மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தை ஒடுக்க கூடாது என்றும் கனடா, அமேரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பல உலக நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர், பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆதரவு
இந்நிலையில், நேற்றைய தினம், டெல்லியைச் சுற்றிய போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியுடன் உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞர் ரிஹானா, “இது குறித்து (விவசாயிகள் போராட்டம்) நாம் ஏன் எதுவும் பேசுவதில்லை?” என்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்ததார்.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
ரிஹானாவை தொடர்ந்து பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், உகாண்டாவைச் சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளரான வனேசா நகாடே, நடிகை, மாடல் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான அமண்டா கெர்னி, அமேரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான ஜேமி மார்கன், இந்தியாவைச் சேர்ந்த ஒன்பது வயது சுற்றுச்சுழல் ஆர்வலரான லிசிப்பிரியா கங்குஜம் ஆகியோர் இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு
பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
உகாண்டாவைச் சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளரான வனேசா நகாடே, ”இந்தியாவில் நடக்கும் விவசாய போராட்டம் குறித்து இப்போது நாம் பேசுவோம். உங்களுக்கு உணவளிக்கும் கைகளை கடிக்காதீர்கள். விவசாயிகள் இல்லையெனில் உணவில்லை. அவர்களின் கோரிக்கைகளை கேளுங்கள். விவசாயிகள் உலகிற்கே உணவளிக்கிறார்கள். அவர்களுக்காக சண்டையிடுங்கள், அவர்களை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் போராட்டம் வெல்லும்” என பல்வேறு பதிவுகளை ட்வீட் செய்துள்ளார்.
Don't bite the hand that feeds you. Protect the FARMERS #FarmersProtest @LicypriyaK
— Vanessa Nakate (@vanessa_vash) February 2, 2021
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரலெழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகை, மாடல் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான அமண்டா கெர்னி, “உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையைப் புரிந்து கொள்ள நீங்கள் இந்தியராகவோ, பஞ்சாபியராகவோ அல்லது தெற்காசியராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை, மனிதாபிமானமே போதுமானது. கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகள், தொழிலாளர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்காக எப்போதும் குரல் கொடுங்கள்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
#humanrights #FarmersProtest https://t.co/AbFzVxKrIS
— Amanda Cerny (@AmandaCerny) February 2, 2021
இந்தியாவைச் சேர்ந்த ஒன்பது வயது சுற்றுச்சுழல் ஆர்வலரான லிசிப்பிரியா கங்குஜம், தன் ட்விட்டர் பக்கத்தில், ”அன்பிற்குரிய நண்பர்களே இந்த குளிர் காலத்தில் நமது லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் தெருக்களில் உறங்குகிறார்கள். உங்களுடைய ஆதரவு அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
Dear friends,
Our millions of poor farmers sleeping in the streets on this cold weather don’t expect anything from you. Just your one tweet of love and supports /solidarity to their cause means a lots to them.Our indian celebrities are get lost!
— Licypriya Kangujam (@LicypriyaK) February 2, 2021
அமேரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான ஜேமி மார்கன், ”உலகம் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பது மிகவும் முக்கியமானது. விவசாயிகள் பருவநிலை நெருக்கடியின் முன்னணியில் உள்ளனர். விவசாயிகள் இல்லாமல், உணவு இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.
It is important that the world stand in solidarity with Indian farmers!
Farmers are on the frontlines of the climate crisis. Without farmers, there is no food.
Please support the #FarmersProtest! #FarmersProtestIndia #IStandWithFarmers #supportfarmerprotest #supportfarmers pic.twitter.com/9YDn2zutcG
— Jamie Margolin (@Jamie_Margolin) February 2, 2021
இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் ஏற்கனவே சர்வதேச கவனத்தை பெற்றிருந்தாலும், தற்போது கூடுதல் கவனத்தையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA…
Sit down you fool, we are not selling our nation like you dummies. https://t.co/OIAD5Pa61a— Kangana Ranaut (@KanganaTeam) February 2, 2021
ரிஹான்னாவின் ட்வீட்டுக்கு பதில் அளித்த பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத், ‘போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள்’ என்றும், ‘அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்’ என்றும் கூறியதோடு, பாடகர் ரிஹானாவை “முட்டாள்” என்று அழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.