகள்குறித்து வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால் பெண்கள்மீதான இந்த ஒடுக்குதல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இங்கு ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? பெண்களை ஒடுக்குவதின் மூலம் நல்ல சமூகத்தைக் கட்டமைத்திட முடியாது என்று முதலில் உணர வேண்டும்.

SOURCE: Elsa Marie D Silva website யில் வெளியான கட்டுரையின் சுருக்கம்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்